Aug 9, 2012

யார் வந்தேறி! அத்வானியா? மண்ணின் மைந்தர்களா?

புதுடெல்லி: அஸ்ஸாமில் நடைபெற்ற இனக்கலவரம் தொடர்பாக விசாரணைச் செய்யும் பொறுப்பு  சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் வன்முறைக்கு வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களே காரணம் என்று கேவலமான கருத்தை முன்வைத்து பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி ஒத்தி வைப்பு தீர்மானத்தின் மீது பேசினார். அவரது  ஒத்திவைப்புத் தீர்மானம் குரல் வாக்கு மூலம் தோற்கடிக்கப்பட்டது.

அசாம் கே.எல்.ஒ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 முஸ்லிம்கள் கொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரச்சனைகள் உருவானதாக மத்திய உள்துறை அமைச்சர் விளக்கமளித்தார். மீண்டும் பிரச்சனை உருவானால் தலையிட  ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  
இதுவரை 73 பேர் அஸ்ஸாம் கலவரத்தில் பலியாகியுள்ளனர். 50 பேருக்கு காயமேற்பட்டுள்ளது. இரு சமுதாய தலைவர்களிடமும், அமைதியை ஏற்படுத்த தலையிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “அஸ்ஸாமில் கலவரம் நடக்கும்பொழுது மாநில அரசு தூங்கிக் கொண்டிருந்தது. 

முஸ்லிம் சமுதாயத்தின் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போடோ கிராமங்களில் ஒரு வீடு கூட தாக்கப்படவில்லை. அஸ்ஸாமில் வசிப்பவர்கள் இந்தியர்களே. அவர்களை வெளிநாட்டவர்கள் என்று அழைப்பது சரியல்ல” என்று CPM பசுதேவ் ஆச்சார்யா தெரிவித்தார்.

அத்வானியின் கருத்தை லாலுபிரசாத் யாதவும் கடுமையாக விமர்சித்தார். “லுங்கி கட்டியதாலோ, முஸ்லிம் என்றாலோ யாரும் பங்களாதேசத்தவர்கள் ஆகமாட்டார்கள்” என்று லாலு காட்டமாக தெரிவித்தார். அத்வானியின் கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் கடுமையாக எதிர்த்தனர். போடோக்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்ய ஆயுதப் படையை அஸ்ஸாமில் நியமிக்கவேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் கோரிக்கை எழுப்பினர்.
*மலர்விழி*

2 comments:

புனிதப்போராளி said...

அடி செருப்பால வந்தேறிக்கு பிறந்த பயபுள்ள அத்வானி கழுதைய,,

Unknown said...

Miga taireyam mikka maa medai advani.avarai kutram solbavar than pavam..........