May 5, 2010

இந்தோனேஷியாவில் பரவும் பறவைக் காய்ச்சல்.

இந்தோனேஷியாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் அபாயம் தோன்றியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காய்ச்சலினால் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்தோனேஷியாவிலேயே பறவைக் காய்ச்சலினால் 136 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவே உலகில் அதிகளவான தொகை என அறிவிக்கப்பட்டுள்ளது.சுமத்ரா தீவின் பெக்கான்பாரு பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியே இறுதியாக உயிரிழந்துள்ளது.

இதையடுத்து குறித்த சிறுமியின் குடும்பத்தினர் தீவிர சிகிச்சைகளுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதுடன் அவர்களில் சிறுமியில் தாய் அவரது சகோதரன் மற்றும் அயல் வீட்டு சிறுமி ஆகியோர் இந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது இவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் ஏனையோருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: