Jul 24, 2011

இலங்கை உள்ளாட்சி தேர்தல்! தமிழர் கட்சி அமோகம் வெற்றி!


July 25, : இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வடபகுதியில் உள்ள 20 இடங்களில் 18 இடங்களில் விடுதலைப்புலிகள் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டணி (டிஎன்ஏ) அமோக வெற்றி பெற்றது. இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின.

மொத்தமுள்ள 65 கவுன்சில்களில் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி (யூபிஎப்ஏ) 45 இடங்களில் வெற்றி பெற்றாலும், தமிழர்களின் முக்கிய பகுதியான கிளிநொச்சி மற்றும் வடக்கு பகுதியில் உள்ள 20 இடங்களில் 18 கவுன்சில்களில் டிஎன்ஏ அமோக வெற்றி பெற்றது.

மீதமுள்ள 2 இடங்களில் ராஜபக்சே அமைச்சரவையின் தமிழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழம் மக்கள் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.

இதற்கிடையில், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிரான வீரசிங்கம் அனந்த சங்கரேயின் தமிழ் ஐக்கிய விடுதலை கட்சி 2 இடங்களையும் பிடித்துள்ளது. மேலும் முக்கிய சிங்கள எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி (யுஎன்பி) மற்றும் மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சிகள் அனைத்து இடங்களில் தோல்வி அடைந்தன. குறிப்பாக யுஎன்பி கைவசம் வைத்திருந்த 3 இடங்களையும் இழந்தது.

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த உள்ளாட்சி தேர்தலில் விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சியான டிஎன்ஏ வட பகுதியில் பெருபான்மை பெற்றிருப்பது தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் பகுதியில் ராஜபக்சே கூட்டணி பெரும்பான்மை பெற்ற போதிலும், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தோல்வி கண்டது ராஜபக்சே மீதான தமிழர்களின் எதிர்ப்பு பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் வாக்களித்துள்ளனர். தென் பகுதியில் இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் ஜேவிபி ஆகிய கட்சிகள் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள தேர்தல் விதிமுறைகளின்படி, கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் கவுன்சில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.

மொத்தம் உள்ள 65 கவுன்சில்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி (யுபிஎப்ஏ) 512 இடங்களைப் பெற்றுள்ளது. டின்ஏ 183 இடங்களைப் பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான யுஎன்பி 137 இடங்களையும் ஜேவிபி 13, டியுஎல்எப் 12 இடங்களையும் பெற்றுள்ளது.

No comments: