Jun 7, 2011

இந்தியா வல்லரசா! வாய்ச்சொல்லரசா!!

JUNE 7, வளர்ந்துவரும் வல்லரசாகவும், வணிகத்தில் உலகத்தில் 4ம் இடத்தில் இருப்பதாக உலகநாடுகளிடம் இந்தியா கூறிவருவது கடைந்தெடுத்த பொய்யே ஆகும்.

உலகில் மனித உரிமைகள் அதிகம் மீறப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கைதரம் இன்னும் உயரவில்லை.

அதுபோல் அடிப்படை சுகாதார வசதி, மருத்துவ வசதி, மின்சாரவசதி, சாலை வசதிகள்,  குடிநீர் பிரச்சனை இப்படி மக்களின் அத்தியாவாசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாத ஒரு இழிநிலை.

இந்தியா அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள பல கிராமங்களுக்கும், மலையடிவாரங்களுக்கு தனது சொந்தப் படைகளை அனுப்ப முடியாத ஒரு நிலையே இந்தியாவில் நிலவி வருகிறது.

ஏன் என்றால்? அந்த கிராமங்களிலே செயல்படும் 'மக்கள் ஆயுத குழுக்கள் இந்திய அரசுபடைகளை உள்ளே' அனுமதிப்பதில்லை. "இந்திய அரசு அவர்கள் நலனை பேணாமல் விட்டதால்" அவர்கள் தங்களுக்கு என்று தனி அரசு நடத்துகிறார்கள்.

வணிகம் மற்றும் தொழில் முதலீடுகளுக்காக காட்டையும், அங்கே குடியிருக்கும் ஆதி வாசிகளையும் அது அழித்து வருகிறது. தனது நாட்டுக்குள்ளேயே தனது மக்களைக் கொன்று குவிக்கும் ஒரு நாடு தான் இந்தியா.

தனது சொந்த நாட்டில் உள்ள பழங்குடி மக்களை அழித்து அவர்களின் நிலங்களைக் கொள்ளையடிக்கிறது இந்திய அரசு. பல மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்க்கு கீழ் வாழ்கிறார்கள்.

இந்திய கிராமங்களைச் சென்று பார்வையிட்டாலே தெரியும் இந்தியா வல்லரசு இல்லை என்று. இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்று கூறுவது வெறும் மாய்மாலமே இந்தியாவில் எத்தனையோ கிராமங்களுக்கு இன்னும் சரியான பஸ் வசதி கூட இல்லை.

இந்தியாவில் உள்ள ஆதிவாசிகளையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் பாதுகாப்பது மட்டுமல்லாது, இயற்கையையையும் பாதுகாக்கவேண்டும் இதை செய்யாமல் சும்மா வல்லரசு புல்லரசு என்று கூவித்திரிவதனால் எந்த பயனும் இல்லை.

No comments: