மார்ச் 25: ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது.
கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான தாயரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. எப்படி கம்ப்யூட்டர்களை தயாரித்து விற்று விட்டு, அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும், அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வதும் போன்ற அதே கார்பரேட் கொள்ளைதான் மனித உயிர்களிலும் விளையாடுகிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள்.
பெற்றோர்களே உஷார்! இந்த நாசகார ஜோன்சன் & ஜோன்சன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்! நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்!
14 comments:
என்ன கொடுமை...!
பல பெற்றோர்களுக்கு தெரியாதே...
பலரும் அறிய பகிர்கிறேன்... நன்றி...
வணக்கம் தனபாலன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களும் நன்றி!
அனைத்து நிறுவனங்களும் ஹெமிக்கல்ஸ் பயன்படுத்தியே தயாரிக்கின்றன ஒரு நிறுவனம் மட்டும் இல்லை நீங்கள் ஒரு நிறுவனத்தை பற்றி சொல்வதால் மக்கள் வேறு ஒரு நிறுவனத்தை நாடுவர் அதிலும் இதே கதைதான் அடுத்ததாக சில வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய தயாரிப்புக்களை இது போன்று மட்டம் தட்டி விளம்பரம் செய்தால் அவர்கள் உள்ளே வருவதற்கு வலி கிடைக்கும் என்பதும் உண்மை
இதற்கு தீர்வு காந்திகிராமம் உங்களுக்கு அருகிலே இருக்கின்றது அங்கு தயாராகும் பொருட்கள் தரமாண துணி துவைக்க குளியல் சோப்புகள் எல்லாம் தரமான தயாரிப்புக்கள் நம்ம ஊர் தயாரிப்புக்கள் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
பன்னாட்டு கம்பெனிகளின் போட்டியை சமாளித்து நம்ம ஊர் பொவண்டா போராடிக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியும் அது போல் நம்ம நாட்டு தயாரிப்புகளுக்கு உள்ளூர் தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்த வலியுறுத்துவது இந்தியக் குடிமகனாகிய நம் கடமை சிறிய இந்திய நிறுவனங்களுக்கு நாம் ஆதரவளித்து பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை தடுப்போம் அதற்க்கு முதலில் நாம் இந்தியத் தயாரிப்புகளையே பயன் படுத்துவோம்
நங்கள் காந்திகிராம மார்கோ சோப்பு பயன்படுத்துகின்றோம் மிகவும் அருமையாக உள்ளது
துணி துவைக்க காந்திகிராம சோப்பை பயன்படுத்துகின்றோம்
அங்கு தயாரிக்கப் படும் உணவுப்பொருட்களை நாங்கள் அந்த பக்கம் வரும் பொழுது கட்டாயம் வாங்குவது உண்டு தோழரே
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளதால் உங்களால் முடியும் என்று நம்புகின்றேன் அதை வாங்கி பயன் படுத்தி நண்பர்களுடன் பகிருங்கள் நாளை நாடு உங்களைப் போற்றும்
கெமிக்கல்ஸ் அதிகம் பயன் படுத்தாத வாசனைத் திரவியங்கள் அதிகம் பயன்படுத்தாத தயாரிப்புக்களே நம் உடலுக்கு நல்லது எது நல்ல வாசனையாக கம கம என்று இருக்கின்றதோ அதுவெல்லாம் நமக்கு ஆபத்தானவையே
உள்ளூர் தயாரிப்புக்களை உபயோகித்து பக்க விளைவுகள் இல்லாத ஆரோக்கியம் பெறுங்கள் என்று வாழ்த்துகின்றேன்
பாலசுப்ரமணியன்
இதியன் குரல்
--
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar,
Sembiyam,
Perambur,
Chennai 600019
அன்புடன் வணக்கம் நண்பரே
இந்த கருத்தை எனது முக நூல் பக்கம் வெளி இட அனுமதி தாருங்கள் ..நன்றி
வணக்கம் நண்பரே நலமா....நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.//// சிந்திக்கவும் இணையதளத்தின் செய்திகளை யார் வேண்டுமானாலும் காப்பி செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என்கிற அனுமதியை நாங்கள் இணையதளத்தின் வலது பக்கம் தொடர்புகளுக்கு என்கிற தலைப்பின் கீழ் கொடுத்துள்ளோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
===================================
தொடர்புகளுக்கு:
sinthikkavum@yahoo.com
puthiyathenral@gmail.com
செய்திகள் அனைத்தும் மக்களுக்கே!
காப்பி செய்து பயன்படுத்தலாம்.
அனுமதி பெற தேவையில்லை.
வணக்கம் பல சுப்பரமணியம் நலமா. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
Nalla company nu ethaiyum nanba mudiyavillai... thakavaluku nandri
பலரும் அறிய பகிர்கிறேன்... நன்றி
நன்றி நண்பரே என்னால் முடிந்த வரை இதை மற்றவர்களுடன் பகிர்கிறேன்
எனது உறவினர் குழந்தைக்கு இதனால் அலர்ஜி ஆனதாக சொன்னார்கள் அப்போது உணமைதானா என மிகவும் ஆச்சர்யப்பட்டோம். இந்த செய்தியினை கண்டவுடன் அதிர்ச்சியாகவும் உள்ளது. நன்றி பகிர்விற்கு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
எத்தனை பேர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்ற புள்ளிவிபரம் உள்ளதா?
நான் நம்ப தயாராக இல்லை. உலக அளவில் என்று சொல்லுகிறீர்கள் வேறு நாடுகளில் வந்த ஆதாரங்களையும் தர முடியுமா?
கோடியில் ஒருவருக்கு பற்பசை அலார்ஜி இருப்பதால் நான் பற்பசை பாவிப்பத்தை நிறுத்த போவது இல்லை..
// இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.//
இதை குழந்தைகள் குடித்தால் ஆபத்து என்பது உண்மையே. இதை மட்டுமல்ல எந்தவொரு குழந்தைகளுக்கான சோப் குடித்தாலும் ஆபத்தே. அதற்கு இந்தியன் உற்பதிப்பொருள் வெளிநாட்டு உற்பத்தி பொருள் என்ற வேறுபாடு இல்லை. அதனால் தான் அந்த எச்சாரிகை வாசகம் அதில் பொறிக்கப்பட்டு உள்ளது, குளிக்கும் பொருளை குளிக்க பயன்படுத்துவோம் குடிக்கும் பொருளை குடிக்க பயன்படுத்துவோம்.
ஒரு மிட்டாய் சுற்ற பயன்பட்டு இருக்கும் உறை கூட அந்த எச்சரிக்கை வாசகம் தாங்கி உள்ளது. அதனால் அதை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத ????
Post a Comment