Apr 19, 2011

இந்தியா வம்சாவழி டாக்டருக்கு ‘புலிட்ஸர்​’ விருது!

நியூயார்க்: இந்திய வம்சாவழியைச் சார்ந்தவரும் அமெரிக்க குடிமகனுமான டாக்டர் சித்தார்த் முகர்ஜிக்கு 2011-ம் ஆண்டு ‘புலிட்ஸர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

புற்றுநோயைக் குறித்து அவர் எழுதிய ‘தி எம்பரர் ஆஃப் ஆல் மெலடீஸ்:எ பயோக்ராஃபி ஆஃப் கேன்ஸர்’ என்ற நாவல் அல்லாத நூலிற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

சித்தார்த் முகர்ஜி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பிரிவில் துணை பேராசிரியராகவும், கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் ஸ்டாஃப் கேன்ஸர் பிஸிசியனாகவும் பணியாற்றி வருகிறார்.

40 வயதாகும் முகர்ஜி டெல்லி சஃப்தார்ஜங் என்க்ளேவில் வளர்ந்தவராவார். இவர் ஸ்டேன் ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஹார்வர்டு மருத்துவப் பள்ளி ஆகியவற்றில் பயின்றுள்ளார்.

No comments: