Jun 5, 2011

பாபா ராம்தேவ் டெல்லியில் நுழைய தடை !!!

புதுடெல்லி, ஜூன். 5- பாபா ராம்தேவ் மீண்டும் டெல்லியில் வந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

இவர் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பதும் இவர் இந்தியாவில் ஹிந்துத்துவா ஆட்சியை உண்டாக்க போடும் நாடகம் என்பதும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் இன்று பகல் 11 மணிக்கு மூத்த மந்திரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு டெல்லி போலீசார் ஒரு அறிவிப்பு வெளியிட்டனர். அதில் பாபா ராம்தேவ் அடுத்த 15 நாட்களுக்கு டெல்லிக்குள் நுழையக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

ராம்தேவ் ஆதரவாளர்கள் 39 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களும் டெல்லிக்குள் வர தடை விதித்துள்ளனர்.

2 comments:

sdsad said...

மக்களே சிந்தியுங்கள்... கண்டிப்பாக ராம் மக்களுக்கு நல்லது பண்ண வில்லை. அவர் செய்த கோடி கணக்காண கறுப்பு பணத்தை மறைக்க மக்களை திசை திருப்ப நடத்தும் நாடகம். நீங்கள் தயவு செய்து அவரை ஆதரிக்க வேண்டாம்

தலைத்தனையன் said...

நம் தமிழ்நாட்டில் தூய அரசியல் தலைவர்கள் இருந்தார்கள். அவர்களில் தலைவர் கக்கனும் ஒருவர். அவர் ஒரு ஆழமான இந்து பக்தர். அதற்காக அவர் எந்த உயிர்களிக்கும் அநியாயம் செய்ததில்லை. ஆனால் அவர் பெரிய அளவில் பெயர் எடுக்க முடியவில்லை. காரணம் பிராமணீயம் ஏற்படுத்திய வல்லாதிக்கம்.
அதன் காரணமாக அவர் பிறந்த குலத்துக்கும்,அவர் மீது திணிக்கப்பட்ட சாதிக்கும் ஏற்பட்ட தாழ்மை, இகழ்வு.

இதில் ஒரு பெரிய நகைச்சுவை என்னவென்றால், அவரது தம்பி விஸ்வநாதன் கக்கன் கொஞ்ச காலம்
பிராமணத்தின் வார்பெடுப்பான இந்து முன்னணியின் துணைத் தலைவராக செயல் பட்டார்.