Feb 6, 2015

மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக!?

மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து களமிரங்கும் உச்ச நீதிமன்றம்!
இந்திய மக்கள் நீதிமன்றங்களின் மீதுள்ள நம்பிக்கையை வழுவாக்கும் உச்சநீதிமன்றம்!
உங்களிடம் ஒப்படைத்தால் கங்கை நதியை தூய்மைப்படுத்த் இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்.
கருப்பு பண மீட்பில் மோடி அரசின் கையாளாகா தனத்தை தொடர்ந்து. கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணியையும் உச்சநீதிமன்றமே எடுத்துக்கொண்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது, "கங்கை நதி மக்களின் மத மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டது மட்டுமில்லை. இது, மக்களின் வாழ்வாதாரம். ஆனால், கங்கை நதியின் தற்போதைய நிலைமை கவலை அளிப்பதாக இருக்கிறது. கங்கையை தூய்மைப்படுத்தும் விவகாரத்தில் கடந்த 30 வருடங்களாக உச்சநீதிமன்றம் தலையிட்டும் எந்தவொரு பயனும் ஏற்படவில்லை.
கங்கையில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை தண்டிக்க மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது. இன்னும் உங்களிடம் இந்த வேலையினை ஒப்படைத்தால், மேலும் 50 வருடங்கள் ஆகும். எனவே, இந்தப் பணியை தேசிய பசுமை ஆணையத்திடம் ஒப்படைக்கிறோம். கங்கையை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தேசிய பசுமை ஆணையத்திற்கு முழு சுதந்திரத்தை அளிக்கிறோம்.
அவ்வாறு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகளை நிறுத்தி நடவடிக்கை எடுக்கவும், தேசிய பசுமை ஆணையத்திற்கு உத்தரவிடுகிறோம். மேலும், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு பிறகு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி விசாரணை நடைபெறும். அப்போது நதியில் கழிவுகள் கலப்பதை தடுக்க தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்".
கார்ப்பரேட் பண முதலைகளின் நலன்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையாக இருந்தாலும் சரி அதனை கார்ப்பரேட் மோடி அரசு எடுக்காது.
அது இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கருப்பு பண மீட்பு விவகாரமாக இருந்தாலும் சரி.
இந்துக்கள் புனிதமாக கருதும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டமாக இருந்தாலும் சரி.
இந்தியாவின் 500 ஆண்டு கால வரலாற்றுச் சின்னமான பாபரி மஸ்ஜிதை இடித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவதற்காக பல்லாயிரக்கணக்கான கரசேவைகளை களமிரக்கிய பாஸிஸ பாஜக.
தூய்மை இந்தியா என்ற போலி விளம்பரத்தின் மூலம் பல ஆயிரம் வேண்டும் சில ஆயிரம் தொண்டர்களை களமிரக்கி கங்கையை தூய்மை படுத்தி இருக்கலாமே!
இதிலிருந்தே தெரிகிறது பாஜகவின் அரசியல் எல்லாம் பாகிஸ்தானை வைத்தும், முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரைகளை குத்தி அதன் மூலம் இந்திய மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதுதான்.

3 comments:

Anonymous said...

Dai poi muthalla thamila olunga padi apppuram blogger aarambikkalam


(valuvakkum) - valukkai thalaiya


Unknown said...

எப்போது மாறும் இந்த நிலைமை????
மலர்

Anonymous said...

வெளிநாட்டுகாரனிடம்
இந்தியாவை விற்றுவிட்டு
இந்தியனின் மூளைகளை வெளியேற விட்டுவிட்டு
இந்தியாவில்வாங்கிய கடனுக்கு இருக்கும் மிச்சசொச்ச
இந்தியனை கடனாளி ஆக்கிவிட்டு
இந்தியாவின் முதுகெழும்பு விவசாயத்தை மறந்துவிட்டு
நடிகைக்கும், நடிகனுக்கும்
கேடிகளுக்கும்,கொலைகாரனுக்கும்
சிலை செய்து கோவில் கட்டி
கனவு மட்டும் காணுவோம் இந்தியா வல்லரசு ஆகும் என்று.
‪#‎அதிரை_உபயா‬..