Jan 12, 2012

மத்திய அரசுக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?

JAN 12: தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்குவதையும், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களை கடத்தி செல்வதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் இந்த தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை. இந்தநிலையில் நாகையை சேர்ந்த 13 மீனவர்கள் கடத்தப்பட்டு உள்ளனர்.


இப்படி பட்ட ஒரு அரசைத்தான்   நாம் நடுவண் அரசு என்று சொல்கிறோம். இந்த அரசுக்கு நாமும் கட்டுப்பட்டு  தேசியம் பேசி, நாம் இந்தியர்கள் என்று மார்தட்டி கொள்கிறோம். போலி தேசபக்தி முகமூடி அணிந்து, தமிழர் என்கிற அடையாளம் இழந்து இந்தியன் என்று மார்தட்டி கொண்டதன் விளைவை இப்போது அனுபவிக்கிறோம்.

மத்திய மனிதாபிமானம் இல்லாத அரசு உதவி செய்யும் என்று நம்பி ஏமாந்தது போதும்.
தமிழக மீனவர்களை பாதுகாக்க தமிழர்கள் தயாராக வேண்டும். தமிழகத்தில் மீன்பிடி தொழிலை நம்பி பல லட்சம் மக்களும், படகுகளும் உள்ளன. இவர்கள் தங்களுக்கு என்று ஒரு பாதுகாப்பு படையை நிர்மாணிக்க வேண்டும். வெறி கொண்டு அலையும் சிங்கள கடல் படைக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இதற்க்கு தமிழக அரசு முழு உதவியும், தற்காப்பு ஆயுத பயிற்ச்சியும் தமிழக மீனவர்களுக்கு அளிக்க வேண்டும். இதுவே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.

ரௌத்திரம் பழகு 
...ஈழப்பிரியா...

6 comments:

Anonymous said...

மத்திய அரசா அப்படி ஒன்று இருக்கவா செய்யுது. மானம் ஈனம் இல்லாத பொருக்கி அரசு என்று போட்டிருந்தால் பொருந்தும். BY: RAJA.

R.Puratchimani said...

// போலி தேசபக்தி முகமூடி அணிந்து//
தமிழனின் தேசபக்தி போலியானது அல்ல. அதே நேரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை கண்டனத்திற்கு உரியது.

Adirai Seithi said...

nice

http://adiraiseithi.blogspot.com/

Anonymous said...

இந்தியா மனிதாபிமானம் என்றால் என்ன? எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்க்கும்.

Anonymous said...

நல்லபதிவு தமிழர்களின் தேசபக்தியை குறை சொல்ல முடியாது அதை மதிக்காத ஹிந்தி இந்தியாவை நல்ல குறை சொல்லலாம்..... மாலதி.

Anonymous said...

இங்கே படித்து பட்டம் வாங்கி விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்க ஆத்து அம்பி ஆகி நாசாவில் வேலை வேலைபார்த்து நாட்டுக்கு பெருமைதேடித்தரும் பார்பன அம்பிகளும் அவர்களது வர்ணாசிரம கூட்டங்களும் ஆகிய தினமலர், தினமணி இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்ட ஆவேசமாக குரல் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கூடங்குளம் பகுதிகளில் கடல் தொழிலை நம்பி இருக்கும் இலட்ச்சக்கனக்கான மீனவர்களின் பிரச்சனை இது. கூடங்குளம் அணு மின்நிலையம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை அந்த பகுதிகளில் தினம் தினம் கடலை நம்பி வாழும் எங்களுக்கே உள்ளது. சென்னையில் வாழும் தினமலர் ஐயர் வகைறாக்கள் இதை தீர்மானிக்க கூடாது.

சூசை பர்னாந்து - உவரி.