Sep 19, 2010

கோயில் மஸ்ஜிதின் அடியில் இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்தியமற்றது: நீதிபதி ராஜேந்திர சச்சார் அறிவிப்பு.

டெல்லி,செப்.19:கோயில் மஸ்ஜிதின் அடியில் இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்தியமற்றது என நீதிபதி ராஜேந்திர சச்சார் தெரிவித்துள்ளார். "அது ஒருவேளை நம்பிக்கையின் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது ஏமாற்று வித்தையாகவோ இருக்கலாம்.
என்னவாயினும், மஸ்ஜிதின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை கைப்பற்ற அதுவெல்லாம் சட்டரீதியாக இயலாது. மஸ்ஜித் கோயில் சிதிலங்களின் மீதுதான் கட்டப்பட்டது அல்ல என்பதை நீதிமன்றம் கண்டறிந்தால் முஸ்லிம்களுக்கு அந்த நிலம் திரும்ப வழங்கப்பட்டு அங்கு மஸ்ஜித் நிர்மாணிப்பது உள்ளிட்ட சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்கும்.

அல்லது பாப்ரி மஸ்ஜித் இருந்த நிலத்தில் கோயில் இருந்தது என்ற தீர்ப்பு வரலாம்.ஆனாலும் கூட வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ்ஸின் உரிமைக்கோரல் எடுபடாது. 1992-ஆம் ஆண்டில் வி.ஹெச்.பி-ஆர்.எஸ்.எஸ் அக்கிரமக்காரர்கள் தகர்க்கும் வரை பாப்ரி மஸ்ஜித் 400 வருடங்களாக அங்கு நிலைப் பெற்றிருந்ததாகும். பாப்ரி மஸ்ஜித் நிர்மாணிக்க கோயிலை இடித்திருந்தால்கூட சட்டரீதியாக சங்க்பரிவாருக்கு அந்த நிலத்தின் மீது எவ்வித உரிமையுமில்லை." இவ்வாறு சச்சார் கூறியுள்ளார்.

No comments: