May 30, 2011

இனப்படுகொலை விவாதம்! வைகோ பெல்ஜியம் பயணம்!

May 31, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு அமைப்பு, 

ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து உள்ளது.

இந்தக் கூட்டம், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ் ல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் உள்ள அரங்கில்,  ஜூன் 1ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும்,  உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் பங்கு ஏற்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில், ஈழத்தமிழர்கள் சார்பில் கலந்து கொண்டு உரை ஆற்றுமாறு வைகோவுக்கு,  ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பாளருமான பால் மர்பி அழைப்பு விடுத்து உள்ளார்.

ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைக் குறித்து, இந்தக் கூட்டம் முடிவு எடுக்க இருக்கின்றது.

இதில் கலந்து கொள்வதற்காக,  வைகோ, 30.05.2011 அன்று அதிகாலை ஒரு மணி அளவில்,  சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

இச்செய்தி மதிமுக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: