Feb 8, 2012

தொப்புள், மார்பகங்களை சுற்றி வரும் கேவலமான கேமிராக்கள்!

FEB 09, சென்னை: மெரினா கடற்கரை வைத்து எடுக்கப்பட்ட படம் இது. பசங்க படத்தை எடுத்து தேசிய விருதுவரை சென்றுவந்த பாண்டிராஜ்தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். 

உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆன மெரினாவை சுற்றி படம் நகர்கிறது. மெரீனா என்றாலே காதலர்கள், சுண்டல், குதிரை சவாரி என்று எண்ணத் தோன்றினாலும் அதையும் தாண்டி அதன் பின்னால் மறைந்திருக்கும் இருக்கும் ஏழை, எளிய மக்களின் சோகங்களை அப்படியே சொல்கிறது இந்தப்படம். 


குழந்தை தொழிலாளர்கள் என்பது ஒழிக்கப்பட வேண்டியது என்பதையும் அவர்களுக்கு கல்வி கிடைப்பதன் அவசியத்தையும் சொல்லும் ஒரு அருமையான திரைக்காவியம் இது. விஜய் தொலைக்காட்சியில் நிகழ்சிகள் நடத்தும் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளார் இயக்குனர். 

முதியவர்களுக்கு வீட்டில் ஏற்ப்படும் பிரச்சனைகளையும், தற்போதைய காதலர்களின் நிலையையும் அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். கோடிக்கணக்கில் பணத்தை விரயம் செய்து பெண்களை போகப்பொருளாக காட்டி தொப்புளில் பம்பரம் விட்டு, தொடை இடுக்குகளில், மார்பக இடைவெளிகளில் கேமிராவை நுழைத்து காம விரசங்களை தூண்டும் படங்களை எடுக்கும் இன்றைய தருணத்தில் சமூகத்திற்கு தேவையான நல்ல செய்திகளை சொல்லிய இயக்குனருக்கு ஒரு வீர வணக்கம்.

இன்றைய காலத்தில் எடுக்கப்படும் சினிமாக்கள் தமிழர் கலாசாரத்தை, பண்பாடை கெடுக்கும் முகமாக  விளங்குகின்றன. சினிமா என்கிற ஒரு அழகான வெகுஜன ஊடகத்தை சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தவும் அதே நேரம் மக்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் கொலை, கொள்ளை, ரவுடிசம் முதல் காம விரசம் வரை உள்ள விடயங்களை காட்டி பணம் சம்பாதிக்கும் இன்றைய கீழ்த்தரமான இயக்குனர்களை விட்டு இவரை போன்ற சிலர் உயர்ந்து நிற்கின்றனர். இயக்குனர்  பாண்டிராஜ் அவர்களுக்கு  நமது மனம்மார்ந்த வாழ்த்துக்கள். 
* மதிவதனி*

23 comments:

Anonymous said...

வணக்கம் சகோதரி மதிவதனி, நல்லா சொன்னேங்க கேவலமா பிழைப்பு நடத்தும் சினிமா கூத்தாடிகளை நன்னா செருப்பால அடித்தீன்கள். நன்றி.

செல்வம். உறையூர்.

Anonymous said...

படமா எடுக்குறாங்க நாதாரிகள். எப்ப பார்த்தாலும் பெண்களை அரை குறை ஆடைகளில் காட்டும் ஆணாதிக்க வெறியர்கள். மாலதி.

இப்னு அப்துல் ரஜாக் said...

சரியா சொன்னீங்க அக்கா,இந்த சினிமா மிருகங்களை செருப்பால அடிக்கணும்

நன்பேண்டா...! said...

"தொப்புள், மார்பகங்களை சுற்றி வரும் கேவலமான கேமிராக்கள்!"
intha thalaippu etharkku ellam oru vilambaramthaane, umakku hits kedaikkanumna neenga kevalamaana thalaippu vaipeenga aanaal aduththavan viyaabaaraththukku seivathai kurai kooruveergal. muthalil ungalai thiruththi kollungal piragu matravargalai patri pesalaam

நன்பேண்டா...! said...

"பெண்களை போகப்பொருளாக காட்டி தொப்புளில் பம்பரம் விட்டு, தொடை இடுக்குகளில், மார்பக இடைவெளிகளில் கேமிராவை நுழைத்து காம விரசங்களை தூண்டும்"- ippadi padam edupavargalukkum "தொப்புள், மார்பகங்களை சுற்றி வரும் கேவலமான கேமிராக்கள்!"-intha thalaippai vaiththa ungalukku periya viththiyaassam illai- avan panaththukkaaga seiginraan neengal etharkkaaga seiginreergal

Anonymous said...

Vidaythin kara saram puriyanum yenaal. Ithupol. Thalaippu vaippathil thavarillai.

துரைடேனியல் said...

Nice.

தமிழ் மாறன் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Nalla pathivu valththukkal ...... Thanks....

Seeni said...

nalla karuththu!

Seeni said...

nalla karuththu!

Anonymous said...

Very. Nice////////. Raja.

Anonymous said...

Nannaa sonneenga. Tholih. Nanri

Anonymous said...

Sariyana pathivu

கபிலன் said...

"தொப்புள், மார்பகங்களை சுற்றி வரும் கேவலமான கேமிராக்கள்!"

அந்த மாதிரியான இயக்குனர்களை குறை கூறும் இப்பதிவர், இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறார். இதைத் தான் அன்னாந்து பார்த்து துப்புறதுன்னு சொல்லுவாங்க...

விளக்கம் கேட்டா...வழக்கமாக சினிமாக்காரங்க சொல்றத தான் சொல்லப் போறீங்க...தப்புன்னு உணர்த்தனும்னா அதை சொல்லித் தான் ஆகணும்...அப்படின்னு ஒரு கருத்து தானே...நடக்கட்டும்ங்க..

"இன்றைய காலத்தில் எடுக்கப்படும் சினிமாக்கள் தமிழர் கலாசாரத்தை, பண்பாடை கெடுக்கும் முகமாக விளங்குகின்றன."

என்னாங்க இது...அதெப்படிங்க..தமிழ் கலாச்சாரம் போச்சுன்னு சொல்ற ஒருத்தர் கூட அப்படின்னா என்னான்னு சொல்லவே மாட்றீங்க...சின்ன பசங்க நாங்க எல்லாம் எப்போ கத்துக்குறது....அப்படின்னா என்னாங்க...சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், புறநானூறு, அகநானூறு இவையெல்லாம் தமிழ் கலாச்சாரம் என்றால், இப்பதிவில் சொல்லப்படிருப்பவை தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவை அல்ல என்பதே என் தாழ்மையான கருத்து.

எனக்கு தலைப்புல ஒரு சின்ன டவுட்...

அற்பமான, மட்டமான, கேவலமான விஷயத்தை படம் பிடிக்கும் கேமிராக்கள் தான் கேவலமான கேமராக்கள் அப்படின்னு எடுத்துகிட்டா....தொப்புளும் மார்புகளும் அப்படிப்பட்ட கேவலமான விஷயங்களா...?

சிவபார்கவி said...

Good.. positively viewed the whole film..

இங்கேயும் விமர்சனம் உள்ளது...

http://sivaparkavi.wordpress.com/
sivaparkavi

புனிதப்போராளி said...

அற்பமான, மட்டமான, கேவலமான விஷயத்தை படம் பிடிக்கும் கேமிராக்கள் தான் கேவலமான கேமராக்கள் அப்படின்னு எடுத்துகிட்டா....தொப்புளும் மார்புகளும் அப்படிப்பட்ட கேவலமான விஷயங்களா...? இல்லை சகோ.. கபிலா தொப்புளும் மார்புகளும் பிறர்பார்வைக்கு[ஆபாசமாக ] வரும்போது இதை படமெடுக்கும் மனிதனையும் கேமிராவையும் கேவலமானவை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல "தொப்புள், மார்பகங்களை சுற்றி வரும் கேவலமான கேமிராக்கள்!" இப்படி தலைப்பிட்டதினால் தவறில்லை .....புனிதப்போராளி

VANJOOR said...

சொடுக்கி >>>> இஸ்லாத்தில் ஜாதி, வர்ணாஸிரமம் இல்லையே !! ஏன்? <<<<< விளக்கம் பெறுங்கள்.

.

Anonymous said...

Very nice keep it up.

Anonymous said...

Asaththalaana. Pathivu. Good...... Good....good..... By: manmathan

PUTHIYATHENRAL said...
This comment has been removed by the author.
PUTHIYATHENRAL said...

வணக்கம் கபிலன் நலமா! இந்த பதிவை எழுதிய மதிவதனி அவர்கள் இதற்க்கு தலைப்பு மெரினாவுக்கு வீர வணக்கம் என்றுதான் தலைப்பிட்டிருந்தார். பொதுவாக எங்களது ஆசிரியர்கள் அனைவருக்கும் பதிவுகளை அவர்களே நேரிடையாக பதியும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மலர்விழி, யாழினி, மதிவதனி போன்ற பெண்பதிபவர்கள் மற்றும் சில ஆண்பதிபவர்கள் தங்களது பதிவுகளை மின்னஞ்சல் மூலமாக அனுப்பித்தருகிறார்கள்.

அவர்களிடம் நீங்களே இதை பதிந்தால் என்ன? என்று வினவினால் அவர்கள் பதிவை பதிந்து, படங்களை தரவிறக்கம் செய்து போட தெரியவில்லை என்று சொல்கிறார்கள். இது இலகுதான் என்று சொன்னாலும் நீங்கள் பதிவுக்கு தகுந்த படங்களை உருவாக்கி, பதிவுக்கு வண்ணம் தீட்டி பதிவு செய்கிறீகள் அது இன்னும் பார்பதற்கும், படிப்பதற்கும் இலகுவாக இருக்கிறது என்று சொன்னார்கள். அதனாலேயே வேலை சுமைகள் இருந்தாலும் இந்த பதிவுகளை புதியதென்றல் என்ற சிந்திக்கவும் இணையத்தின் ஆசிரியராகிய நானே இதை பதிகிறேன். பெரும்பாலும் பதிவுகளில் நான் எந்த மாற்றமும் செய்வதில்லை.

நிறய நேரங்களில் எனக்கு தலைப்பு கவரும் வண்ணம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதன் மூலம் நல்ல கருத்துக்கள் நிறய மக்களை சென்றடையும் என்ற எண்ணமே தவிர வேறொன்றும் இல்லை. இந்த பதிவுக்கு இப்படி தலைப்பிடும்போது மனதுக்கு உறுத்தலாகதான் இருந்தது. இருந்தாலும் எண்ணினேன் சிந்திக்கவும் இணையத்தில் ஆபாசம் இருக்காது என்று வாசர்கள் அறிவர் என்ற நம்பிக்கை. மேலும் தலைப்பில் (//தொப்புள், மார்பகங்களை சுற்றி வரும் கேவலமான கேமிராக்கள்!// ) கேவலமான கேமரா என்ற வாசகத்தை சேர்த்திருப்பதால் நிச்சயம் தாக்கித்தான் பதிவு போட்டிருப்பார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவே அதை இணைத்திருந்தேன்.

கடைசியில் என் மனதில் தோன்றிய உறுத்தல் உண்மையாகி விட்டது. தவறுக்கு வருந்துகிறேன். இனி இதுபோல் உள்ள தலைப்புகள் இடம் பெறாமல் பார்த்து கொள்கிறேன். சுட்டிகாடியமைக்கும் உங்கள் சமூக பொறுப்புக்கும் நன்றி. நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

கபிலன் said...

"கடைசியில் என் மனதில் தோன்றிய உறுத்தல் உண்மையாகி விட்டது. தவறுக்கு வருந்துகிறேன். "


தவறை ஒப்புக்கொள்வதற்கு ஒரு மெச்சூரிட்டி தேவை ! வாழ்த்துக்கள் !