Jun 7, 2011

கார்ப்பரேட் சந்நியாசி மேல் நடவடிக்கை வேண்டும்! திமுக!

JUNE 8, யோகா குரு ராம்தேவ் சொத்துக்கள் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது.

டெல்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரம் இருந்த ராம்தேவை போலீசார் வெளியேற்றினர்.

இதையடுத்து ஹரிதுவாரில் ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டார். நான் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ராம்தேவ் சொத்துக்கள் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழு செயலாளர் ஆதிசங்கர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பாபா ராம்தேவ் ஒரு கார்ப்பரேட் சந்நியாசி போல் நடந்துகொள்கிறார். ராம்தேவின் நிதி தொடர்பான நடவடிக்கைகள் பற்றியும், திரண்ட சொத்துக்கள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

1 comment:

Anonymous said...

என் அருமை இந்தியச் சகோதரா! நாம் இந்து, முஸ்லிம் என்ற பாகுபாட்டிலிருந்து வெளியே வருவோம். நீ யாராகவும் இருந்துகொள். ஆனால் முதலில் நீ நல்ல மனிதனாக இருக்க முயற்சி செய். நம் நாட்டில் எத்தனை மனிதர்கள் உணவின்றி செத்து மடிந்துகொண்டிருக்கிரார்கள்? கவணிப்பார் இன்றி அனாதையாய் விடப்படும் குழந்தைகள் எத்தனை? குப்பை தொட்டிகளிலே அனாதையாய் போடப்படும் குழந்தைகள் எத்தனை? அப்படிப் போடப்பட்ட எத்தனை குழந்தைகள் நாய்களால் கடித்துக் குதறப்பட்டு பிணமாயின?



என்றாவது இதுபோன்ற அவலங்களுக்கு எதிராக இந்த RSS தர்மர்கள் போராட்டம் செய்ததுண்டா? ஈரமில்லா நெஞ்சுக்கு இது எங்கே தெரியப்போகிறது? ஏனெனில் இவர்களால் குதறப்பட்ட குழந்தைகளும், பெண்களுமே கணக்கிலடங்காததாயிற்றே. பின்னர் இவர்களுக்கெங்கே தெரியப்போகிறது இந்த நீதி.

-பலவீன இந்தியன்