ஜூன் 20, மைசூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா, 339 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.ரெட்டி சகோதரர்கள் சுரங்க ஊழல், கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற மாநில கவர்னரின் புகார் உள்ளிட்ட விஷயங்களால், எடியூரப்பா சிக்கலுக்கு ஆளானார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவரான சித்தராமையா இப்போது, புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், ""எடியூரப்பாவும் அவரது குடும்பத்தினரும், 339 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.
இது குறித்த ஆவணங்களை நாளை வெளியிடுவேன். ஹன்சூரில் இரண்டு மாணவர்கள் கடத்தி கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை. மைசூரில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்து விட்டது,'' என்றார்.

No comments:
Post a Comment