Jan 22, 2012

தமிழீழமும் காஷ்மீரும் ஒன்றா? அருந்ததிராய்!

JAN 23: சமூக ஆர்வலரான அருந்ததி ராய், காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்கிற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.    

காஷ்மீர் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக சேர்த்து கொள்ளப்பட்ட ஒரு சமஸ்தானமே அன்றி அந்த மக்கள் விரும்பி தங்களை இந்தியாவுடன் இணைத்து கொள்ளவில்லை. படிக்க ">காஷ்மீர் யாருக்கு சொந்தம்! அருந்ததிராய்! 

எது தேவை என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எந்த ஒரு அரசும் அதன் ராணுவமும் மக்களை கொல்லுதல், கொடுமைப்படுத்துதல், காணாமல் போகச் செய்தல், காயப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் தன் மக்களைத் தன்னுடையே தேசத்தில் தங்க வைக்க முடியும் என்பதை நான் நம்பவில்லை. 

தாங்கள் அந்த தேசத்தின் பகுதியாக இருக்க வேண்டும் என்று அந்த மக்கள் நினைத்தால் மட்டுமே நீங்கள் பெருமை கொள்ள முடியும்.  ஒரு தேசத்தின் மீது பற்று கொள்ள வைக்க அதன் குடிமக்களைக் கட்டாயப்படுத்த முடியாது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா மக்கள் மீது ராணுவத்தை ஏவுவதன் மூலம் இதைச் சாதித்திருக்கிறது. மற்றபடி இது இயல்பாக மக்களுக்கு வந்ததல்ல. 

இதில் எந்த ஒழுக்கநெறியும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசு நியாய தர்மங்களுடனும், ஒழுக்கநெறியுடனும் வெளிப்படையான விவாதத்திற்கு வரவேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்குத் தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது என்று நீங்கள் நம்பினால், அதே உரிமையும் விருப்பமும் காஷ்மீரிகளுக்கும் இருப்பதில் தவறில்லை!" என்று குறிபிட்டுள்ளார். 

சிந்திக்கவும்: அருந்ததி ராய் சொல்வது முற்றிலும் சரியே. இலங்கையில் உள்ள தமிழர்களுக்குத் தாங்கள் பிரிந்து தனிநாடாக போகலாம்  என்று "தீர்மானிக்கும் உரிமை" இருக்கிறது என்றுதானே அந்த போராட்டத்தை நசுக்க இந்தியா உதவி செய்தது. அதனால்தானே அமைதிப்படை என்கிற ஆக்கிரம்பிப்பு படை நடத்தியது.   

எங்கே இலங்கையில் தமிழீழம்  அமைந்து விட்டால் அது போல் இந்தியாவில் இருந்து காஷ்மீரை கொடுக்க வேண்டி வருமே. அது போல் நாம் ஒட்டி சேர்த்து வைத்து கொண்ட சமஸ்தானங்களை எல்லாம் திரும்ப கேட்க்க ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயத்தினால்தானே ஒன்றரை இலட்சம் மக்களை கொல்ல கொலை கருவிகளையும், கூலி படைகளையும் கொடுத்துதவியது. 

மக்கள் வாழ்வதற்காகத்தான்  நாடுகளும், எல்லைகளும் சட்டங்களும் மக்களை கொன்று வெறும் எல்லைகளை வகுத்து, நிலங்களை வைத்து தேசியம் பேசி என்ன பிரோஜனம். காஷ்மீர் விசயத்திலும், ஈழத்து விசயத்திலும்,  நடப்பது  ஒன்றே. மக்களின் உரிமை போராட்டங்கள் மதிப்பளிக்கப்பட வேண்டும். இது விசயத்தில் நியாயமாக மக்களின் கருத்துக்களை அறிய வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதுவே நீதியும், நியாயமும் ஆகும்.

7 comments:

Anonymous said...

Very good article thank u.

Anonymous said...

Amaithi padai. Illai theeviravaathapadai.... Tamilan.

Anonymous said...

Suthanthira tamil Eelam nichchayam amaiyum

Anonymous said...

பிரபாகரன் செஞ்சதை மறப்போம் மன்னிப்போம். இந்தியா செஞ்சதை மன்னிக்கமாட்டோம். மறக்கமாட்டோம்.இலங்கைத்தமிழர்கள்= முஸ்லிம்கள் அல்லாத தமிழர்கள்

Seeni said...

good msg!

Anonymous said...

Nalla pathivu nanry

Anonymous said...

இங்கே படித்து பட்டம் வாங்கி விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்க ஆத்து அம்பி ஆகி நாசாவில் வேலை வேலைபார்த்து நாட்டுக்கு பெருமைதேடித்தரும் பார்பன அம்பிகளும் அவர்களது வர்ணாசிரம கூட்டங்களும் ஆகிய தினமலர், தினமணி இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்ட ஆவேசமாக குரல் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கூடங்குளம் பகுதிகளில் கடல் தொழிலை நம்பி இருக்கும் இலட்ச்சக்கனக்கான மீனவர்களின் பிரச்சனை இது. கூடங்குளம் அணு மின்நிலையம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை அந்த பகுதிகளில் தினம் தினம் கடலை நம்பி வாழும் எங்களுக்கே உள்ளது. சென்னையில் வாழும் தினமலர் ஐயர் வகைறாக்கள் இதை தீர்மானிக்க கூடாது.

சூசை பர்னாந்து - உவரி.