JUNE 5, உறவுகளுக்கு வணக்கம், இன்று சில கேள்விகளுடன் வந்துள்ளேன் ... அவற்றை உங்களுக்குள்ளேயே கேட்டு பதிலும் சொல்லிகொள்ளுங்கள்.
* நீங்கள் உங்களை எவ்வளவு மதிக்கிறீர்கள்?
* மற்றவர்கள் உங்களை மதிக்கவேண்டும் என்று எண்ணும் நீங்கள் உங்களுக்கு அளிக்கும் சுயமதிப்பு எவ்வளவு?
தனக்குத்தானே மதிப்பளிக்காத மனிதனும்.. மனோதிடம் இல்லாதவனும் தான் ஆதரவுக்கு பற்றுக்கொம்பைத் தேடுகிறான்.
"இவ்வாறானவர்கள் தான்" தன்னை மகான் என்றும், யோகி என்றும் சொல்லிக் கொள்பவர்களின் இலக்கு!
இந்தக் கயவாளிகள் மனித மனஓட்டத்தை மிகநன்றாய் அறிந்தவர்கள் .
நீங்கள் போய், இவ்வாறான ஒரு போலியின் முன் நிற்கிறீங்கள் என்று வைத்துக்கொள்வோம் ... அவர் முதலில் சொல்வது,
" நீ மிகவும் நல்லவன் ஆனால் உன்னைச்சுற்றி இருப்பவர்கள் அவ்வாறானவர்கள் அல்ல ...
"நீ வாழ்வில் மிகுபல துயரங்களைக் கொண்டிருக்கிறாய், உன்காயங்கள் அனைத்தையும் நான் ஆற்றுவேன், உனக்கு நிம்மதியும் அமைதியும் அளிப்பேன் " இதுதானே?
இதுதான் ஒவ்வொரு மனிதனின் நினைப்பும், பலவீனமும் இதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் இந்தப்போலிகள்.
மெய்யான யோகிகள் நிறையவே இருந்திருக்கிறார்கள் ..அனால் அவர்கள் யாரையும் தன்னைப்பின்பற்றச் சொல்லவோ... ஆசிரமம் அமைத்து சுகவாழ்வு வாழவோ இல்லை.
மாறாக இந்தச் சமூகத்தில் தானும் ஒரு அங்கமாக வாழ்ந்து தன் வாழ்கையை மக்களுக்குப் பாடமாக விட்டுச்சென்றுள்ளனர். பின்வரும் தலைமுறையினர் அறிய வாழ்கை நெறிகளை எழுதிச்சென்றுள்ளனர்.
அவ்வாறனவை தான் தூதர்களும், வேத நூல்களும், விவிலியமும் நம் தமிழ்கொண்ட பல்லாயிரம் நன்நூல்களும்.
அறம், பொருள், இன்பம் என முப்பாலையும் தன்னுளம் அடக்கி முப்பாலுக்கு அப்பால் எதுமே இல்லை எனுமளவு வாழ்வுநெறி அனைத்தையும் சொல்லும் குறளும்,
நல்வழி காட்டும் நன்னூலும், வாழ்வின் இனியவை சொல்லும் இனியவை நாற்பதும், இன்னாதான சொல்லும் இன்னாநாற்பதும் , , மனநலம் பேண மருந்துகள் சொல்லும் திரிகடுகமும் என்னவளம் இல்லை எம் தமிழ் மொழியில் ..!!
உறவுகளே நாம் மனதாலும் உடலாலும் மிகவும் நொந்திருக்கிறோம் . இழப்புகள் இல்லாத வீடுகள் உண்டா ஈழத்தில்? சொந்தபந்தங்களையும் தாய்மண்ணையும் தொலைத்து நாதியற்று நிற்கின்றோம். நமக்கான கடமைகள் கடலளவு காத்திருக்கின்றன .
பதுங்கு குழிகளில் மூச்சுத்திணறிய நினைவுகளும், உலங்கு வானூர்திகளின் சத்தமும், பூட்சு அணிந்த இரும்புத் தொப்பிகளின் சத்தம் கேட்டு நடுங்கும் பிஞ்சுகளை அணைத்தபடி எத்தனை இரவுகள் உறக்கமின்றிக் கழித்திருப்போம்?
புலம்பெயர்ந்த தேசத்தில் அரச வாழ்கை இல்லையென்றாலும் ...அடுத்த நாள் உயிரோடிருப்போம் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறோம். இளைப்பாறல் அவசியம்தான் அதற்காக இந்தப்போலிகளின் மடியிலா புகலிடம் தேடுவது?
நலிந்துபோன நம்மிடம் மீதமிருக்கும் செல்வத்தையும் அதனினும் மேலான நம் பெண்களின் மானத்தையும் களவாடும் இந்தக் கயவர்களின் பித்தலாட்டத்தில் இன்னும் எத்தனை நாட்கள் ஏமாறுவீர்கள் ?
படித்தவர்கள் அதிகம் என சொல்லிக்கொள்ளும் பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பாகும் நம் தமிழ் தொலைக்காட்சிகளைப் பாருங்கள் ... இந்தப்போலிசாமியார்களின் விளம்பரங்கள் பொங்கிவழிகின்றன.
எனக்கொரு தோழி இருந்தாள், சிங்களப்படைகளின் வெறியாட்டத்தில் உறவுகளை இழந்து அகதியானவள், நெஞ்சுபுடைக்கப் பேசுவாள்.. அழகுநிலையம் ஒன்றில் பணிபுரிந்து தனக்குக் கிடைக்கும் சொற்பக் கூலியையும் அகதியான நம் உறவுகளின் நலனிற்கு செலவிட்டவள்.
ஒருநாள் இந்தியாவில் இருக்கும் ஒரு பிரபல சாமியாரின் பேரைச்சொல்லி அவரிடம் தான் சிஷ்யையாக சேர்ந்து சேவை செய்யப்போவதாக சொல்லிச்சென்றுவிட்டாள். இந்த மாயைகள் ஏன் நமக்கு ?
அப்படி உங்கள் மனதிற்கு அமைதி தேவையெனில் நல்லனவற்றை செய்யுங்கள், யுத்தத்தில் பெற்றோரை இழந்து நிற்கும் பிள்ளைகளுக்கு உதவுங்கள், நம் தேசத்தின் விடுதலைக்கு தன்னாலானதைச்செய்யுங்கள் .
"தன்னைப்போல் பிறரையும் நேசி " என்கிறது விவிலியம் .
"சொர்க்கம் உன் தாயின் காலடியில் " என்கிறது நபிமொழி.
நம் தாய்தேசம் பின்னப்பட்டுக் கிடக்கிறது. அதை சீர்படுத்தி நாளைய தலைமுறையை நமக்கான மண்ணில் தலைநிமிர்ந்து வாழவைக்க வேண்டியது நம் கடமை.
மூடநம்பிக்கைகளின் நிழலில் நித்திரைகொள்ளும் சுகத்தை விட்டொழியுங்கள். இவர்களின் முகத்திரைகள ஒவ்வொன்றாய்க் கிழிய வெளிப்படும் மிருகங்களைப் பாருங்கள் ..இவைகள் அவசியந்தானா நமக்கு?
..............யாழினி.............

4 comments:
உண்மை எமாறுபவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வர்
சித்தர்கள் என்பவர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள், அவர்கள் காடுகளில் ஓர் இறைவனை நினைத்து தவம் இருந்தார்கள். இவர்களை மாதிரி நாட்டில் இருந்து கொண்டு நல்ல தின்று கொளுத்து இருந்தால் பெண் துணை இல்லாமல் வாழ முடியாது. அதுவும் உழைக்காமல் வந்த பணம் இப்படிதான் செய்ய சொல்லும்.
உலகத்தில் ஒரு வசந்தம் இருக்குமானால் பூலோகத்தில் ஒரு சொர்க்கம் இருக்குமானால் அது பெண்ணே! அதனால் துறவறம் என்று சொல்வது வெறும் நடிப்பே. ஊரை ஏமாற்றி பிழைக்காமல் முறைப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தும் வழியை பார்ப்பதை விட்டுவிட்டு. ஏன் இந்த ஏமாற்று வேலை.
நல்ல அழகா சொன்னீங்கள் யாழினி, இந்த மக்கள் ஏன் இப்படி புத்தியை அடகு வைகிறார்களோ.
Post a Comment