Mar 22, 2013

தமிழ்நாட்டை குறிவைக்கும் சிபிஐ!

மார்ச் 24: தமிழ்நாட்டில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த போராட்டங்களை வலுவிழக்க செய்ய தமிழ்நாட்டை நோக்கி சிபிஐ படையேடுத்திருக்கிறது.     

திமுகவை பயமுறுத்த ஸ்டாலின் மற்றும் அழகிரி வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. இப்படி அதிரடியாக நடத்தப்பட்ட  சோதனைகளால் மற்றைய அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்தில் முழு மூச்சாக ஈடுபட தயங்கும் என்கிற நிலையை உருவாக்க  காங்கிரஸ் நடத்தும்  கேவலமாக அரசியல் போருக்கித்தனமே இந்த ரைடுகள்.

தமிழர்கள் தங்களது உரிமைகளை கேட்க கூடாது, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக போராட கூடாது, சுதந்திரமாக அரசியல் களத்தில் சிந்திக்க கூடாது என்றுமே மத்திய அதிகார ஆட்சியாளர்களின் அடிமையாக இருக்க வேண்டும். மீறி சுதந்திரமாக செயல்படவோ, தங்களது எதிர்ப்புகளை ஜனநாயக ரீதியில் காட்ட முற்பட்டாலோ மத்திய ஆட்சியாளர்களின் ஏவல் நாய்களாக சிபிஐ தமிழ் அரசியல்வாதிகள் மீது பாயும். தமிழர்களை கடித்து குதறும்.

எந்த அரசியல்வாதிகள் ஊழல் செய்யவில்லை! தேசிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் யோக்கியமானவர்களா? மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் அந்தனை கட்சிகளும் யோக்கியமானவர்களா? ஊழலில் இந்திய ஒட்டு பொறுக்கி கட்சிகள் அனைத்தும் மூழ்கி கிடக்கிறது. எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான். ஏதோ இப்பொழுதுதான் இந்த ஊழல்கள் எல்லாம் இவர்கள் கண்ணுக்கு தெரிவது போல ரைடுகளில்  இறங்கி இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் அரசியல் தொடங்கி  அதிகாரவர்க்கம் வரை ஊழல் காட்டாற்று வெள்ளம் போல் பெருகி ஓடுகிறது.

இந்த பயமுறுத்தல்கள் அரசியல் கட்சிகளிடம் வேண்டுமானால் செல்லுபடியாகலாம் ஆனால் மாணவர் எழுச்சிகளை ஒன்றும் செய்ய முடியாது. தமிழர்களுக்கு எதிராக இவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் தனி தமிழ் நாடு சிந்தனைகளுக்கு இடும் உரமே அன்றிவேறில்லை.
  
*மலர் விழி*

No comments: