Jan 26, 2012

பத்மஸ்ரீ என்கிற மாயக்கண்ணாடி!

JAN 27: பத்மஸ்ரீ விருது இந்த விருது என்பது இந்திய அரசால் வழங்கப்படும் முதன்மை விருதுகளில் ஒன்றாகும். பத்ம விபூசன், பாரத ரத்னா, பத்ம பூசன் போன்ற விருதுகளுக்கு அடுத்து நான்காவது இடத்தில்  பத்மஸ்ரீ விருது அமைந்துள்ளது.

இது கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூகசேவை, பொதுவாழ்வில் சிறப்பான பங்களித்தல் போன்றவைகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது 1954  ஜனவரி 2 நாள் இந்திய ஜனாதிபதியால் ஏற்ப்படுத்தப்பட்டது.

இது ஒன்றும் அப்படியே நூறு சதவீதம் திறமை உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதாக எண்ணிவிட வேண்டாம். இது ஆளும் வர்க்கத்திற்கும், அரசு துதிபாடுபவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும், சினிமா கூத்தாடிகளுக்கும் கொடுக்கப்படும் ஒரு விருதே தவிர வேறொன்றும் இல்லை.

ஒருபக்கம் பசி, வறுமையால் தற்கொலை சாவுகள்! மறுபக்கம்  உயர்குடிகளுக்கு இதுபோல் சாதனை பூச்செண்டுகள். வறுமையில் வாடும் மக்களை கவனியுங்கள் என்று சொன்னால் குடியரசு தினம் நடத்துகிறோம், ராக்கெட்டு பறக்க விடுகிறோம், விமானத்தில் சாகசம் காட்டுகிறோம், பத்மஸ்ரீ விருது வழங்குகிறோம் பாருங்கள் என்று சொல்கிறார்கள். பசிக்கும் வயிறோடு இதையெல்லாம் பார்த்து விட்டு பட்டினியில் சாகுங்கள் என்று சொல்கிறார்கள்.

மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் (பியுசிஎல்) அமைப்பில் உள்ள டாக்டர் பினாயக் சென். இவரை நீங்கள்  மறந்திருக்கலாம். இவர்தான்  சத்தீஸ்கர் மாநில பழங்குடியின மக்களுக்கு கிராமம்தோறும் சென்று மருத்துவம் செய்து வந்தவர். இவருக்குத்தான் சத்தீஸ்கர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. இந்த பழங்குடிமக்கள் வாழும் மலைகளில் இருந்துதான் இந்திய அரசு கனிமவளங்களை எடுக்க உள்நாட்டு யூத்தம் செய்துவருகிறது. இவரைப்போல் ஏழை, எளிய மக்களுக்கு சேவைகள் செய்யும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு எல்லாம் விருதுகள் கிடையாது.

ஆனால் மக்கள் சேவை செய்யாத, சேவை நோக்கம் இல்லாத மருத்துவர்களுக்கும்,  நாதஸ்வர வித்வான், மிருதங்க வித்வான், வயலின் வித்வான், நடிகை, நடிகர்கள், தொழில் அதிபர்கள் இவர்களைத்தான் இந்த விருது சென்றடையும். இவர்கள் ஏற்கனவே பெரும் பணமும், புகழும் சம்பாதித்து வாழ்க்கையை வளமோடும், செல்வ செழிப்போடும் வாழ்பவர்கள். இவர்களுக்கு இந்த விருதுகளை வழங்குவதால் என்ன பிரோஜனம் இருக்கிறது. ஏழை, எளிய மக்களில் திறமை உள்ளவர்களுக்கு, சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு விருது கொடுத்து உதவி செய்து கவுரவிப்பதே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு  உறுதுணையாக அமையமுடியும்.

இந்தியாவில் நரோரா என்ற இடத்தில் உள்ள அணு உலையில் ஒரு தீவிபத்து நடக்கிறது. அதை அதன் ஊழியர்கள் நான்குபேர் தங்கள் உயிரை பணயம் வைத்து அணைக்கின்றனர். இவர்களுக்கு எந்த விருதும் வழங்கப்படவில்லை. இதே போல் ஒரு விபத்து அமெரிக்காவில் நடக்கிறது அதை சரி செய்த ஒருவருக்கு அமெரிக்க சுதந்திர தினத்தில் அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்படுகிறது. ஆனால் நமது பத்மஸ்ரீ விருதுகளால்  லிவிங் டுகெதர் (Living together)  என்பதை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்த மாமேதை கமல்ஹாசன் போன்றவர்களைத்தான் சென்றடைய முடிந்துள்ளது என்பதை நினைத்து நாம் பெருமைபட்டுக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் நமது டாக்டர் பட்டங்கள் எப்படி ரவுடிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பணக்காரர்களுக்கும் காற்றில் பறக்கவிடும் பட்டமாக ஆகிவிட்டதோ அதுபோல் தான் இதுவும். இதில் ஒரு ஆறுதலான செய்தி என்னவென்றால் புச்சேரி வேங்கடபதி என்ற  விவசாயிக்கு இந்தவருடம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பதே.
*மலர்விழி*     

22 comments:

Anonymous said...

கமலஹாசனின் சேவை இந்த நாட்டுக்கு தேவை இது புரியலையே உங்களுக்கு.

-நரி-

Anonymous said...

பினாய்க் சென் போல் உள்ள நல்ல டாக்டர்களை மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் மனிதாபிமானம் இல்லாத டாக்டர்களை நல்லா நினைவில் இருக்கும்.

சுந்தர்.

Anonymous said...

இது ஒரு வலியான உண்மை.

by: roja.

Anonymous said...

nalla pathivu thanks

Anonymous said...

கமல் ஹாசன் ஒரு சிறந்த நடிகர் அவ்வளவுதான் நீங்கள் அவரை திட்டாதீர்கள் அவர் உலக நாயகன் .

Anonymous said...

கமல் ஹாசன் ஒரு சிறந்த நடிகர் அவ்வளவுதான் நீங்கள் அவரை திட்டாதீர்கள் அவர் உலக நாயகன் .

Anonymous said...

காலையிலேயே 588 ஹிட்ஷா ஏ அப்பா ......................

Anonymous said...

கமல் ஹாசன் ஒரு பொம்பளை ...... இவர் தமிழகத்தை அமெரிக்காவாக மாற்ற போகிரார்.

Anonymous said...

வணக்கம் மலர்விழி! அமெரிக்காவிலிருந்து இங்கே வந்து நாட்டுக்காக பாடுபடவேண்டியதுதானே! அங்கிருந்து பதிவு எழுதுவதுதான் பெரிய உழைப்பு இல்லையா? இப்படித்தான் இலங்கைப் பிரச்னையிலும் 'உழைத்து' இருப்பீர்கள் இல்லையா? வாழ்க உங்க சேவை!

Anonymous said...

எங்க ஜமாத்து ஆளுங்க யாருச்சுக்கும் கொடுத்து இருந்தா பாராட்டு பதிவு போட்டு இருப்போம். அதான் இதை போல பதிவு,

எங்க ஜமாத்துல ஆம்பள எவ்வளவு பொம்பளங்கள கட்டிக்கலாம். தலாக் தலாக் தலாக்ன்னு சொன்னா போதும் அப்படியே கழட்டி விடலாம்.

அதுக்கு மேல எல்லாம் அல்லா தான்

Adirai Salih said...

Latest News updated

www.adiraiseithi.blogspot.com

Anonymous said...

//எங்க ஜமாத்து ஆளுங்க யாருச்சுக்கும் கொடுத்து இருந்தா பாராட்டு பதிவு போட்டு இருப்போம்//

பத்ம விபூசன், பாரத ரத்னா, பத்ம பூசன்,பத்மஸ்ரீ, இந்த பெயரை பார்த்தாலே தெரியல இதுவெல்லாம் பார்ப்பனர்கள் உண்டாக்கியது என்று ஒரு பார்ப்பான் இன்னொரு பார்ப்பானை புகழ, உயர்த்த கண்டுபிடித்த வித்தை அதை பற்றி நீங்கள் பதிவில் குறிப்பிடவில்லையே.

ஏன் நீங்கள் எல்லாம் கோவில் திருவிழாக்களில் போட்டி நடத்தி பரிசு கொடுக்கவில்லையா. ஏன் தேவை இல்லாமல் ஜமாத்தை இழுக்கிறாய்.

ஒ .... பார்பன விருதாச்சே உயர்ஜாதி பார்பன புகழ் பாட கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விருதை பற்றி தங்கை மலர்விழி சொன்னதில் குற்றமில்லை.....

ஆசாத்- நெல்லை.

Anonymous said...

//எங்க ஜமாத்துல ஆம்பள எவ்வளவு பொம்பளங்கள கட்டிக்கலாம். தலாக் தலாக் தலாக்ன்னு சொன்னா போதும்//

உன் பார்பன நாத்தத்தை சொல்லட்டுமா நிதானமா கேளு நண்பா........

அதுசரி நாங்களாவது முறைப்படி கல்யாணம் செய்து கொள்கிறோமே ...................... அந்த தேவதாசி முறையை பற்றி கொஞ்சம் சொல்லேன் நண்பா.... பெண்களை கோவிலுக்கு விட்டு விட்டு எல்லா பார்பணனும் சேர்ந்து கேவலமா இல்லை... முதலில் உன் ... கழுவு அடுத்து மதத்தவர்களை பற்றி பேசு.

ஆசாத்- நெல்லை.

Anonymous said...

எதுக்கு உன் பார்பன மதத்தை விட்டு எல்லோரும் மாறி கிறிஸ்தவனா, முஸ்லிமா, புத்தனா மாரிபோனான்... உன் பார்பன வர்ணாசிரம் ஹிந்துத்துவா பிடிக்காமல்தான் மாறினான்.. நீ மக்களை பண்ணிய கொடுமைதாளாமல் விரண்டோடியதுதான் வேறொன்றும் இல்லை. இன்னும் நீ ஏமாற்றி வயிறு வளர்க்க முடியாது.

ஆசாத்- நெல்லை.

Anonymous said...

ஏண்டா முட்டாபயபுள்ள சொல்ல வந்ததை ஒழுங்காக சொல்லு ....ஒருவன் ஒன்றுக்கு மேல் திருமணம் பண்ணனும் என்றால் அவன் பல நிபந்தனைகளுக்கு கட்டுப்படணும் ...உங்களைப்போல் பல சின்ன வீடு[வைப்பாட்டி ] வைப்பதைக்காட்டிலும் முறையாக திருமணம் பண்ணுவது மிகவும் நல்லது மாடுகளை நம்புவனுக்கு என்ன மாட்டு புத்திதான் இருக்கும் ...,,, .திருமணம் என்பது கணவன் மனைவி இருவரும் சந்தோசமாக இருக்கத்தான் பண்ணுகின்றார்கள் இதில் கணவன் மனைவி இருவரிடத்திலும் பிரச்சினை வந்துவிட்டால் இவர்களை ஒன்றுபடுத்த பிரச்சினையை சரிபன்னுவதர்க்கு முயற்ச்சி பண்ணனும் இதில் பலன் இல்லையன்றால் இருவரையும் [தலாக்] பிரித்துவிடுதல் இதுதான் இருவருக்கும் நல்லது இதில் என்ன தவறை RSS மூடர்கள் கண்டுவிட்டீர்கள் உங்களது வண்டவாளங்கள் இந்த நாட்டுமக்களுக்கு தெரியாதா.....

Anonymous said...

ஆசாத் ...பார்ப்பன RSS பன்னாடைகளை விடாதீர்கள்

Anonymous said...

//உன் பார்பன நாத்தத்தை சொல்லட்டுமா நிதானமா கேளு நண்பா........

அதுசரி நாங்களாவது முறைப்படி கல்யாணம் செய்து கொள்கிறோமே ...................... அந்த தேவதாசி முறையை பற்றி கொஞ்சம் சொல்லேன் நண்பா.... பெண்களை கோவிலுக்கு விட்டு விட்டு எல்லா பார்பணனும் சேர்ந்து கேவலமா இல்லை... முதலில் உன் ... கழுவு அடுத்து மதத்தவர்களை பற்றி பேசு.

ஆசாத்- நெல்லை.//

நண்பரே இந்து மதத்தில் 100 வருடங்களுக்கு முன்னர் அதை போல கொடுமைகள் இருந்தன. இன்று அவை யாவும் தவறு என்று தெரிந்த பின்பு களையபடுகின்றன். அல்லது நீக்கபடுகின்றன். காலத்துக்கு தக்கவாறு தன்னோடு மாறி வருவது இந்து மதம்

ஆனால் தங்கள் மதம் அப்படியே? வெறுமனே வீண் வாக்குவாதம் தவறான சொல் பிரயோகம் வேண்டாம்

தமிழ் மாறன் said...

நாட்டு மக்கள் துன்பத்தில் தடுமாற இவர்கள் ஈழத்தில் இன அழிப்பை நடத்திவிட்டு சிங்களவனுக்கு சேவகம் செய்கிறார்கள்.

தமிழ் மாறன் said...

பினாய்க் சென் இவரை போன்ற நல்ல டாக்டர்களை பற்றி எந்த பார்ப்பன பத்திரிக்கையும் பேசாது.

அபுல் கலாம் மாதிரி அரசுக்கு அடிமையா இருக்கணும் அப்படி இருந்தால் அவர் முஸ்லிம் என்றாலும் பரவாயில்லை என்று இந்த பார்பன தினமலரும், தினமணியும் அவர் துதிபாடும். பாரதிய ஜனதா போல் உள்ள கட்சிகள் அவரை ஜனாதிபதியாக்கும்.

Anonymous said...

நாட்டு மக்கள் துன்பத்தில் தடுமாற இவர்கள் ஈழத்தில் இன அழிப்பை நடத்திவிட்டு சிங்களவனுக்கு சேவகம் செய்கிறார்கள்//
இன அழிப்புக்கு முக்கிய காரணமே பிரபாகரன்தானே!

Anonymous said...

இங்கே படித்து பட்டம் வாங்கி விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்க ஆத்து அம்பி ஆகி நாசாவில் வேலை வேலைபார்த்து நாட்டுக்கு பெருமைதேடித்தரும் பார்பன அம்பிகளும் அவர்களது வர்ணாசிரம கூட்டங்களும் ஆகிய தினமலர், தினமணி இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்ட ஆவேசமாக குரல் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கூடங்குளம் பகுதிகளில் கடல் தொழிலை நம்பி இருக்கும் இலட்ச்சக்கனக்கான மீனவர்களின் பிரச்சனை இது. கூடங்குளம் அணு மின்நிலையம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை அந்த பகுதிகளில் தினம் தினம் கடலை நம்பி வாழும் எங்களுக்கே உள்ளது. சென்னையில் வாழும் தினமலர் ஐயர் வகைறாக்கள் இதை தீர்மானிக்க கூடாது.

சூசை பர்னாந்து - உவரி.

PUTHIYATHENRAL said...

லிவிங் டுகெதர் என்கிற வெளிநாட்டு கலாசாரத்தை தமிழ் நாட்டுக்குள் கொண்டுவந்தவர் நமது கமல ஹாசன்.... அவரை நமது தமிழ் மக்கள் உலக நாயாயகனே என்று சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.