சென்னை, ஜூன். 29, டெல்லி மேல்-சபை அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்த கே.வி.ராமலிங்கம் தமிழக சட்டசபை தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் அவர் தமிழக அமைச்சராக நியமிக்கப்பட்டு பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து பாராளுமன்ற மேல்-சபையில் தமிழக எம்.பி. பதவி ஒன்று காலியாக உள்ளது. டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளராக ரபிபெர்னாட் நிறுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்துள்ள முடிவின்படி 22-7-2011 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ரபிபெர்னார்ட்டை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேல்-சபை உறுப்பினரை எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. வுக்கு தனி மெஜாரிட்டி இருப்பதால் அந்த கட்சி சார்பில் நிறுத்தப்படுபவரே மேல்-சபை எம்.பி.யாகும் வாய்ப்பு உள்ளது. எனவே ரவி பெர்னாட் போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

No comments:
Post a Comment