Mar 14, 2012

நீலிக்கண்ணீரா? நிஜக்கண்ணீரா?

March 15: ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானத் தீர்மானம் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது (Promoting Reconciliation and Accountability in Sri Lanka). 

இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் இயக்கங்களாலும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளாலும் வலியுறுத்தப்படுகிறது. 

உலகத் தமிழர்கள் இந்த அவைத் தீர்மானத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய ஆதரவு குரல் நேரடியாக ஐ.நா. மனித உரிமை குழுவில் வெளிப்பட வாய்ப்பு இல்லை.  ஆனால், மறுபுறம் இலங்கை அரசாங்கம் ஐ.நா.வில் ஓர் உறுப்பு நாடு என்கிற அடிப்படையில் தனது தூதுக்குழுவினரை நேரடியாக அனுப்பி ஐ.நா.அவையில் தீவிரப் பிரச்சாரத்தை செய்துவருகிறது. 

இதற்கு பதிலடி தரும் விதமாக பசுமைத் தாயகம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் செயலாளர் என்கிற முறையில் அந்த முயற்சியை நான் மேற்கொண்டுள்ளேன்.  ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டங்களில்  அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்அந்த அடிப்படையில்  ஐ.நா. மனித உரிமைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பாக இலங்கைக்கு எதிராக அமேரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரித்து  இலங்கைத் தமிழ் அமைப்பினர் பங்கேற்பதே பொறுத்தமானதாக என்று முடிவு செய்தோம்.

அதனடிப்படையில் உலகத் தமிழர் பேரவையின் மக்கள் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன், அமெரிக்கத் தமிழ் அரசியற் பேரவை அமைப்பின் சார்பில் ஸ்டாண் ஃபோர்ட் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் மருத்துவர் யெசோதா நற்குணம், யேல் சட்டப்பல்கலைக் கழகத்தின் தாஷா மனோரஞ்சன் (PEARL), தமயந்தி ராஜேந்திரன், இலங்கை அரசு மீது அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்குத் தொடுத்துள்ள அட்டர்னி அலி பைதூன் (SPEAK) - ஆகிய ஐந்து பிரதிநிதிகள் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக கலந்து கொண்டுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் உறுப்பினர்களை நேரில் சந்தித்து அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும் பணியில் பசுமைத் தாயகம் சார்பான பிரதிநிதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசு நடத்திய துணைக்கூட்டத்திலும் இவர்கள் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிரான வாதங்களை பதிவு செய்தனர். அந்த வகையில் ஐ.நா. அவையில் இலங்கை அரசுக்கு எதிரான நேரடிப் பிரச்சாரத்தை பசுமைத் தாயகம் அமைப்பு  மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
   
நன்றி: பசுமை பக்கங்கள் அருள்.
********************************************************************
கருணாநிதி, ஜெயலலிதா மாதிரி நீலி கண்ணீர் வடிக்காமல் அறிக்கையுத்தம், கடித போர் நடத்தாமல் உருப்படியான ஒரு காரியத்தை நகர்த்தியுள்ள பசுமைத்தாயகம் அமைப்பிற்கு நமது நன்றி. 
அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல். 

13 comments:

Unknown said...

இந்தியா போன்ற வளரும் வல்லரசு நாடுகளின் ஆதிக்கம் நிச்சயம் அமெரிக்காவுக்கு தேவை ஆனால் இந்தியாவோ????????????

Joseph George said...

ஏதோ அவரால் முடிந்ததை செய்கிறார். இவர் போன்றோரை ஊக்குவிக்க வேண்டும். இலங்கையில் மேலும் அநீதி நடப்பதை குறைக்க வேண்டும் - தமிழ் தெரியாதவன்

Anonymous said...

pasumai ththayagaththirkku nandri
surendran

அருள் said...

வெளியிட்டமைக்கு நன்றி.

நான் குறிப்பிட்டுள்ள ஈழத்தமிழர் அமைப்புகள் பன்னாட்டு அரங்கில் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர். அவர்கள் பசுமைத்தாயகம் சார்பில் ஐ.நா. மனித உரிமைக் குழு அரங்கிற்குள் நுழைவதற்கான அனுமதியை மட்டுமே நான் பெற்றுத்தந்துள்ளேன்.

இதற்கான உழைப்பு அல்லது செலவு என்பது என் சார்பாக எதுவும் இல்லை. அவர்கள் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் என்று ஐ.நா. அவைக்கு நான் கடிதம் அளித்துள்ளேன். இதனை முறைப்படி ஐ.நா'வின் விதிமுறைகளின் பதிவு செய்து அவர்கள் அனுமதி அட்டை பெற உதவியுள்ளேன்.

இதைத்தான் நான் "'இராமர் பாலம் கட்ட அணில் உதவிய' கதைபோல" என்று குறிப்பிட்டேன். எனவே, பாராட்டுகள் எனக்கல்ல. களத்தில் நிற்பவர்களுக்கே சேரும்.

நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் எஸ்தர் நலமா... இந்த போற்குற்றத்தின் முதல் குற்றவாளி இந்தியாதான்.... இந்தியாதான் இந்த போரை முன்னின்று நடத்தியது.

PUTHIYATHENRAL said...

வணக்கம் ஜோசப் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் அருள் நலமா இருக்கீங்களா... உங்களது பணி அளப்பரியதே அதனாலேயே இந்த செய்தியை சிந்திக்கவும் இணையத்தில் வெளியிட்டோம். இதன் மூலம் இந்த செய்தி மேலும் நிறைய மக்களை சென்றடையும். அதிகாரத்தில் இல்லாத உங்களை போன்ற சாதாரண மக்களால் இது போன்ற ஒரு அளப்பரிய பணியை செய்ய முடியும் போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள முன்னாள், இந்நாள் முதல்வர்களால் எதுவும் செய்ய முடியாதா என்ன? சும்மா அறிக்கை யூத்தம் நடத்திக்கொண்டு நீலி கண்ணீர் வடிக்கின்றனர். அதனாலேயே இந்த பதிவுக்கு நிஜ கண்ணீரா? நீலி கண்ணீரா என்று ஒரு தலைப்பை வைக்க வேண்டியதாக போனது. ஈழ மக்களின் துயரங்களை, வலிகளை நிஜமாக எழுதவும், பேசவும், போராடவும் வேண்டும் என்பதே நமது எண்ணம்.

ஆனால் நமது அரசியல் பொறுக்கிகள் நாடக நாடகர்கள் போல் வேஷமிட்டு நடித்து நீலி கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களின் உண்மை முகத்தை தோலுரிக்கவும், உங்களை போன்ற நல்ல இதயங்கள் தமிழர் நலனில் அக்கறையோடு செய்யும் காரியங்களை செய்தியாக வெளியிட்டு அந்த செயலுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று எண்ணினோம் அதனால்தான் இந்த பதிவு. பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக சிந்திக்கவும் தொடர்ந்து ஒலிக்கும். எல்லாவிதமான அநீதிகளுக்கும், அரசு பயங்கரவாதத்தையும் சிந்திக்கவும் தைரியமாக வெளிக்கொண்டுவரும். அது தான் உண்மையான பத்திரிக்கை தர்மம்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்களும் நன்றி தோழரே.

Seeni said...

nalla muyarchi!

ராஜேஷ் படையாண்டவர்... said...

இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், முன்பு இருந்த கருங்காலி கருணா போன்றோரின் கபடநாடகங்களை தோலுரித்துக்காட்டி நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு நிச்சியமாக நீதி கிடைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கும் உலகத்தமிழர்களின் நம்பிக்கைக்கு வித்தாக அமையும் பசுமைத்தாயகம் அமைப்பு மேற்கொண்ட இந்த முயற்சி. அண்ணன் அருள் அவர்களுக்கு நன்றி ...

எஸ்.எஸ்.ஆனந்தன் said...

மிகப்பெரிய விஷயத்தை செய்துள்ள ஆசிரியர் பசுமை தாயகம் அருள் அவர்களுக்கு என் நன்றியை உரித்தாகி கொள்கிறேன்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் ஆனந்தன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

ஜேபி said...

அருள் அண்ணா உங்களின் உயரிய சிந்தனைகளுக்கும் சமுதாய பற்றுக்கும் கிடைத்த வெற்றியே இந்த அங்கீகாரம்...இதை கொண்டு நமது இலங்கை தமிழ் பிரதிநிதிகள் நம்முடைய வாதத்தை முன்னெடுத்து சென்று இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த தமிழ் மண்ணில் அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க ,,,அ.தி.மு.க வின் தலைமை தமிழ் ஈழம், மற்றும் தமிழ்நாடு மக்களின் வாழ்க்கையை அழித்தொழித்து கொண்டிருக்கும் உலக தமிழ் பேசும் மக்களின் இலங்கைக்கு அடுத்து இருக்கும் முதல் எதிரியான இந்திய நாட்டின் பிரதமருக்கு வெறும் வெற்று கடித்ததை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இதுபோன்று ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து உலக அரங்கில் நம்முடைய உள்ளக்குமுறலை ஒலிக்கசெயதமைக்கு உங்களுக்கு எனது இருகரம் கூப்பி நன்றி செலுத்துகிறேன். இருப்பினும் இந்த அரங்கில் நீங்களும் கலந்துகொண்டிருக்க வேண்டும்...ஏனெனில் இன்று தங்களது உரிமையை, உடைமையை, தமது வாழ்வினை இழந்து நிற்கும் நமது தொப்புள் கொடி உறவான மீதமிருக்கும் தமிழீழ மக்கள் இன்றாவது ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவன் நமக்காக உலக அரங்கில் பேசுகிறானே என்ற சிறு சந்தோசம் ஏற்பட்டிருக்கும்...இன்னும் ஒரு வாரம் நடக்கவிருக்கும் இந்த கூட்டத்தில் உங்களால் கலந்துகொள்வதர்க்கான சூழல் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று எதிபார்க்கும்..... எமது தமிழீழ மக்களுக்காக எமது தமிழ் உறவுகளுக்காக தன்னால் எதையும் செய்ய முடியாமல் வெட்கித்தலைகுனியும் ஜேபி சத்ரியன்...

Latest Tamil Cinema News said...

நன்றி.