Nov 15, 2011

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!

தமீழ உணர்ச்சி கவிஞசர் காசியானந்தனின் கவிதை வரிகளில் இருந்து நான் பெற்ற கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அவர் தனது கவிதை ஒன்றில் "கொல்லாதவன் உனக்கு மகாத்மா" கொன்றவனை கொல்கிறவன் எனக்கு மகாத்மா" என்று சொல்லி இருப்பார்.

அநீதம் இழைக்கப்பட்ட மக்கள் அதாவது முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், இயலாதவர்கள்  இவர்கள் கேட்கிறார்கள் இந்த அநியாய காரர்களை அழிக்க யாரும் முன்வரமாட்டார்களா என்று. அந்த பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்கிறது இந்த கவிதை வரிகள்.

ஈழத்திலே கொல்லப்பட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உறவுகளின் குரலாய் ஒலிக்கிறது இந்த கவிதை வரிகள். இனப்படுகொலை நிகழ்த்திய சிங்கள பயங்கரவாதிகளை அழிக்க வருபவர்களே எங்களுக்கு மகாத்மா என்று உணர்ச்சி பொங்க  சொல்கிறது அந்த கவிதை வரிகள்.

அமைதி படை என்கிற ஆக்கிரமிப்பு படை மூலம் சமாதனம் செய்ய வருகிறோம்  என்று  சொல்லி சமாதிகள் எழுப்பிய அநியாயகாரர்களை, ஈழத்து விடுதலை தீயை அணைக்க சிங்கள பேரினவாதத்திற்கு ஆயுதம் கொடுத்து உதவியவர்களை தண்டிக்கும் மகாத்மா யார் என்று கேள்வி கேட்கிறது அந்த கவிதை வரிகள்.

ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா என்று  ஈழத்து படுகொலைகளுக்கு பழி  தீர்க்கப்பட வேண்டும் என்பதை சொல்லும் வீர வரிகள் அந்த கவிதை வரிகள்.

தமிழக மீனவர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படும்போது வேடிக்கை பார்த்தும், மீனவர்கள் கடல் எல்லை தாண்டி போககூடாது என்று எச்சரிக்கை செய்யும் அதிகார வல்லூறு அரசை நோக்கி இவர்களை அழிக்க வருபவர்கள் யாரோ அவர்களே எங்களுக்கு மகாத்மா என்று மாண்டுபோன மீனவர்களின் குரலாய் ஒலிக்கிறது.

சத்திஷ்கர் மாநில பழங்குடி மக்களை  காட்டு வேட்டை என்கிற பெயரிலே  வேட்டையாடியவர்களை தண்டிப்பவர்களே எங்கள் மாகாத்மாக்கள். போபால் விசவாய்வு கசிவில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வழங்காத அரசு இயந்திரத்தையும், நீதி துறையையும் தண்டிக்க வல்லவர்களே எங்களுக்கு மகாத்மாக்கள் என்று வீரத்தோடு முழங்குகிறது இந்த கவிதை வரிகள்.

ஒரிசாவிலே கற்பழிக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரி பெண்களின் குரலாய், காரோடு எரித்து கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய கிறிஸ்தவ பாதிரியார், மற்றும் அவரது பிஞ்சு குழந்தைகளின் குரலாய் அது ஒலிக்கிறது. குஜராத், பகல்பூர், மீரட், பீவாண்டி, கோவை, மும்பை, நெல்லி, ஒரிசா, ஆகியவற்றில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா  நடத்திய  கலவரங்களினால் கொல்லப்பட்ட சிறுபான்மை இன மக்களின் குரலாய் அது ஒலிக்கிறது.

லஞ்சம், மற்றும் ஊழல், ஜாதிகொடுமை, மதகலவரங்கள், ரவுடிசம், இவற்றால் பாதிக்கப்பட்ட  அப்பாவி மக்களின் குரலாய் இது ஒலிக்கிறது. உங்களில் யார் மாகாத்மா ஆக போகிறீர்கள். என்று கேள்வி எழுப்பும் அருமையான வரிகள் நிறைந்த  கவிதை இது. இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி சொலுத்தும் மகாத்மாவாக ஒவ்வொரு மனிதனும் உருவெடுக்க வேண்டும்.

நம் கண்முன்னே நடக்கும் தீமைகளை பார்த்து கொண்டு, இனவாதம் மதவாதம் பேசாமல் பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி செலுத்தவும், பாதிப்பை ஏற்ப்படுத்தும் மனித குல விரோதிகள் அவர்களது செயல்களுக்கு ஏற்ப தண்டனை பெற வழி செய்யும் மகாத்மாவாக ஒவ்வொருவரும் தங்களை வார்த்தெடுக்க வேண்டும். எல்லாவிதமான அநீதிகளுக்கும் எதிராய் நியாத்தின் குரலாய் நம்மை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதே அந்த கவிதை வரிகள் தரும் பாடமாகும்.
நட்புடன்: மலர்விழி.

16 comments:

Unknown said...

காசி அவர்களின் கவிதை வரிகளை எடுத்துக் கொண்டு
சரியான சாட்டையடிக் கேள்விகளை எழுப்பியுள்ளீர்
அருமை!

புலவர் சா இராமாநுசம்

Anonymous said...

புரட்சி கவிஞ்சர் காசி ஆனந்தின் கவிதை வரிகளை உங்களது சிந்தனையில் செதுக்கி ஒரு பதிவாக வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்.

by: RAJA.

தமிழ் மாறன் said...

புரட்சி கவிஞ்சரின் கவிதையை வரிகளில் ஒரு அற்புதமான வரி அவைகள் "கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!" இந்த வரிகள்தான் வருங்காலத்தில் ஒவ்வொரு தமிழனையும் சிங்கள வந்தேறிகளுக்கு எதிராய் மாற்ற போகும் வரிகள். வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தும் வரிகள். போலி தேசபக்தியை ஒழித்து நம்மை தமிழன் என்று சொல்ல வைக்கும் வரிகள். கவிஞ்சரின் வரிகளை உங்கள் சிந்தனையில் செதுக்கி கொடுத்தமைக்கு நன்றி. ஈழத்தையும், தமிழகத்தையும் இணைக்கும் அந்த படம் அழகோ அழகு. நன்றி மலர் விழி.

தமிழ் மாறன் said...

மனம் தளர்ந்து போன தமிழர்களுக்கு உற்ச்சாகம் கொடுக்கும் கவிஞ்சரின் அந்த வரிகள். அதை பதிவாக்கியமைக்கு நன்றி.

VANJOOR said...

CLICK AND READ


****
முஸ்லீம்களுக்கிடையே சர்ச்சை உண்டாக்க தினமல(த்தின்)ரின் முயற்ச்சி. தினமல(த்தின்) ரின் திருகுதாள திருவிளையாடல்.

“முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர். “ என்ற‌ தினமல(த்தின்)ரின் பொய்யான மற்றும் தவறான செய்திக்கு மறுப்பு அறிக்கை தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. பொய்யான மற்றும் தவறான வெளியிடும் தினமலர்.
****

.

Anonymous said...

saakacheyvanai saaka seyyaamal saakindraaye thamizha ...(ithuvum avarthaan)

suvanappiriyan said...

சிந்திக்க வைக்கும் கவிதைகள்! சிறந்த பதிவு . வாழ்த்துக்கள்.

Anonymous said...

அருமையான வரிகள்.

உலகெங்கும் கிறிஸ்துவர்களையும் இந்துக்களையும் கொல்லும் முஸ்லீம் போராளிகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?

மும்பையில் குண்டு வைத்து இந்துக்களை கொல்கிற நமது போராளிகளும், டெல்லியில் தீபாவளி கும்பலில் இந்துக்களை கொல்கிற நமது போராளிகளும், பாகிஸ்தானில் இந்துக்களை கொல்கிற நமது தாலிபான் போராளிகளும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.

அந்த கொலைகளுக்கு எதிராக இந்துக்கள் எழுந்து வரக்கூடாது. வந்தால் முட்டியை பேர்ப்போம் என்றும் சொல்லியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
-

Unknown said...

கருத்து சொல்ல அழைத்தமைக்கு நன்றி! இனிமேல் தமிழர் நலன் குறித்தும், மேம்பாடு குறித்து மட்டுமே விவாதித்து செல்லலாம் என விழைகிறேன்!

காசி அய்யாவின் வரிகளை,கவிதை நயத்திற்காக மட்டுமே ரசிப்போம்! மறந்துவிட்ட சோக வரலாறுகளை நினைவூட்டுவதற்காக என அறிவில் ஏற்றுக் கொள்வோம்! வன்முறைகள் இனி வேண்டாம்!

சந்தர்ப்பம் வரும்வரை காத்திருப்போம்! சேதாரம் இல்லாமல் லட்சியத்தை அடைய, காலம் வரும்.. காத்திருப்போம்!

Anonymous said...

//அருமையான வரிகள். உலகெங்கும் கிறிஸ்துவர்களையும் இந்துக்களையும் கொல்லும் முஸ்லீம் போராளிகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?

மும்பையில் குண்டு வைத்து இந்துக்களை கொல்கிற நமது போராளிகளும், டெல்லியில் தீபாவளி கும்பலில் இந்துக்களை கொல்கிற நமது போராளிகளும், பாகிஸ்தானில் இந்துக்களை கொல்கிற நமது தாலிபான் போராளிகளும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.

அந்த கொலைகளுக்கு எதிராக இந்துக்கள் எழுந்து வரக்கூடாது. வந்தால் முட்டியை பேர்ப்போம் என்றும் சொல்லியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.//

ஹிந்துத்துவா நடத்திய கலவரங்களின் பின் விளைவே அதற்க்கு பின்னால் நடத்த மும்பை குண்டு வெடிப்பு. மற்றபடி இந்தியாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கமே.
மக்க மஸ்ஜித் குண்டுவெடிப்பு முதல் மேலேகோன் குண்டுவெடிப்பு வரை.

இது உங்கள் சந்தர்ப்ப வாதத்தையே காட்டுகிறது. முஸ்லிம்கள் சிறு விசயத்தை செய்தாலும் அதை ஊதி பெரிதாக்க இந்திய பார்ப்பன ஊடகங்கள் முதல் cnn , bbc வரை உள்ளது. அந்த சம்பவங்கள் நடந்த உடன் தொடர்ந்து ஒருமாதங்களுக்கு அல்ல கூடுதலாக கூட அதைப்பற்றியே தலையங்கமும், சிறப்பு கட்டுரைகளும் உலகில் உள்ள எல்லா பத்திரிக்கையும் வடித்து முடித்திருக்கும்.

அதனால் நீங்கள் எல்லோரும் நினைத்து கொண்டீர்கள் நம்ம ஹிந்துக்கள் எல்லாம் யோக்கியர்கள் இங்கே தீவிரவாதிகள் இல்லை என்று. நம்மில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தை பற்றியும் அது நடத்திய தொடர் குண்டு வெடிப்புகளை பற்றியும் ஏன் வாய்திறக்க வில்லை எந்த ஹிந்து பத்திரிக்கையும். இஸ்லாமியர்களுக்கு என்று பத்திரிகை துறை இல்லையென்பதால் இந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் நடத்தும் கலவரங்களுக்கு பதில் நடவடிக்கையாக அவர்கள் செய்யும் செயல்களை மட்டும் பெரிதாக ஊதி தள்ள முடிகிறது.

அரசு இயந்திரங்கள் முதல் உலவுத்துரைவரை நமது ஹிந்துத்துவா ஊடுருவி இருப்பதால் அந்த சிறுபான்மை மக்ககளுக்கு எதிராக ஹிந்துத்துவா நடத்தும் அநீதிகள் வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது. அந்த என்ணத்தை போக்கவே வினவு, போன்ற மார்சிசிய சிந்தனை படைத்த இணையங்களும், தமிழர் இணையங்களும், கடவுள் மறுப்பு இயக்ககளும் தொடர்ந்து ஹிந்துத்துவா பற்றி வெளிவராத உண்மைகளை வெளி கொண்டு வருகின்றன.

இதுவும் உங்களுக்கு பிடிக்கலையா? ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தானே. தமிழர்கள் அறிவார்கள் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை பற்றி உங்களை போல் உள்ள தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளர்களுக்கே இந்த செய்தி பகிரப்பட்டுள்ளது என்று நம்புகிறேன்.

நீங்கள் தினமும் தினமணி தினமலர் படித்தால் போதுமே அதில்தான் சிறுபான்மை மக்கள் செய்யாததை எல்லாம் செய்ததாக எழுதுவார்களே. இப்படி ஆயிரம் பத்திரிக்கைகள் இருக்கும்போது அப்போ எல்லாம் அதை சந்தோசமாக படித்தீர்களே. எதனை இடங்களில் தலையங்கத்தில் தினமலர் விஷம் கக்கி விட்டு பின்னர் ஒரு ஓரத்தில் சிறிதாக மறுப்பு போட்டது என்று உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தேவை ஏற்ப்படும் போது கிறிஸ்தவர்களை உங்கள் கூட சேர்த்து கொள்கிறீர்களே அது என்ன திடீர் பாசம். (உலகெங்கும் கிறிஸ்துவர்களையும் இந்துக்களையும் கொல்லும்) என்று சொல்றீங்கள். ஏதோ கிறிஸ்தவர்கள் ரொம்ப அமைதியா சாத்வீகம் பேசுவது போல். அவர்கள் அரசுகளை கையில் வைத்து கொண்டு நாடு பிடிப்பதும் ஆப்பிரிக்காவில் பழங்குடி மக்கள் கையில் ஆயுதங்களி கொடுத்து முஸ்லிம்களை கொள்ளவதும் நீங்கள் அறியாததா?

அதனால் பயங்கரவாதம் யார் செய்தாலும் பயங்கரவாதமே. முதலில் பயங்கரவாதம் என்றால் தீவிரவாதம் என்றால் என்ன வென்று புரிந்து கொள்ளுங்கள். பாலஸ்தீன் மக்களின் போராட்டத்தை இந்த பார்ப்பன வந்தேறி தினமலம், தினமணி எல்லாம் சேர்ந்து தீவிரவாதம் என்று சொல்லும் அது அந்த மக்கள் தங்கள் சொந்த மண்ணை மீட்க்க நடக்கும் போராட்டம், அதுபோல் காஷ்மீர், ஆப்கானிஸ்தான் இவை எல்லாம் அந்த லிஸ்டில்தான் வரும்.

பாகிஸ்தான் செய்வது கூட தவறு கிடையாது முதலில் இந்தியாதான் பாகிஸ்தானில் இருந்து பங்களாதேசை பிரித்து கொடுக்க படை அனுப்பியது அதையும் புரிந்து கொள்ளுங்கள் இது இரு நாடுகளின் குடுமி சண்டை இதில் ஏன் இஸ்லாமியர்களை இழுகிறீர்கள். இது இந்தியன் பாகிஸ்தானி இப்படி சொல்லுங்கள். இந்த இரண்டு அநியாய காரர்களின் சதிகளால் அப்பாவி மக்கள் இருதரப்பிலும் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்திய அரசு பயங்கரவாதிகள் என்று சொல்லுங்கள், பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் என்று சொல்லுங்கள். இங்கிருந்து வந்தது இதில் ஹிந்து மதமும், இசுலாமிய மதமும்.

தமிழ் மாறன் said...

Blogger ///ரமேஷ் வெங்கடபதி said...கருத்து சொல்ல அழைத்தமைக்கு நன்றி! இனிமேல் தமிழர் நலன் குறித்தும், மேம்பாடு குறித்து மட்டுமே விவாதித்து செல்லலாம் என விழைகிறேன்! காசி அய்யாவின் வரிகளை,கவிதை நயத்திற்காக மட்டுமே ரசிப்போம்! மறந்துவிட்ட சோக வரலாறுகளை நினைவூட்டுவதற்காக என அறிவில் ஏற்றுக் கொள்வோம்! வன்முறைகள் இனி வேண்டாம்!//

வணக்கம் ரமேஷ் வேங்கடாபதி அண்ணே இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. எங்கள் கோவை மாவட்ட லெப்டினட் கேணல் நீங்கள்தான். வருங்கால எங்கள் போராட்டத்தின் கோவை மாவட்டத்து தளபதிக்கு எனது வாழ்த்தை முதலில் தெரிவித்து கொள்கிறேன். உங்கள் முறுக்கு மீசையும் தோற்றமும் எங்கள் மூதாதையர் ஆன வீரத்தமிழர்களின் தோற்றத்தை நினைவு படுத்துகிறது.

அழகாக சொன்னார் வீர கவிஞ்சர் கொல்பவனை கொல்கிறவன் எனக்கு மகாத்மா என்று புரட்சி கவிஞ்சரி காணொளியை பாருங்கள் எப்படி எங்கள் வீர தமிழச்சியின் பெண்மை உறுப்பில் உண்டுகளை வைத்து வெடிக்கச்செய்தான் சிங்கள கயவன் என்று இதை கேட்ட்கும் போது ஒவ்வொரு தமிழனின் ஆண்மை வெளிப்பட வேண்டும் நம்குல பெண்களை சீரழித்த கயவர்களை பழிதீர்க்க நம்மில் ஆண்மகன் இல்லையா.

எம்குல தமிழ் பெண்கள் ஆண்மக்களை பெறவில்லையா? ஈழத்து தென்ற இசை ப்ரியாவை பாருங்கள் என்ன நடந்தது எப்படியெல்லாம் அவர் கேவலப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். உங்கள் மீசைகள் முறுக்கேற வில்லையா.
எங்கே போனது உங்களது ஆண்மை. பேச கூட உங்களுக்கு பயமா? எழுத கூட பயமா? உங்களை சொல்ல வில்லை அண்ணே தப்பா நினைக்காதீன்கள்.

நீங்கள் நமது வருங்கால கோவை தளபதிகளில் ஒருவர். நீங்கள் எங்களை விட்டாலும் நாங்கள் உங்களை விட மாட்டோம். என்றும் நட்புடன் அன்புடன்- தமிழ் மாறன்.

Unknown said...

தம்பி மாறன்! வஞ்சப் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் நன்றி! என்பால் இலக்கு கொண்ட வன்மம் வெற்றி கொடுக்க வாழ்த்துக்கள்!

தீவிர சிந்தனைகள்பால் எனக்கு ஆர்வமில்லை! உமது சிந்தனைகளோடு வேறுபடுவதால் தொடர இயலாது! சேர்ந்து இயங்க இயலாது!

பயம் வேண்டும்! தன்னை நம்பியுள்ள மனிதருக்கு தன் செயலால் தீங்கு நேரக்கூடாது எனும் பயங்கலந்த எச்சரிக்கை உணர்வு தலைவனுக்கு தேவை! உணர்ச்சிகளை உசுப்பிவிடுவது மட்டும் அல்ல! ஆவேசம் மட்டுமே தலைமைப் பண்பல்ல!

நடந்த சம்பவங்களை பேசிப் பயனில்லை! எதிர்காலத் திட்டங்களை எடுத்துச் செல்வதில் மட்டுமே பாதை பயனளிக்கும்!- என்பது எனது கருத்து!

பதிவுகளும், பின்னூட்டங்களும் செய்தியை கொண்டு செல்லவே அன்றி, மேலும் காயங்களை ஏற்படுத்த அல்ல!

மீண்டும் பிறிதொரு பொழுதில் சந்திப்போம்!வாழ்த்துக்கள்!

Anonymous said...

We have to broke India soon .....

Anonymous said...

Narumaiya sonnengal ovvoru thamilanum sinkala kayavarkalukku yethira poorpuriya thuniyanum

ம.தி.சுதா said...

அவரது வரிகள் அவர் ஊர் போலவே மிகவும் இனிமையானது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

Anonymous said...

தமிழ் மாறன் அவர்களே, இலங்கையின் வரலாறு தெரியாமல் பேசாதீர்கள்.

இந்தியாவில் பார்ப்பன ஆரியர்கள் வந்தேறு குடிகள் என்பதற்காக, இலங்கையில் சிங்களவர்கள் வந்தேறு குடிகள்
ஆகிவிட மாட்டார்கள்.

இலங்கையின் ஆதி குடிகள் சிங்களவர்களே. சிங்களம் என்ற மொழி இலங்கையில் மட்டுமே உள்ளது, உலகில் வேறு எங்குமே இல்லை.
அப்படிஎன்றால் எங்கிருந்துதான் வர?

தமிழர்கள் தான் வந்தேறு குடிகள். ஆதாரம் வேண்டுமா? தமிழுக்கொரு புலவன் எனப் புகழப் படும் பாரதியை கேட்கவும்.

பாரதி சாதாரண ஆள் இல்லை,பிரஞ்சு,ஆங்கிலம் உட்பட 14 மொழி அறிந்தவன் என்று நீங்கள்தான் பீத்துகிண்றீர்கள்.
அவன் என்ன சொன்னான்?

அது செய்வோம், இது செய்வோம் என்று பாட வந்தவன், சிங்களத் தீவிட்கொரு பாலம் அமைப்போம் என்றானே,அவன் உண்மையை
சொல்லிவிட்டான்.

தமிழகத்தில் இருந்து கண்டிக்கோ, இல்லை சிங்களவன் வாழு மாத்தறைக்கோ பாலம் அமைக்க முடியாது என்பது பாரதி உட்பட,
அனைவருக்கும் தெரியும்.

பாலம் அமைக்க இலகுவான வழி தலைமன்னார் இல்லை யாழ்ப்பாணம், எதுவென்றாலும், அது சிங்கள் தீவுதான்.
சும்மா கூக்குரலிடுவது போல ஈழம் அல்ல, ஈழம் என்பதெல்லாம் ஒரு நவீன,சாத்தியமற்ற கற்பனையே.


Nivas
Sri Lanka