May 26, 2011

நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!!

மே 27, புதிதாக ஆட்சியில் அமர்ந்த உடன் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை செய்தார்.

அது என்ன வென்றால் இனி மக்கள் அஞ்சாமல் நிம்மதியாக வாழலாம் என்று!

அவர் அப்படி சொல்லி ஒரு நாள் கூட, முடியவில்லை சிறுபான்மை சமூக அதிமுக மத்திய அமைச்சர் மரியம் பிச்சை விபத்தின் மூலம் கொல்லப்பட்டார்.

அது சம்மந்தமாக இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. விபத்து நடத்திய லாரி கூட இதுவரை கண்டுப்பிடிக்க படவில்லை.

இதுவே அமைச்சர் ஒரு ஹிந்துவாக இருந்தால் ஐ.எஸ்.ஐ சதி என்று சொல்லி , அந்த இயக்கத்தோடு தொடர்பு, இந்த இயக்கத்தோடு தொடர்பு என்று இதுவரை எத்தனையோ? அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யபட்டு இருப்பார்கள்.

நடந்த இந்த சம்பவத்தை சில பத்திரிக்கைகள் பாகிஸ்தான் ஐ எஸ் ஐ என்பார்கள், ராமகோபாலன் அப்கானிஸ்தான் தலிபான்கள் என்பார், இல்லை, இல்லை, கஷ்மீர் லஷ்கரே அமைப்புதான் காரணம் என்பார்கள் காவல்துறை கண்ணியவான்கள்.

அதுவெல்லாம் இல்லை தாவூத் இபுராஹிம் தான் என்பார்கள் நமது வார இதழ்களாகிய ஜூனியர், சீனியர் விகடன்மார்கள். இதில் எதுவுமே இல்லை, இந்த விபத்தை நடத்தியது ஒரு புது அமைப்பு என்று சொல்லவார்கள் தினமணியும், தினமலரும் போன்ற பார்பன ஹிந்துத்துவா நாளிதழ்கள்.

நீங்கள் யார் சொல்லவதும் சரியில்லை நாங்கள் துப்பறிந்து கண்டுபிடித்தோம் என்று உலகத்தில் இல்லாத ஒரு புதிய பெயரை சொல்வார் பாசிச ஊது குழலாகிய நக்கீரன்.

இப்படி கற்பனையிலேயே துப்பு துலக்கும் இந்த துப்பறியும் பத்திரிகை சம்பவான்கள் எல்லாம், ஏன் இன்னும் தங்கள் கற்பனை குதிரையை ஓடவிடாமல் இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நமக்கு சந்தேகம் வருகிறது.

ஜெயலலிதாவின் பதவி ஏற்ப்பு விழாவிற்கு வருகை புரிந்த குஜராத் இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியை பார்த்து சிறுபான்மை மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. மோடியின் வருகையால் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்றுஅஞ்சினர்.

இந்நிலையில் தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி கொடுக்கப்பட்டது பிடிக்காமல் "ஹிந்துத்துவா" இந்த விபத்தை நடத்தி இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

இந்த துப்பறியும் பத்திரிக்ககளும் வாய்திறக்க மறுக்கின்றன, விபத்தை நடத்திய லாரியும், லாரி டிரைவரும் இதுவரை பிடிக்கப்படவில்லை. அதுவும் இந்த லாரி கேரளாவை சேர்ந்தது என்ற செய்தி இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கோட்டை என்று கேரளா மாநிலத்தை சொல்லலாம். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யூனிட்கள் ( சிறு சிறு படையணிகள் ) அதிகம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றுதான் கேரளா மாநிலம்.

முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான பழனி பாபா அவர்களை கொன்றவர்களும் கேரளத்து ஆர்.எஸ்.எஸ். காரர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பழனி பாபாவை கொல்ல கேரள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து ஆட்களை தெரிவித்தார்கள் தமிழக ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி இயக்கத்தினர்.

கேரள ஆர்.எஸ்.எஸ். கார்கள் கேரளத்தில் இருந்து ஒரு அம்பாசிடர் கார் மூலம் தமிழகம் வந்து பழனி பாபாவை வெட்டி கொலை செய்து விட்டு திரும்பிச் சென்றார்கள். இதே போல் அமைச்சர் மரியம் பிச்சை அவர்கள் விசயத்திலும் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

வந்துவிட்டு போனதோ கொலையாளி மோடி ! கொல்லப்பட்டதோ சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்! குஜராத்தில் நடப்பதை போலவே நடந்திருக்கிறது! தமிழகத்திற்கு வருகை புரிந்த மோடியின் தூண்டுதலின் பெயரில் இது நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

புதிய அரசு சிபி ஐ விசாரணை நடத்துமா? சி.பி.சி.ஐ.டி விசாரணை அந்த அளவுக்கு உண்மைகளை வெளி கொண்டுவர போதுமானதாக இருக்காது என்றே நாடு நிலையாளர்கள் கருதுகிறார்கள்.

3 comments:

Anonymous said...

Hey,

You have become really weired. Lousy Guy. Think wisely.

Regards
Pradeep

மர்மயோகி said...

முன்பொருமுறை ஜெயலலிதாவும், அரசியல் கோமாளி சோவும் சேர்ந்து பயங்கவாதி மோடிக்கு விருந்தளித்து மகிழ்ந்தார்கள்..அப்போது பயங்கரவாதி மோடியின் வருகைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த தமுமுக தலைவர்கள் - இன்று ஜெயலலிதாவின் கூட்டணியில் சேர்ந்துகொண்டு ஒன்றும் பேசமுடியாமல் வாய்மூடி கைகட்டி நிற்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.

அண்டைநாடான ஸ்ரீலங்காவில் பயங்கரவாதிகளை ஒழித்த ராஜபக்ஷே இந்தியா வரும்போதெல்லாம் இங்குள்ள தேச துரோக அரசியல் நோய்களான வைக்கோ, நெடுமாறன், சீமான் போன்ற உபயோகமற்றதுகள் விடுதலைப்புலிகளிடம் பெற்ற கைக்கூலிக்காக ராஜபகேஷேயை எதிர்த்து ஏதோ கோஷமிட்டுகொண்டிருக்கின்றன. அந்த உணர்வு கூட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் போன்ற தமுமுகவினருக்கு இல்லாமல் போனது ஏன்?
பல்வேறு நாடுகளால் விரட்டப்பட பயங்கரவாத மிருகம் மோடி வந்த போது அந்த நாயை விரட்ட துணிவில்லாமல் தம் பதவி ஏற்பு நிகழ்ச்சிகளை புறக்கணித்த நாடகம் ஏன்?
பதவி மோகம் - அதிகார போதை வந்த வழியை மறக்கவைத்துவிட்டதா?

Anonymous said...

MR. KARKARE WAS THE ONE OF THE COURAGEOUS FEW MEN IN THE INTELLIGENCE DEPARTMENT IN INDIA. NOT ONLY IN THE INTELLIGENCE BURREAU BUT COMPARATIVELY IN THE MOST OF THE INDIAN MACHINERY.

THERE ARE LOT MORE PARTIALITY INSIDE THE GOVERNMENT MACHINERY IN INDIA. BECAUSE SINCE THE RSS HATCHED 1925 WITH 200 YEARS OF PLAN TO BUILD INDIA AS A HINDU NATION AND ENGULF NEIGHBOUR COUNTRIES WITH ITS HINDU TERRORISM AS THEY HAVE MASSACRED MILLIONS OF WEAK AND MINORITY COMMUNITIES ALL OVER INDIA.

RSS, VISHWA HINDU PARISHAD, BAJRANG DAL AND SO ON ... HAVE CREATED 1000s OF SCHOOL AND TERRORIST TRAINING CAMP IN INDIA AND CREATED WIDE GAP BETWEEN MINORITY COMMUNITIES AND THE MAJORITY HINDU COMMUNITY.

TO HAVE A STRONG GOVERNMENT IN INDIA, EVERY RELIGION AND CULTURE MUST BE GIVEN IMPORTANCE AND ITS RIGHTS TO PRESERVE ITS IDENTITY AS UNITIED STATES OF AMERICA DO, AND IT BECAME THE STRONGEST NATION IN THE WORLD.

AND REMEMBER, NEVER A COUNTRY WILL BECOME STRONG BY WIPING OUT A MINORITY COMMUNITY OTHERWISE MAKE IT AS A FEDERAL STATE AND AUTONOMOUS REGION AND THIS WILL CREATE A STRONG CENTRAL GOVERNMENT AND STRONG NATION. - MOHAMED THAMEEM