JAN 19: அமெரிக்க காங்கிரசில் இணையதள சொத்துரிமை குறித்து கொண்டு வரப்பட உள்ள இரு மசோதாக்களை எதிர்த்து நேற்று கூகுள், விக்கிபீடியா போன்ற இணைய நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.
விக்கிபீடியா தளம் நேற்று முழுவதும் செயல்படவில்லை. கூகுள் தேடுபொறியில், அதன் பெயர் மீது பெரிய கருப்புப் பட்டை அடிக்கப்பட்டிருந்தது.
இம்மசோதாக்கள் சட்டமானால், இணையதளங்களின் சுதந்திரச் செயல்பாடுகளை முடக்கி விடும் என கூகுள், விக்கிபீடியா போன்ற இணைய நிறுவனங்கள் அஞ்சுகின்றன. அதனால், மசோதாக்களை எதிர்க்கும் வகையில் நேற்று ஒரு நாள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
இவற்றில், விக்கிபீடியா, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. அத்தளத்தை திறந்தால், தேவையான தகவல்களுக்குப் பதில், இரு மசோதாக்கள் பற்றிய விவரங்களும், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு, ஆர்ப்பாட்டத்தைப் பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கூகுள் தேடு பொறியில், "கூகுள்' என்ற சொல், கருப்புப் பட்டையால் அடிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த போராட்டத்திற்கு இணையதள ஜாம்பாவான்களாகிய Facebook, "ரெட்டிட்', "ட்விட்டர்' உள்ளிட்ட பிற இணையதளங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிந்திக்கவும்: பத்திரிக்கை சுதந்திரத்திலும் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இலங்கை இனவாத அரசை தொடர்ந்து சமீபத்தில் இந்திய அரசும் இணையதளங்களுக்கு கெடுபிடி கொடுக்க புதிய சட்டம் கொண்டுவரும் முயற்ச்சியில் இறங்கி இருக்கிறது. இது ஊடகங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள பெரும் சாவால். இதை எதிர்கொள்ள இணையதள ஜாம்பவான்களோடு நாமும் குரல் கொடுப்போம்.

*மலர்விழி*
2 comments:
பத்திரிகை சுதந்திரத்தை தடை செய்வதால் இவர்கள் அடிக்கும் கூத்துகளை மக்களுக்கு தெரியவிடாமல் ஆக்கி விடலாம் என்பதே இவர்கள் எண்ணம்.
...ராஜா
Like your writings most of the times. Definitely, good people like you should read the contents of the following site. Read Ali Sina's writings. Continue good work.
www.faithfreedom.org
Post a Comment