Mar 19, 2013

கருணாநிதி ஹீரோவா? சீரோவா?

மார்ச் 20: மத்திய அரசு கூட்டணியில் இருந்து திமுக தனது ஆதரவை விளக்கி கொண்டது. இதுதான் இன்றைய இந்தியாவின் அனைத்து பத்திரிக்கைகளிலும் முக்கிய செய்தி

சரிந்து கிடந்த கருணாநிதியின் ரேட்டிங் கூடி விட்டது, கருணாநிதி ஹீரோ ஆக்கப்பட்டுள்ளார். கருணாநிதி உண்மையிலேயே ஹீரோவா? கருணாநிதி செய்தது சரியா? அவர் இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதால் தமிழர்களுக்கு நன்மையா? அல்லது அவருக்கு நன்மையா?

தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு, கருணாநிதி, இந்த முடிவுக்கு வரவில்லை. இச்சந்தர்ப்பத்தில் வாபஸ் வாங்காவிட்டால் தேர்தலில் ஒரு சீட்டு கூட பெற முடியாத அளவுக்கு திமுக துடைத்தெறியப்படுமோ?  என்கிற பயமே இதற்க்கு காரணம். மற்றபடி தமிழர்கள் மீது கொண்ட பாசத்தினால் அல்ல.

இவர் உண்மையிலேயே ஆதரவை விளக்கி கொள்வதாக இருந்திருந்தால்,   2009 இறுதி கட்ட போரில் கண்முன்னே  தமிழர்கள் படுகொலை செய்யப்படும் பொழுது செய்திருக்க வேண்டும். இப்பொழுது செய்திருப்பதால் எந்த பயனும் இல்லை. இது திமுகவின் ஓட்டு வங்கியை தக்க வைத்து கொள்ள கருணாநிதிக்கு உதவுமே தவிர தமிழர்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது

இதுநாள் வரை இந்த ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகளை நம்பி வந்த  தமிழர்கள் இப்பொழுதுதான் உணர்வு பெற்றுள்ளார்கள். தமிழகம் கொந்தளிக்கிறது, மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞ்சர்கள், உழைக்கும் மக்கள், மீனவர்கள், சமூக நல அமைப்புகள் என்று எல்லோரும் ஓரணியில் திரண்டு போராடுகிறார்கள். இந்த போராட்டங்களின் பலன்களை அறுவடைய செய்யவே கருணாநிதி முயற்சிக்கிறார். இனி தலைகீழ் நின்றாலும் கருணாநிதி ஹீரோவாக முடியாது.

இந்த போராட்டங்கள் இந்திய தேசபக்திமாயை தமிழர்களிடம் இருந்து அகற்ற உதவியாக இருக்கிறது. இந்தியாவின் துரோகத்தை தமிழர்களுக்கு புரிந்து உதவி செய்திருக்கிறது. போரை முன்னின்று நடத்திய இந்தியா நமக்கு தேவை இல்லை என்கிற மனோநிலைக்கு தமிழர்களை கொண்டு வந்திருக்கிறது. இதேவே தமிழர்களுக்கு கிடைத்த மிகபெரிய வெற்றி. இனி, தனி தமிழ் ஈழம் அமைவது என்பது தாய் தமிழகத்தின் வழியாக சாத்தியமே அன்றி வேறு வழி இல்லை.

தாய் தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரிந்து தனி நாடாகி விட்டால். ஒரு மணி நேரத்திற்குள் சிங்களம் வீழும்! ஈழம் மலரும்!.

2 comments:

சாய்ரோஸ் said...

கருணாநிதி நிச்சயம் இனி ஹீரோ ஆகமுடியாது.. அது உண்மைதான். அதேபோல தனித்தமிழ்நாடு என்பது இப்போதைக்கு விதைக்கப்படாத சாத்தியமில்லாத விதை. அது விதைக்கப்பட்டு நீரூற்றப்பட்டு வேர் விட்டு முளைப்பதற்கு மிகப்பெரிய மக்கள் சக்தி தேவை. அது இனி வரும் காலங்களில் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே. எனினும் தமிழர்கள் தங்களுக்கான விடியல் தங்களிடமே உள்ளது என்று அரசியல் நாடகங்களை புறந்தள்ளி மக்கள் சக்தியாய் போராடத்துவங்கியிருப்பது நிச்சயம் ஆரோக்கியமான சூழ்நிலையே என்பதை மறுப்பதற்கில்லை.

Anonymous said...

மூன்று மணி நேர போர் நிறுத்த உண்ணாவிரதம், 2009 ஆதரவு வாபஸ், மழை விட்டவுடனும் தூவானம் தீரவில்லை, முதிய பார்வதியம்மாள் விரட்டியடிப்பு