Jan 19, 2012

தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து!

JAN 20: தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது.

நியூட்ரினோ என்றால் என்ன? அதனால் மக்களுக்கு என்ன பயன்? இதனால் ஏற்ப்பட போகும் ஆபத்துக்கள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

நியூட்ரினோக்கள் என்கிற அணுத்துகள்கள் இந்த பூமி மட்டும் இல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிறது.  ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன.


சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல எடை அற்றவை என கருதப்பட்டது. ஆனால் 1998ம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது.  நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும்.

கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகளைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது.

நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம். தற்போது இந்த ஆராய்ச்சிக் கூடம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிப்புரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும்.

அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ டிடெக்டர் அமைக்கப்படும். இதைச் சுற்றி, நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ., பரிமாணமுள்ள பாறை இருந்தால் தான், ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து, நிறுத்த முடியும். அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும்.

சரி இதற்க்கு முன்னாள்  கோலார் தங்க வயல் சுரங்கத்தில் செயல்பட்டு வந்த  இந்திய நியூட்ரினோ ஆய்வகம் இந்த 2010 ஆம் ஆண்டு வரையில் என்ன விதமான கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதும், உலக நியூட்ரினோ ஆய்வுகள் இந்த 70 வருடங்களில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதும், இதனால் மக்களுக்கு என்ன பிரோஜனம் என்பதும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய விடயங்கள் ஆகும்.

இதனால் ஏற்ப்படும் ஆபத்துக்கள் என்றவென்று பார்த்தால் தண்ணீர், விவசாயம், காற்று, இப்படி எல்லாம் மாசுபடும். இந்த ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் மிகவும் ஆபத்தானது. இதில்  கசிவுகள்
எதுவும் ஏற்ப்பட்டால் அடுத்து ஒரு போபால் உருவாகும் ஆபாயம் உள்ளது. தேனி மாவட்டத்தின் இயற்கையை கெடுக்க வந்த அரக்கனாகவே இதை பார்க்க முடிகிறது.

இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு எற்ப்பட்டதன் விளைவாள் மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம் மூடியது.

விஞ்சான கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்சி கூடங்களை மற்ற நாடுகள் நடத்துகின்றன என்பதற்காக போட்டிக்கு நாமும் நடத்துவதால் எந்த பயனும் இல்லை.
இது அத்தியாவாசியமான மக்களுக்கு தேவையான ஒரு ஆய்வாக இருந்தாலும் பரவாயில்லை.  மக்களின் அடிப்படைத்தேவைகளே நிறைவு செய்யமுடியாத  இந்தியா போன்ற  நாடுகளுக்கு இது போன்ற ஆய்வகங்கள் தேவையில்லை. மேலும் இது போன்ற அழிவுத்திட்டங்கள் எல்லாம் திட்டமிட்டு தமிழகத்தை நேக்கி நகர்த்தப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

14 comments:

Anonymous said...

And Nutrinos generated by nuclear fission.

Anonymous said...

நியூட்ரினோ என்றால் என்ன என்பதை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறேன்.

by: மாலதி.

Anonymous said...

very good awarness article..

Anonymous said...

Indiavill irunthu Tamil naattai thani naadaaga pirikka vendum....'appathan intha india dog kugalukku puththi varum
J

Anand said...

தமிழன் ரொம்ப நல்லவன்டா, எவ்வளோ அடிச்சாலும் தாங்குவான்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் ஆனந்த் சாரியா சொன்னீங்க... வருகைக்கு நன்றி.

தமிழ் மாறன் said...

தமிழர்கள் என்றாலே இளிச்சவாயர்கள் என்று நினைத்து கொண்டுதான் இந்த வடநாட்டுகாரன் பேரழிவு தொழில்சாலைகளை எல்லாம் தமிழகத்தின் பக்கம் அனுப்பி வைகிறார்கள். நமது மானம் கெட்ட அரசுகளும் அதை பணத்துக்காக தலை அசைகிரார்கள். மலையாளிகளிடம் இந்த பாட்ச்சா பலிக்காது.

மலர்விழி said...

நியூட்ரினோ என்றால் என்ன என்று அறிய ஒரு வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்ததோடு அதன் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்கு நன்றி தோழரே.

kamalakannan said...

நியூட்ரினோ என்றால் என்ன என்பதை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறேன்

நீச்சல்காரன் said...

ஆய்வகங்கள் மூலம் நாம் கண்டுபிடித்தை பொதுவில் வைப்பததால் அறிவு சார் திருட்டு(IP violation) நடக்காதா?
நியூட்ரினோ ஆய்வகமும் போபால் கசிவு எப்படி ஒன்றாகும் என்று புரியவில்லை. ஆய்வகம் என்ன கதிர்வீச்சை வெளியிடுமா?

Anonymous said...

Nalla pathivu valththukkal

Anonymous said...

இங்கே படித்து பட்டம் வாங்கி விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்க ஆத்து அம்பி ஆகி நாசாவில் வேலை வேலைபார்த்து நாட்டுக்கு பெருமைதேடித்தரும் பார்பன அம்பிகளும் அவர்களது வர்ணாசிரம கூட்டங்களும் ஆகிய தினமலர், தினமணி இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்ட ஆவேசமாக குரல் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கூடங்குளம் பகுதிகளில் கடல் தொழிலை நம்பி இருக்கும் இலட்ச்சக்கனக்கான மீனவர்களின் பிரச்சனை இது. கூடங்குளம் அணு மின்நிலையம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை அந்த பகுதிகளில் தினம் தினம் கடலை நம்பி வாழும் எங்களுக்கே உள்ளது. சென்னையில் வாழும் தினமலர் ஐயர் வகைறாக்கள் இதை தீர்மானிக்க கூடாது.

சூசை பர்னாந்து - உவரி.

தமிழ் மாறன் said...

நம்ம மக்களுக்கு என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள்...

Anonymous said...

பரந்த வெளியில் இரண்டு டிஷ்களுக்கு இடையே தகவல் தொடர்பு பரிமாற்ற சோதனைகளில் பெரும் வெற்றி அனுபவிப்பதில் சிறு சிறு உதாரணம்தான், எனது எழுத்துக்களை நீங்கள் இப்போது வாசிப்பதும், உங்கள் உறவினர்களுடன் பேசுவதும், குறித்த நேரத்தில் விமானம் தறை இறங்கிவிடும் என்று சந்தொசபடுவதும்.
இந்த நியூட்ரினோ நுண் பொருள் பரிமாற்ற பரிசோதனையை பூமிக்கு அடியிலேயே நிலைபடுத்தி கொண்டோமானால் communication satilite, இன்னும் கால நிலை,பருவ மாற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்ற எத்தனையோ இடையூறுகளில் இருந்து விலகலாம்.
மிக உயர்ந்த அறிவுசார்ந்த வாழ்க்கை, நிலையை நோக்கி மனித இனம் செல்லுவதில் எப்போதுமே ஈடுபடவேண்டும்.
நாம் நலமாக வாழ்வதற்கு பூமியை சுரண்டி கோடிகணக்கான டன் கணக்கில் சிமெண்ட், இரும்பு, இன்னும் உலோக தளவாடம்களை "பில்டிங்" என்ற புற்றுகள் பெயரில் நிறுத்திவிட்டோம். எனவே நஷ்டம், வீண் என்று பேசுவதற்கு மேலும் எதுவும் இல்லை. பின் வரும் சந்ததியினர் நம்மை விட உயர்வாய் வாழ உணர்ந்து வாழ்ந்து செல்வோம்.

ஆ. செ. சங்கரநாராயணன். ராஜவல்லிபுரம் sankar_29kw @ yahoo.com.