Jul 31, 2011

கர்நாடக பா.ஜ.க.,வில் குழப்பம் கலக்கத்தில் ஹிந்துத்துவா!

JULY 31, பெங்களூரு: கர்நாடக பா.ஜ.க.,வில் குழப்பம். எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து கர்நாடக பா.ஜ.க.,வில் குழப்பம் நிலவுகிறது.எடியூரப்பா, சதானந்த கவுடாவை முதல்வராக்க பரிந்துரை செய்திருந்தார்.

எதிர்தரப்பிரனர் அனந்தகுமார், ஜெகதீஷ் சட்லரை முதல்வராக்க ஆதரவு தெரிவித்தனர். இதனால் முடிவு எடுக்க முடியாமல் கர்நாடக பா.ஜ.க., வில் குழப்பம் நீடிக்கிறது.மேலும் பா.ஜ.க., கூட்டம் நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டது.

சிந்திக்கவும்: ஒரு மாநிலத்தில் ஒழுங்கா ஆட்சி செய்ய முடியவில்லை. மாநில முதல்வரே ஊழலில் சிக்கி கொண்டார். இவரை ராஜினாமா செய்யவைக்க பாரதிய ஜனதா தலைமை பட்டபாடு இருக்கிறதே பெரிய கோமாளித்தனம். எடியூரப்பா ஒருவகையாக ராஜினாமா செய்ய ஒத்துக்கொண்டார் அதே நேரம் தனக்கு மாநில பாரதிய ஜனதா தலைவர் பதவியை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலே அதற்க்கு சம்மதித்தார்.

ஒரு மாநிலத்தை ஒழுங்கா ஆட்சி செய்ய முடியாத இவர்கள்தான் மொத்த இந்தியாவையும் ஆட்சி செய்ய துடிக்கிறார்கள். இவர்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால் நாடு மதகலவரத்தால் சுடுகாடாகும் என்பதில் சந்தேகம் என்ன இருக்கிறது. இந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கர்நாடகாவில் பண்ணிய கூத்தை மக்கள் மறக்க மறக்கவில்லை வரும் தேர்தலில் சரியான செருப்படி கொடுப்பார்கள் என்று நம்புவோம்.

No comments: