May 30, சென்னை : முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான, புதிய அரசின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் இன்று கோட்டையில் நடக்கிறது.
இக்கூட்டத்தில் இலவச அரிசி திட்டம், திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு இலவச தங்கம் உள்ளிட்ட திட்டங்களை மக்களுக்கு சேரும் வகையில் அமல்படுத்துவது குறித்து அமைச்சர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும்.
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வான மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் வழங்குதல், தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயம் தொடர்பான பிரச்னை, கவர்னர் உரையில் இடம் பெறும் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.
புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மொத்தம் 1,200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தை, கோட்டைக்கு மீண்டும் மாற்றுவதற்கு அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகளும், ம.தி.மு.க.,வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும், புதிய தலைமைச் செயலக வளாகத்துடன் இணைப்பு வளாகமாக, அதனருகில் பல அடுக்கு கட்டடங்களை கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பணியை தொடருவதா அல்லது நிறுத்தி வைப்பதா என்பது பற்றியும் அரசு முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், புதிய தலைமைச் செயலக கட்டடம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.அமைச்சரவையின் முடிவும், கோர்ட்டில் தெரிவிக்கப்பட உள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் முறைகேடுகள் நடந்ததா? என்பது பற்றி விசாரிக்க உத்தரவிடுவது பற்றியும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுமென தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment