Mar 4, 2012

அறியாமையின் உச்சத்தில் காயல்பட்டினம்!

March 5: தூத்துக்குடி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு ஊர்தான் காயல்பட்டினம்.

இது படிப்பறிவு பெற்ற மக்களை, பெரும் செல்வந்தர்களை, தொழில் அதிபர்களை கொண்ட ஒரு ஊர். இவர்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு வியாபாரங்கள் மற்றும் வேலைகளில் பரவிக்கிடந்து அளப்பரிய அந்நிய செலவாணியை இந்தியாவுக்கு கொண்டு  வருபவர்கள்.

ஒரு காலத்தில் இந்த ஊரில் வாழ்ந்த அறிஞர்கள் மக்கள் பணிகளில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். அப்படிப்பாட்ட ஊரில் இருந்து சிலர்  நமது விஞ்சான வடிவேலு அபுல் கலாமின் தம்பிகள் ஆகி கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர்.

அபுல்கலாம் கூடங்குளம் மக்களுக்கு 500 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ மனை, அடுக்குமாடி பசுமை வீடுகள், இன்டர்நெட்டு, பிராடு பேண்டு என்று தேர்தல் வாக்குறுதியை விட கேவலமாக வாக்குறுதிகளை அள்ளி விசினார். ஆனால் இதையெல்லாம்  ஏனோ போபாலில் விசவாய்வு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஜனாதிபதியாக இருந்தும்  வழங்கவில்லை.  அணு குண்டையும் அதே நேரம் குழந்தைகளையும் நேசிக்கும் ஒரே அதிசய விஞ்சானியின் தம்பிகளாக காயல்பட்டினம் மக்களில் சிலர் மாறி கூடங்குளம் அணு உலை வேண்டும் என்ற போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று காயல்பட்டினம்  முஸ்லிம் லீக் கட்சி ( இவர்கள்தான் நாக்பூரில் பிஜேபிக்கு பஞ்சாயத்து தேர்தலில் ஆதரவு கொடுத்தவர்கள்)  கூட்டிய கூட்டத்தில் காயல்பட்டினத்தின் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள்,  குறிப்பாக மனிதநேய மக்கள் கட்சி, SDPI ஆகியவற்றின் பிரதிநிதிகளும்  கலந்து கொண்டார்கள். வேடிக்கை என்னவென்றால் இதில் பிஜேபியும் கலந்து கொண்டது. இந்த கூட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்றும் அதற்காக ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் வருகிற மார்ச் 6  தேதி நடத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழக அளவில் உள்ள எந்த கட்சிகளோ, அமைப்புகளோ இந்த ஊரில் மட்டும் தங்களது வீரியத்தை இழந்து விடும் ஒரு அவல நிலைமை தற்போது நிலவி வருகிறது. மாநில அளவிலான மனித நீதி மக்கள் கட்சி, மத்திய அளவிலான SDPI கட்சி, போன்றவற்றின் தலைவர்களும், முக்கிய பொறுப்பாளிகளும் அணு உலை என்பது ஆபத்து என்பதை உணர்ந்துள்ளனர்.  SDPI கட்சியின் மாநிலத்தலைவர் தேகலான் பாக்கவி கூடங்குளம் அணு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர். தங்கள் கட்சி கூடங்குளம் அணு மின் நிலையத்தை தொடர்ந்து  கடுமையாக எதிர்க்கும் என்று பல கூட்டங்களில் தெரிவித்துள்ளார்.

அதுபோல் மனித நீதி கட்சியின் தலைவரும் ராமநாதபுர எம்.எல்.எ. வுமான ஜாவாஹிருல்லா கூடங்குளம் அணு உலை குறித்தும் அதன் தீமைகள் குறித்தும் கூடங்குளம் உண்ணாவிரத போராட்ட பந்தலிலேயே பேசினார். மேலும் அதனை தங்களது கட்சியும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் கடுமையாக எதிர்ப்பதாக குரல் கொடுத்தார். நிலைமை இப்படி இருக்க காயல்பாடினத்தை சார்ந்த இந்த கட்சிகளின் கிளைகள் மட்டும் தலைமையின் கருத்து மாறுபட்டு தங்கள் ஊர் என்கிற ஒரு குறுகிய மாயையில் அணு உலையை திறக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளனர். ஹிந்து முன்னணியின் குரலாக ஒலிக்கும் முஸ்லிம் லீக்குக்கு இவர்கள் துணை போயி இருக்கிறார்கள்.

இதுபோல் இவர்கள் செய்யும் காரியம்  காயல்பட்டினத்து மொத்த மக்களையும் சுயநலம் கொண்டவர்களாக உலகுக்கு காட்டும் ஒரு விசயமாகும்.  இந்த கட்சிகள், சங்கங்கள் இந்த  நாசகார அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை ஆனால் அதை ஆதரித்து குரல் எழுப்புவதே இங்கு கண்டனத்துக்கு உரியது. இதே காயல்பட்டினம் மக்கள்தான் dcw என்கிற தாரங்கதார கெமிக்கல் வொர்க்ஸ் என்கிற நிறுவனத்தை கடுமையாக் எதிர்த்தார்கள். இதனால் தங்கள் ஊருக்கு பாதிப்பு உண்டாகும் என்று சொல்லி  உலகம் முழுவதும் வாழும் காயல்பட்டினம் மக்களை கொண்டு அங்குள்ள இந்திய தூதரகங்களில் மனுக்களை கொடுக்க செய்தார்கள்.

இச்செயலை  நாமும் வரவேற்கிறோம். ஆனால் அதை விட மோசமான ஒன்றுதான் அணு உலை. மேலும் அணு மின் நிலைய எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர்கள் காயல்பட்டினத்திற்கு வசூலுக்காக வந்த போது ஓடக்கரை ஹிந்து முன்னணியை சேர்ந்த சுகு என்கிற சுகுமாரன் அவர்களை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த ஓடக்கரை சுகுதான் காயால்பட்டினத்து மக்களுக்கு பல வழிகளில் கேடுகளையும், துயரங்களையும் ஏற்படுத்தியவர். பல சமயங்களில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில்  காயல்பட்டினத்தில் மதகலவரம் உண்டாக்கியவர் என்று நம்பாபடுபவர். இப்படி இருக்க வசூலுக்கு வந்த அப்பாவி கூடங்குளம் மக்களை இந்த சுகு தாக்கும்போது காயல்பட்டினம் மக்களில் பலர் வேடிக்கை பார்த்துள்ளனர்.

நமக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக நாசகார திட்டம் என்று தெளிவாக தெரிந்த ஒரு திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கலாமா? இதை நியாய உள்ளம் கொண்ட காயல்பட்டினம் மக்கள் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான பிரச்சாரங்கள் முடிக்கி விடப்பட வேண்டும். மனித நீதி மக்கள் கட்சி, மற்றும் SDPI  போன்ற கட்சிகளின் மாநில தலைவர்கள் உடனே சம்மந்தபட்ட காயல்பட்டின கிளை நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாது அணு உலைக்கு எதிரான போராட்டங்களை காயல்பட்டினத்தில் தெரு முனை பிரச்சாரங்கள், மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் முடுக்கிவிடப்பட வேண்டும். நல்ல விசயங்களுக்கு முன்னோடிகளாக திகழும் காயல்பட்டினம் மக்கள் இதை செய்வார்கள் என்று நம்புவோம்.

                     மின்னஞ்சல் வழியாக: அபூ கதீஜா: குலசேகரன்பட்டினம்.

அன்புள்ள வாசகர்களுக்கு மின்னஞ்சல் வழியாக வந்த இந்த செய்தி கவலை அளிக்கிறது. இந்த பதிவை படிக்கும் அன்பர்கள் தயவு செய்து சிந்திக்கவும் இணையத்தின் வலது பக்கம் இணைக்கப்பட்டுள்ள தோழர் முத்து கிருஷ்ணன், மற்றும் கோவை பாமரன், கூடன் குளம் சிறுமி ஆகியோரின் வீடியோக்களை தவறாது பார்க்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன். அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக சிந்திக்கவும் தொடர்ந்து முழங்கும்.
                                            நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

25 comments:

Anonymous said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

Seeni said...

nalla pathivu !

sdpi /mmk!
thalaivarkalidam neengal
karuthu kettu exhuthinaal innum
kalanthu kndirunthaal avatkal
meethu nadavafikkai eduppaangale!

VANJOOR said...

இப்பதிவை நான் தமிழ்மணத்தில் இணைத்தேன்.

புதியதென்றலின் கட்டணச்சேவை தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் தோன்றவில்லை.

இருதயம் said...

நாட்டுப்பற்று மிக்க காயல் பட்டினம் மக்களுக்கு எனது வணக்கம் ... போலிகளின் வித்தையை தடுத்த இவர்கள் செய்கை நமக்கு எல்லாம் ஒரு எழுச்சி ... தங்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே

Kayal Shams said...

கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று காயல்பட்டினம் முஸ்லிம் லீக் கட்சி கூட்டிய கூட்டத்தில் காயல்பட்டினத்தின் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள், குறிப்பாக மனிதநேய மக்கள் கட்சி, SDPI ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

அனால் SDPI ஐ சார்பாக கலந்துகொண்டது ஒரு நபர் என்றும் அவர் மின்வெட்டு குறித்த தீர்மானங்களுக்கு ஆதரவு கொடுத்தார் மேலும் கூடங்குளம் திறக்கும் விசயத்தில் ஆதரவு இல்லை என்று சொன்னதாக பரவலாக பேச்சு எழுகிறது .
உண்மை அறியாமல் செய்திகள் பரப்பப்படுவது தேவை அற்ற கருத்து வேறு பாட்டிற்கு வழி வைக்கும் .

ஆகவே அன்பிற்குரிய அபூ காதீஜா நீங்கள் கொஞ்சம் நன்றாக விசாரித்து மறுப்பு எழுதுங்கள் please .......

PUTHIYATHENRAL said...

//அனால் SDPI ஐ சார்பாக கலந்துகொண்டது ஒரு நபர் என்றும் அவர் மின்வெட்டு குறித்த தீர்மானங்களுக்கு ஆதரவு கொடுத்தார் மேலும் கூடங்குளம் திறக்கும் விசயத்தில் ஆதரவு இல்லை என்று சொன்னதாக பரவலாக பேச்சு எழுகிறது//

தோழர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. சிந்திக்கவும் இணையத்திற்கு மின் அஞ்சல் வழியாக அபூ கதிஜா என்பவர் எழுதியிருந்த பதிவே இது. அவர் அதற்க்கு ஆதாரமாக காயல் பட்டினத்து இனைய தளங்களில் வெளிவந்த செய்திகளை ஆதாரமாக காட்டி இருந்தார். சிந்திக்கவும் ஆசிரியர் குழு அந்த இணையங்களை படித்து விட்டே இந்த செய்தியை பிரசுரித்து உள்ளது.

நீங்கள் தோழர் அபூ கதீஜாவின் பதிவில் சொல்லப்பட்ட செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அதற்க்கூரிய ஆதாரங்களுடன் மறுக்க வேண்டுகிறோம்.

அது குறித்து sdpi மறுப்பு வெளியிட்டு இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும். நாங்கள் அதை பிரசுரிக்கிறோம். குறிப்பாக ஊர் சம்மந்தப்பட்ட சிறு சிறு விடயங்கள் குறித்து நாங்கள் செய்தி வெளியிடுவதில்லை. இருந்தாலும் இந்த செய்தியை வெளியிட காரணம் என்னவென்றால் இது ஒரு ஊர் பிரச்சனை என்பதை தாண்டி ஒரு மக்கள் பிரச்சனை என்பதாலேயே வெளியிடவேண்டிய சூழல் வந்தது. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தோழரே.

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நல்லவர்கள் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக... முஸ்லிம் லீக் கட்சி [ என்று சொல்லுவதை] மக்கள் மாற்றனும் முஸ்லிம்கள் அனைவர்களும் இதில் இருப்பது போன்று பாவனை காட்டிக்கொண்டு கட்சி நடத்து கின்றார்கள் இவர்களினால் இஸ்லாமிய சமுகம் இன்றுவரை முன்னுக்கு வரமுடியாமல் போனதற்கு இவர்கள்தான் முலகாரணம் பாரம்பரிய கட்சி என்று சொல்லி சொல்லி முஸ்லிம்களை வஞ்சித்து விட்டார்கள் படுபாவிகள் பச்சை நிற கொடியுடன் மயிர் புடுங்கபோய்க்கொண்டு இருக்கின்றார்கள் மடையர்கள் [அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள்] கவலை கொள்ளத்தேவை இல்லை இவர்களுக்கு சரியான செருப்படி எங்களின் சமுகம் கொடுக்கும்.. இப்படிக்கு..புனிதப்போராளி

PUTHIYATHENRAL said...

வாருங்கள் இருதயம் ஐயா! உங்களுக்கு எங்கே? மக்கள் பிரச்சனையைகள் புரிய போகிறது. எவன் தலையிலாவது கொல்லி வைத்து அந்த வெளிச்சத்தில் நாம் மின்சாரம் எடுக்க வேண்டும்.

உங்கள் அடுக்குமாடி வீடுகள் வேண்டாம், உங்கள் நால்வழி தங்க சாலைகள் வேண்டாம், கடல் கரை ஓரங்களில் தங்கி கடலில் மீன் பிடித்து சுகாதாரமாக குடிசைகளில் வாழ விடுங்கள் ஐயா!

உங்கள் இன்டெர் நெட்டும் வேண்டாம், பிராடு பேண்டும் வேண்டாம்.. ஆளை உயிரோடு வாழ விடுங்கள் சாமி.. இதுதான் அந்த மக்கள் கேட்பது.

ஏன் இந்த அணு உலையை கேரளாவில் கட்ட வேண்டியதுதானே? ஏற்கனவே உள்ள மணலில் இருந்து தாதுக்களை பிரித்து எடுக்கும் தொழில் சாலையால் மக்கள் புற்று நோயால் சாகிறார்கள். இது போதாது என்று தூத்துக்குடி ஸ்டர்லைட் தாமிர உருக்கு ஆளை, ஆறுமுகநேரி dcw, ஸ்பிக் உர தொழில் சாலை, இப்படி ஒரு பகுதியில் எத்தனை நச்சு தொழில்சாலைகள்.

தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை கொடுக்க கல்பாக்கம், நெய்வேலி , நீர், காற்று, அனல், அணு என்று ஏராளமான மின் உற்பத்தி நிலையங்கள் இருக்க அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று கொடுத்து விட்டு மீண்டும் அணு உலைகளை மாவட்டம் தோறும் கட்டி தமிழர்களை கொல்ல பார்கிரீர்களா?

நியாயம் உள்ள அரசாக இருந்தால் இந்த அணு உலையை கேரளாவில் கட்டி இருக்கும். ஆனால் அவர்களால் முடியாது ஏன் என்றால் மத்திய அரசின் உயர் பதவிகளில் வீற்றிருப்பது மலையாளிகள், அம்மையார் சோனியா வீட்டு வேலை காரர்கள் வரை மலையாளிகள் அதனால் அவர்கள் அதை திட்ட மிட்டு தடுத்து விடுவார்கள். இளிச்சவாயன் தமிழன்.

ஓ நீங்கள்தான் தமிழன் இல்லையே இந்தியன் ஆச்சே.... உங்களிடம் போயி சொன்னால் உங்களுக்கு எப்படி விளங்கும்.

மக்கள் நலனை பற்றி அக்கறை இல்லாத உங்கள் அரசு இயந்திரங்களையும், அரசியல்வாதிகளையும், விஞ்சானிகல் பற்றியும் எங்களுக்கு நன்றாக தெரியும் ஐயா.

உங்கள் போலி முகங்கள்தான் தமிழக மீனவர் படுகொலை, ஈழத்து இன அழிப்பு, போபாலிலும், சதீஷ்கரிலும், காஷ்மீரிலும், சந்தி சிரிக்கிறதே...

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நல்லவர்கள் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக... முஸ்லிம் லீக் கட்சியில் மிச்சமிருக்கும் இளைஞ்சர்கள் சிந்திக்கக்கடமைபட்டிருக்கின்றார்கள் மடத்தனமாய் கட்சி நடத்தும் இவர்களின் பின் நிற்கும் வறுமைக் கோட்டில் வாழும் சமுதாயமே பல வருடமாக இவர்கள் கட்சி நடத்துகின்றார்கள் இவர்களினால் இஸ்லாமிய சமுகம் அடைந்த நன்மை என்ன இன்றுவரை நம் சகோதரர்கள் அயல்நாடுகளில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த கழுசடைகள் அணுமின் நிலையத்தை திறக்கனும் என்று போராட்டம் நடத்துகின்றார்கள் மறை கழன்ற மடையர்களை இஸ்லாமிய சொந்தங்கள் புறக்கணிக்கனும் ...இப்படிக்கு...புனிதப்போராளி

PUTHIYATHENRAL said...

தோழர் சீனி உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

sdpi மற்றும் மனித நேய மக்கள் கட்சிகள் கடுமையாக கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்கிறார்கள் என்கிற செய்திகளையும் காணொளிகளையும் நாம் கூடங்குளம் சம்மந்தப்பட்ட பதிவுகளை வெளியிடும் போது வெளியிட்டு இருந்தோம்.

ஆனாலும் இந்த பதிவு அந்த பகுதியை சேர்ந்த அபூ கதீஜா என்பவரால் நமக்கு அனுப்பட்டது. அந்த பதிவில் அவர் காயல்பட்டினம் ஊர் சார்ந்த நம்பத்தகுந்த இணையதளங்களில் வந்திருக்கும் செய்திகளை நமக்கு ஆதாரமாக அனுப்பி தந்திருந்தார். நாங்களும் சரிபார்த்த பின்னரே இந்த பதிவை வெளியிட்டுள்ளோம்.

அதிலும் நாம் sdpi மற்றும் மனித நேய மக்கள் கட்சியை இந்த பதிவு குற்றம் சுமத்த வில்லை. அதன் அந்த பகுதி அல்லது கிளையை குற்றப்படுத்தியே பதிபவர் எழுதி உள்ளார். இதை மறுக்க வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஏதாவது மறுப்பு செய்திகளை வெளியிட்டால் தெரியப்படுத்துங்கள். வெளியிடுவோம் நன்றி.

PUTHIYATHENRAL said...

//இப்பதிவை நான் தமிழ்மணத்தில் இணைத்தேன். புதியதென்றலின் கட்டணச்சேவை தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் தோன்றவில்லை.//

ஆமாம் கட்டணம் செலுத்த காலதாமதம் ஆனதால் நீக்கப்பட்டுள்ளது. இன்று மீண்டும் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பலவேலைகள் மற்றும் பயணங்கள் ஆகியவற்றால் ஏற்ப்பட்ட காலதாமதம். தமிழ்மணத்தில் சிரமேடுத்து எங்கள் பதிவை பதிந்தமைக்கு மிக்க நன்றி தோழர் வாஞ்சூர் அவர்களே!

PUTHIYATHENRAL said...

வணக்கம் நாட்டு பற்று இருதயம் ஐயா அவர்களே! காயல் பட்டினம் காரர்களுக்கு மட்டுத்தான் நாட்டு பற்று இருக்கு கூடங்குளம் பகுதியை சார்ந்தவர்களுக்கு இல்லை என்று சொல்கிறீர்கள். உங்கள் நாட்டு பற்று வியாக்கானம் அதற்க்கு நீங்கள் கொண்டுள்ள அளவு கோல் வியக்க வைக்கிறது.

அணு உலை வேண்டாம் என்று சொன்னால் அவர்களுக்கு நட்டு பற்று இல்லை என்று அர்த்தம், ஈழமக்கள் பிரச்சனை பற்றி பேசினால் அவர்களுக்கு நட்டு பற்று இல்லை என்று அர்த்தம், தமிழக மீனவர்கள படுகொலையை பேசினால் நாட்டு பற்று இல்லை என்று அர்த்தம், முல்லை பெரியாரை பேசினால் நட்டு பற்று இல்லை என்று அர்த்தம், நுயோட்ரினா பற்றி பேசினால் நாட்டு பற்று இல்லை என்று அர்த்தம், பழங்குடி மக்களின் மேல் நடக்கும் தாக்குதல் பற்றி பேசினால் நட்டு பற்று இல்லை என்று அர்த்தம், போபால் விஷவாய்வுக்கு நீதிகேட்டால் தேசபக்தி இல்லை என்று அர்த்தம்.

இப்படி மனிதம் கொன்று மிருகம் வளர்க்கும் தேசபக்தி, தேசபற்று எங்களுக்கு தேவையில்லை.

PUTHIYATHENRAL said...

//இவர்களினால் இஸ்லாமிய சமுகம் இன்றுவரை முன்னுக்கு வரமுடியாமல் போனதற்கு இவர்கள்தான் முலகாரணம//

வாருங்கள் தோழர் புனித போராளி அவர்களே உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த முஸ்லிம் லீக் பற்றி அவ்வளவாக தெரியாது என்றாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த அணி திரட்டியதில் இருந்தே அவர்கள் யோக்கிதை பல்லை காட்டுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Anonymous said...

=====முஸ்லிம் லீக் கட்சியில் மிச்சமிருக்கும் இளைஞ்சர்கள் சிந்திக்கக்கடமைபட்டிருக்கின்றார்கள்====

சரியாக கருத்து Mr புனித போராளி.... அது ஒரு துக்கடா கட்சி ரப்பர் ஸ்டாம்ப் கட்சி .... அதில் எங்கே இளஞசர்கள் இருக்கிறார்கள் எல்லாமே வயதானவர்கள்தான்.

மன்னர் - காயல்பட்டினம்.

(அபு) SAFWAN - காயல்பட்டினம் said...

02-03-2012 வெள்ளி அன்று நடந்த கூட்டத்தின் தீர்மானங்களை காயல் நெட்வொர்க்கில் பதியசொன்ன நிகழ்ச்சியின் தொகுப்பாளர் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் அவர்களிடம் SDPI யின் மறுப்பினை தெரிவித்து அணைத்து காயல் நெட்வொர்க் ரிபோர்ட்டர்களுக்கும் SDPI சம்பந்தமான மறுப்பினை வெளியட சொன்னதாக கேள்விப்பட்டேன் . இன்ஷா அல்லாஹ் விரைவில் ஆதாரங்களை தருகின்றேன்.

சில அமைப்புகள் ஆதரவும், சில அமைப்புகள் மறுப்பும் தெரிவித்து பிரசுரம் வெளியிட்டிருப்பதால் கடைக்காரர்களும், வியாபாரிகளும் எனக் குழப்பத்தில் உள்ளனர்,

நகர தமுமுக மற்றும் ம.ம க வினர் தங்களுக்கும் இந்த கடையடைப்பிற்கும் எவ்வித சமந்தமும் இல்லை என அறிக்கை அளித்துள்ளனர்.

http://www.kayalnews.com/news/kayal-news/1638--3-a-

SDPI கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து முழு ஆதரவையும் தெரிவித்துக்கொண்டிருக்கும் நிறைய போஸ்டர்களை காயல் பட்டினத்தில் பார்த்தவன் / படித்தவன் என்ற முறையில் இந்த கருதின்னை எழுதுகின்றேன்...

Anonymous said...

சாதாரண பாட்டரி கம்பெனி என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்திற்குள் நச்சு வாயுவை உற்பத்தி செய்யத் திட்டம் வகுத்துத் தந்த விஞ்ஞானி, அதற்கு ஒப்புதல் தந்த அதிகாரி, மூச்சுத் திணறி இறந்த மக்களின் சவப்பரிசோதனை அறிக்கையில்கூட தில்லுமுல்லு செய்த மருத்துவர்களென எல்லா அயோக்கியர்களும் ‘வல்லுநர்கள்’தான்.


ஆபத்தான இரசாயன ஆலைகளுக்கு அனுமதி வழங்குவது முதல் காடுகளை அழித்துச் சுரங்கம் தோண்டச் சுற்றுச்சூழல் அனுமதி தருவது வரை எல்லாப் பித்தலாட்டங்களையும் முதலாளிகளுக்கு செய்து கொடுப்பவர்களும், விவசாயிகளுக்கே தெரியாமல் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் புகுத்தி, விவசாயப் பல்கலைக்கழகங்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் அடியாள் கழகங்களாக மாற்றி விவசாயிகளின் குடியைக் கெடுப்பதும் விஞ்ஞானிகளும் வல்லுநர்களும்தான்.

Anonymous said...

உலகில் படுத்துப்போன அணுஉலை வியாபாரத்தை தூக்கி நிறுத்த 8 லட்சம் கோடிக்கு வியாபாரம் செய்ய மன்மோகன்சிங் போன்ற தேசத் துரோகிகள்தான் உகந்த நபர்.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதித்து கோடிக்ணக்கான வியாபாரிகளின் வாழ்க்கையை சூறையாடுகிறார்கள். பெட்டிகடை வைக்க எதற்கு அன்னிய மூலதனம்?

கூடங்குளம் அணுஉலை மூடினால் 14 ஆயிரம் கோடி பற்றி கவலைப்பட வேண்டியது மக்கள்தான் அதைப்பற்றி உங்களுக்கென்ன? பிரதமரின் நேரடி பொறுப்பில் உள்ள இஸ்ரோவில் 2 லட்சம் கோடி எஸ்பேண்டு ஊழல் 175000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி, சில இலட்சம் கோடி கருப்பு பணம் இன்னும் எண்ணற்ற ஊழல்கள்.

இடிந்தகரை மக்கள் போராட்டம் அவர்களது போராட்டம் மட்டுமல்ல. மத்திய அரசின் மறுகாலனியாக்க கொள்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைத்து மக்களுக்குமானது. மறுகாலனியாக்கத்திற்கு எதிரான இந்த போராட்டம் தேச விடுதலைக்கான போராட்டம், அனைவரும் இணைந்து போராட வேண்டும்.

Anonymous said...

விஞ்ஞானத்தை நம்புவது வேறு, விஞ்ஞானிகளை நம்புவதென்பது வேறு. கூடங்குளத்தில் போராடும் மக்களையெல்லாம் பகுத்தறிவற்ற மூடர்கள் போல தனது (தினமணி) கட்டுரையில் சித்தரித்து, ‘கெக்கெக்கே’ என்று சிரிக்கிறார் நெல்லை சு.முத்து என்ற எழுத்தாளர். ஸ்ரீஹரிகோட்டாவில் சூடம் கொளுத்தி ஏவுகணை பத்தவைக்கும் கோமாளிகளுக்கு இவ்வளவு கொழுப்பு தேவையில்லை.

அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!அணுகுண்டுக்கே அல்லேலுயா பாடியவரும், இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எனும் அடிமை ஒப்பந்தத்தின் ஆதரவாளரும், தினமலரால் நேர்மையின் இருப்பிடம் என்று போற்றப்படுபவருமான அப்துல் கலாம் கூடங்குளம் மின் நிலையத்துக்குள் இரவு 1.30க்கு நுழைந்து அதிகாலை 4 மணி வரை ஆய்வு நடத்தி விட்டு, ‘கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது’ என்று 40 பக்க அறிக்கையை உடனே வெளியிட்டிருக்கிறார்.

Anonymous said...

ரசிய நிறுவனமான “ஆட்டம் ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட்” டின் இணையதளத்தில் கம்பெனி விளம்பரத்துக்காக அவர்கள் வெளியிட்டுள்ள விவரங்களையே சுட்டுத் தயாரிக்கப்பட்டிருப்பதுதான் கலாமின் அறிக்கை.

கூடங்குளம் பகுதி நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்படாது என்றும், நாகப்பட்டினத்தை 2004இல் தாக்கிய சுனாமி கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கவில்லை என்றும் கலாம் கூறுகிறார். அரசு புள்ளிவிவரப்படியே கன்னியாகுமரியைத் தாக்கிய சுனாமியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 808. இப்பகுதியில் இதுகாறும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் குறித்த விவரங்களையும் கூடங்குளம் போராட்டக் குழுவினர் பட்டியலிட்டுள்ளனர். சுனாமியின்போது, குமரிமுனை திருவள்ளுவர் சிலையின் உயரத்துக்கு133 அடிக்கு அலைகள் எழும்பின. ஆனால், கூடங்குளம் உலை 13.5 மீட்டர் (சுமார் 42 அடி) உயரத்தில் இருப்பதால், சுனாமி அலைகள் இதனைத் தாக்காது என்கிறார் கலாம். 133ஐ விட 42 பெரிது என்பது கலாமின் கண்டுபிடிப்பு போலும்!

உலகம் முழுவதும் நடந்துள்ள அணு உலை விபத்துக்கள் இதுவரை ஆறே ஆறுதான் எனவும், இந்தியாவில் இதுவரை ஒன்றுகூட நடைபெறவில்லை என்றும் கூறுகிறார் கலாம். ஆனால், 1947இலிருந்து 2008 வரை உலகெங்கிலும் 76 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 56 விபத்துகள் 1986இல் செர்நோபில் விபத்துக்குப் பிறகு நடந்தவை.

4, மே 1987இல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர். 10, செப். 1989தாராப்பூர் அயோடின் கசிவு கதிர்வீச்சு 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர். 3, பிப். 1995 கோட்டா ராஜஸ்தான் ஹீலியம்/கனநீர் கசிவு 2 ஆண்டு மூடல். செலவு 280 மில்லியன் டாலர். 22, அக். 2002 கல்பாக்கம்100 கிலோ சோடியம் (கதிர் வீச்சு) கசிவு. செலவு 30 மில்லியன் டாலர். (பொன்.ஏழுமலை, தினமணி, 24 நவ.) இவை இந்தியாவில் நடந்த சில விபத்துகள். இவற்றில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர்; இறந்தவர்கள் பலர்.

Anonymous said...

ஜப்பானியர்களுக்கு தெரியாத எந்த தொழில் நுட்பம் நம்மிடம் இருக்கிறது? கூடங்குளம் பகுதியில் நிலநடுக்கம் வந்திருக்கிறது. சுனாமியும் வந்திருக்கிறது. அந்த பகுதியில் பூமிக்கடியில் எரிமலை குழம்பு இருக்கிறது. அதற்கான கற்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பூமிக்கடியில் வெற்றிடம் இருக்கிறது. அதனால்தான் மழைநீர் கிணற்றுக்குள் போவது போல ஓடுகிறது. அந்த பகுதியில் பாறைகள் கடினமானவை அல்ல. அலை போன்று வண்டல் மண் குவியல் உள்ளது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது என கற்றறிந்த விஞ்ஞானிகள் சொல்கிறார்களே இதற்கு அணுசக்தி துறையினரிடம் பதில் இல்லையே.

Anonymous said...

அணு உலையில் விபத்து வேண்டாம், தீவிரவாத தாக்குதல் வேண்டாம் நிலநடுக்கம் வேண்டாம் சுனாமி வேண்டாம், அவர்கள் சொல்வதுபோல் இயங்குவதாக வைத்துக்கொள்வோம். அணுஉலை புகைப்போக்கின் வழியாக அயோடின் சீசியம் சார்ட்டியம் என நஞ்சுத்துகள்கள் காற்றிலே பரவும். அந்த நச்சுக்காற்று 40 முதல் 60 வருடங்கள் காற்று வீசும் திசையெல்லாம் பரவும். அதை சுவாசிக்கும் நமது குழந்தைகள பற்றி எண்ணி பாருங்கள். நம்மைபோல வாழ்வாங்கு வாழ வேண்டாமா. கூடங்குளம் அணுஉலையில் நாள் ஒன்றுக்கு கதிர்வீச்சு கழிவு, நச்சுநீர் எவ்வளவு வெளியாகும். இதில் காற்றில் எவ்வளவு கலக்கும், கடல் நீரில் எவ்வளவு கலக்கும் என கேட்டோம். பாதுகாப்பானது என்ற பதிலைத் தவிர எதுவும் அவர்கள் சொல்லவில்லை.

Anonymous said...

கூடங்குளம் அணுஉலை இயக்குநர் காசிநாத் பாலாஜியிடம் கழிவு எவ்வளவு வரும் என கேட்டோம். கொஞ்சமாக வரும் என்றார். விஞ்ஞானிகள் போலவா பேசுகிறார்கள். பிறகு மறுச்சுழற்சி செய்கிறோம் கழிவு வராது என்றார்கள். அணுஉலையை விட மறுசுழற்ச்சி உலை ஆபத்தானதே என நாம் கேள்வி எழுப்பியவுடன் சுதாரித்து இல்லை என்றார். அப்துல்கலாம் 25 சதவீதம் கழிவு வரும் என்றார். எதிலே 25 சதவீதம் என சொல்ல மறுக்கிறார்கள் இவர்கள் உண்மையை சொன்னதாக சரித்திரம் இல்லை. இப்படி நாம் கேள்வி கேட்டதால் இந்திய இறையாண்மைக்கு எதிராக தேச துரோக குற்றம் சாட்டப்பட்டுள்ளோம்.

Anonymous said...

அணு கழிவின் கதிர்வீச்சு வீரியம் 48 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். அரைஆயுள் முடிய 24 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். மின்சாரம் நமக்கு தேவை ஆனால் கண்ணை விற்று சித்திரம் வாங்க முடியமா? மொத்த மின் உற்பத்தியில் இன்று அணு மின்சாரம் 2.5 சதவீதம் மட்டுமே. நாடு முழுவதும் புதிதாக அணுஉலைகள் அனைத்தும் இயங்கினால் கூட 7 சதவீதம் மட்டுமே பூர்த்தி அடையும். தண்ணீயில் சூரிய ஒளி போன்ற மாற்று முறையில் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் . கூடங்குளம் அணுஉலையில் 20 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது

Anonymous said...

எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்துவெச்சிருந்தேன். ஆனா, கடலூர் மக்கள் புயல்ல பாதிக்கப் பட்டு இருக்காங்கன்னு அப்பா சொன்ன தும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. அதான் நான் சேர்த்துவெச்ச காசைஅவங்களுக்குக் கொடுக்கலாம்னு வந்தேன்!'' என்று சொல்லி இரண்டு உண்டியல்களுடன் விகடன் அலுவலகத்துக்கு வந்து நின்றாள் அசினா பர்வீன். அதில் சைக்கிள் வாங்குவதற்காக அவள் சேர்த்துவைத்திருந்த 3,052, சில்லறைகளாகச் சிரித்தன.

இதுபோன்ற அடித்தட்டு மக்களால் வாழ்கிறது இந்தியா.

RMY பாட்சா said...

எந்த ஒரு மனிதனும், மனிதனையும், மனிதாபிமானதையும்,
மனிதனேயதையும், மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.
"காயல்பட்டினம்" இந்தஊருக்கும் ஊரில் வாழும் மக்களுக்கும் பெருமைபடகூடியபல வரலாறு உண்டு. ஒருசிலர் செய்யும்
தவறால் நாம் தனிமை படக்கூடியநிலை ஏற்படும்.
கூடங்குளதில் நடக்கும் போராட்டம் அணுமின் சக்திக்கு எதிராக நடக்கும் போராட்டம். அந்த மக்கள் நம்முன்னோர்கள் நம்மளால்
முடிந்த அனைத்து உதவியை அந்த மக்களுக்கு செய்வதே நல்லது.
இது இடிந்தகரை மக்களின் போராட்டமல்ல; தமிழகமக்களின் போராட்டம்.