Jan 20, 2013

தமிழன் என்றால் கேவலமா? இந்தியன் என்றால் பாவமா?

Jan 20: 'தமிழக மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்ற, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க, மத்திய அரசு, சிறப்பு கோர்ட் அமைக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, தமிழக மீனவர்களை, கடற்கொள்ளையர்கள் என நினைத்து சுட்டுக் கொன்ற, இத்தாலிய கப்பலின்  பாதுகாவலர்களுக்கு  கொல்லம் கோர்ட் அளித்த ஜாமின் உத்தரவுப்படி அவர்கள் கொச்சியில் தங்கியிருந்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, இருவரும் டில்லி சென்றனர். அவர்களுடன் இத்தாலி தூதரும், இத்தாலி நாட்டு பிரதிநிதிகளும் சென்றனர்.

சிந்திக்கவும்; இந்த கொடுமைகளை எல்லாம் கேட்பார் யாரும் இல்லையா! இந்த கேவலங்கள் எல்லாம் நடந்தேறும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும். அப்பாவி மீனவர்களை சுட்டு கொன்ற கொலையாளிகளுக்கு உடனே ஜாமீன், அவர்களது வழக்கை விரைந்து முடித்து அவர்களை நல்லவிதமாக திருப்பி அனுப்ப சிறப்பு கோர்ட் ரொம்ப நல்லா இருக்குயா உங்கள் நீதி.

போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தில் 1984 ஆம் ஆண்டு விஷவாயு கசிவு ஏற்ப்பட்டது. இதில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.  விபத்துக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சேர்மன் (அமெரிக்காவை சார்ந்த) வாரன் ஆண்டர்சனை இந்தியா தேசிய கீதம் முழங்க ராஜ மரியாதையோடு வழியனுப்பி  வைத்தது.

ஆனால், இதை மாதிரி வேற எந்த நாட்டிலும் இந்தியர்கள் விபத்து, கொலை, கொள்ளை போன்ற விசயங்களில் ஈடுபட்டால் அவர்களை இப்படி மரியாதையாக திருப்பி அனுப்புவது, ஜாமீன் கொடுத்து சிறப்பு நீதி மன்றத்தில் விசாரிப்பார்களா? அமெரிக்காவிலோ, சவூதி அரேபியாவிலோ இப்படி ஒருவன் சுட்டு கொன்று விட்டு ஜாமீனில் வெளியே இருக்க முடியுமா? இல்லை சிறப்பு கோர்ட்டுகள்தான் அமைப்பார்களா?

இந்தியனின் உயிருக்கு மதிப்பில்லை, நாட்டின் குடிமக்களை பாதுகாக்க முடியாத, நீதி செலுத்த முடியாத, அவர்களது உயிர்களை கிள்ளு கீரைகளாக நினைக்கும் அரசும், அரசு இயந்திரங்களும் நமக்கு தேவையா? இத்தாலிய கொலை குற்றவாளிகளுடன் அந்நாட்டு தூதரும், பிரதிநிதிகளும் கூடவே போகிறார்கள். ஆனால் நமது நாட்டின் வெளிநாட்டு தூதர்களோ இந்தியர்களுக்கு தேவைப்படும் அடிப்படை உதவிகளை கூட செய்வதில்லை.

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள், இந்திய தூதரகங்களை பாஸ்போர்ட் புதுபிப்பது முதல் பல்வேறு காரியங்களுக்கு அணுகினால் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இந்திய தூதரகத்தை போல் ஒரு கேடு கெட்ட தூதரக சேவை உலகில் எங்கும் இல்லை. இத்தாலி தூதர்களை பார்த்து திருந்துவார்களா? இந்த கேடுகெட்ட ஜென்மங்கள், அல்லது இவர்கள் மீது நடவடிக்கைதான் எடுக்குமா? மானம் கெட்ட அரசுகள்? 

No comments: