JUNE 26, மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் இன்று காலை தொடங்கியது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
அதில் ஈழம் குறித்து அதிகம் பேசப்பட்டது. 21 தலைப்புகளில் 21 வழக்கறிஞர்கள் பேசினார்கள். இறுதியாக அக்கட்சியின் போது செயலாளர் வைகோ பேசினார். அப்போது தனி நாடு கேட்டார் பெரியார், சுய ஆட்சி கேட்டார் அண்ணா, நாங்கள் அப்படி கேட்கவில்லை. ஆனால் இந்த நிலை நீடித்தால் நாடு துண்டு துண்டாக போகும் காலம் வந்துவிடும்....
ஈழத்தில் என் இனம் கொத்து கொத்தாக பாஸ்பரஸ் குண்டு போட்டு அழிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் ஒரு சீக்கிய இளைஞன் தாக்கப்பட்டால் இங்குள்ளவர்கள் குரல் கொடுக்கிறார்கள். என் இனம் அழிக்கப்பட்டபோது பிரிட்டன், இத்தாலி, கனடா போன்ற நாடுகள் குரல் கொடுக்கிறது.
நம் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிர குரல் கொடுக்க வில்லையே. எனக்கு எதற்கு தேசிய ஒருமைப்பாடு என்று கேட்கமாட்டோமா? மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானபோது இந்த தமிழனும் துடித்தான். ஆனால் என் தமிழக மீனவன் 543 பேர் கொல்லப்பட்டபோது மகாராஷ்டிர பிரஜைகள் துடித்தார்களா.
அதுபோல் இந்தியாவில் எங்கு பிரச்சனைகள் நடந்தாலும் தமிழன் அதற்காக குரல் கொடுக்கிறான் ஆனால் அவர்கள் தமிழக மீனவர்கள் விசயத்திலோ, ஈழத்தமிழர் விசயத்திலோ கொடுக்கிறார்களா?
மற்ற மாநிலங்களின் பிரச்சனைகளில் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் தமிழன் விசயத்தில் எந்த நடவடிக்கையும் இல்லையே அது ஏன்? எங்கே இருக்கிறது இந்த தேசத்தில் ஒருமைப்பாடு. ஆனால் இந்த நிலை நீடித்தால் இந்தியா துண்டு துண்டாக போகும் காலம் வந்து விட்டது என்று சொல்லலாம்.
சேனல் 4 ல் காட்டப்படும் காட்சிகளை இந்த உலகம் பார்க்கிறது. பல கொடுமைகள் நடத்தப்படும் காட்சிகளை இங்கிலாந்து பார்லிமென்ட் பார்க்கிறது. இத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சே தண்டனைகளில் இருந்து தப்ப விடலாமா.
இசை ப்ரியாவை கொடுரமாக கேங் ரேப் செய்து கொன்றார்கள். அந்த பெண் சிங்கத்தை சிதைத்தார்கள் சிங்கள காடையர்கள். ஒட்டு மொத்த இன படுகொலையை செய்தார்கள். இதற்க்கு தீர்வு என்ன? சுதந்திரமான தனி ஈழம் தான், அதை பெரும் வரை எனது குரல் ஓங்கி ஒலிக்கும் என் இன விடுதலைக்காக தொடர்ந்து பேசுவேன். உலக நாடுகளே ஜனவரியில் தெற்கு சூடானை வாக்கு எடுத்து உருவாகிநீர்கள். ஈழம் எப்போது.
சேனல் 4 ஒளி பரப்பிய காட்சிகளை கொண்டு போய் அனைத்து தரப்பு மக்களிடமும் சேருங்கள். நாம் என்ன தவறு செய்தோம் தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா? வழக்கறிஞர்கள் என்னோடு வாருங்கள் இனத்தை காப்போம், தன் மானத்தோடு வாழ்வோம்,’’ என்று பேசினார்.
இம்மாநாட்டில் புலிகள் மீதான தடை குறித்து மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசினார். அவர், ’ஹிலாரி கிளிண்டன் உட்பட அனைத்து தலைவர்களும் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள். காந்தியை கொன்ற அமைப்புக்கு தடை இல்லை.
புலிகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில். ஈழத்தில் புலி கொடி பறக்கும். தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும்.
இலங்கை அரசு 2009க் கு பிறகு எங்கள் மண்ணில் புலிகள் இல்லை என்று சொல்லிய பிறகும் இந்த மண்ணில் புலிகளுக்கு தடை நியாயமா. எங்கள் தலைவர் தலைமையில் நீதிமன்றத்தில் புலிகளுக்கான தடை நீங்கும். பல லச்சம் மக்களை கொன்ற ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்’ என்று பேசினார்.

No comments:
Post a Comment