Apr 23, 2011

சாயிபாபா!! கருணாநிதி!! ஒரு நாணயத்தின் இரு பகுதிகள்!!

ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165 நாடுகளிலும் பக்தர்கள் உண்டு.

பல பல்கலைகழகங்களும் மருத்துவமனைகளும் உண்டு. கோடிக்கணக்கில் சொத்துகளும் உண்டு. அவரது பக்தர்கள் பட்டியலில் பல அரசியல் பிரபலங்கள் அடங்குவர்.

வாஜ்பேயியிலிருந்து முரளி மனோகர் ஜோஷி,பல உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் என்று பலதரப்பினர் அடங்குவர்.

ஆசிரமத்துக்கு ஒருநாளைக்கு குறைந்தது பத்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் வரைக்கும் வருவார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் பக்தர்களிடமிருந்து மட்டும் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும்.

பல அரசியல்வாதிகளிடமிருந்தும் பணம் டிரஸ்டுக்கு வருவதுண்டு. அதுமட்டுமில்லாமல், பல மந்திரிகள், அதிகாரிகள், கோர்ட்டு நீதிபதிகள், சிபிஐ அதிகாரிகள் என்று பலருக்கும் பணம் பட்டுவாடா நடக்கும்.

2000ஆம் ஆண்டு யுனெஸ்கோவும் ஆஸ்திரேலியாவின் பல்கலைகழகமும் இணைந்து சத்ய சாயி டிரஸ்டின் குழந்தைகளுக்காக ஒரு செயல் திட்டத்தை வகுத்திருந்தது.

பின்னர் குழந்தைகளை பாலியல் வக்கிரத்தோடு தவறாக பயன்படுத்தும் நோக்கமிருப்பதாகவும் சத்யசாயி டிரஸ்டுக்கான உதவியை பின்வாங்குவதாகவும் யுனெஸ்கோ அறிவித்துவிட்டு http://exbaba.com/shortnews/unesco.html விலகிக்கொண்டது.

“Behind the Mask of the Clown” என்று நான் எழுதிய புத்தகத்தின் மூலம் குறி வைத்து விரட்டப்படுகிறேன். ஆபத்துகள் என்னை சூழ்ந்திருப்பதால் எனது நாட்டை விட்டு வெளியேறி சைப்ரஸில் வசிக்கிறேன். ஆனால், எது வந்தாலும் நான் அமைதியாக இருக்க மாட்டேன், ஏனெனில் சொல்லப்பட வேண்டியது ஏராளம் இருக்கிறது.”

சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன. இவை எல்லாம் சாயிபாபாவுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்து விடக்கூடாது. இந்தியாவை மையமாக வைத்து உலகெங்கும் எழுப்பப்படும் ஹிந்துத்துவா ஆன்மீகக் கிளைகளில் இதுதான் நடக்கிறது.

ரவிசங்கரின் வாழும் கலை, அமிர்ந்தானந்தமாயியின் கட்டிபுடி வைத்தியம், கல்கி பகவானின் ஒன்னெஸ் கூட்டங்கள், பால் தினகரனின் ஜெபாலயம் என்று பக்தி இன்று ஒரு முக்கிய வியாபாரப்பொருள்.

இந்த இன்ஸ்டண்ட் குருமார்களும், சகல பிரச்சினைகளுக்கும் தங்களிடம் தீர்வு இருப்பதாகக் கூறி மக்களை காந்தமாக ஈர்த்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ரிலாக்ஸ் செய்தால் போதும், பிரச்சினைகள் தீர்ந்து போய்விடுமென்று கூறி மயக்குகின்றனர்.

ஒரு வாரம் தியான வகுப்புக்கு நித்தியானந்தா ஐம்பதாயிரம் வரை வாங்கியதாக கூறுகிறார், அந்த வகுப்புக்குச் சென்று வந்தவரொருவர். ரவிசங்கரோ வாழும் கலையின் ஆரம்ப வகுப்புக்கு ஐந்தாயிரம் வரை வாங்குகிறார்.

தொலைப்பேசியில் பிரச்சினைக்காக ஜெபிக்க பணத்தை அனுப்பினால் போதுமென்கிறது பிரேயர் டவர்ஸ். அடித்தட்டு மக்களாக இருந்தாலும் 100 ரூபாயாவது கொடுத்தால்தான் உறுப்பினராக முடியுமென்கிறார் மேல்மருவத்தூர் அம்மா.

நமது தெருமுனையிலிருக்கும் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படும் ஈஷா யோகா வகுப்பில் வந்து முடிகிறது, இந்த நீண்ட பட்டியல். இவர்கள் அனைவரும் சொல்வது, நல்லதையே பார்த்துப் பழகுங்கள், கெட்டவற்றை நினைக்காதீர்கள், எந்த செய்தியிலும் நல்ல பக்கத்தையே பாருங்கள்,

பொறுமையோடிருங்கள், உங்களுக்குள் இருக்கும் அமைதியைத் தேடிக் கண்டடையுங்கள், ” என்று நீளும் இந்த தத்துவம் கடைசியில் உண்டியலில் வந்து முடியும். கொலைப்பழி இருந்தபோதும் அவாள்கள் சங்கர மடத்துக்கு போகாமல் இருந்தார்களா என்ன? ஜெயேந்திரன் அம்பலமான பிறகும் சங்கர மடத்துக்கு மவுசு குறையாமல்தானே இருக்கிறது!

அதனால்தான் சாயிபாபாவின் ஆசிரமத்தில் நிகழும் கொலைகளையும், குழந்தைகள் மீதான கொடுமைகளையும் மூடிமறைத்து பாதுகாப்பு கொடுக்கிறது ஆளும் வர்க்கம். சாயிபாபாவின் ஆசிரமத்தில் மன்மோகன் சிங்க்குக்கு என்ன வேலை?.

இவரது தெய்வீக சக்தி இருக்கும் போது மருத்துவ பல்கலைகழகங்களும் பொறியியலும் எதற்கு? தெய்வீக சக்தியையே பயன்படுத்திக் கொள்ள முடியாதா? பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடியவருக்கு, முக்காலமும் அறிந்தவருக்கு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியை தடுத்து நிறுத்தியிருக்கலாமே!

மக்களின் போராட்டங்களை அடக்க ராணுவத்தை குவிக்கும் இந்திய அரசு இந்த சாமியார்களின் ப்ராடுத்தனத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்த முடியாதா என்ன? முடியும், ஆனால் செய்யாது.

பகுத்தறிவு பேசிய கருணாநிதி சாயிபாபா நலம் பெற்று எழ வேண்டுமென்று செய்தி அனுப்புகிறார். இது ஏதோ மனிதாபிமானத்தால் சொல்லப்பட்டது அல்ல, தேர்தல் காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சாயிபாபா வாக்குகளை கவர் செய்த மாதிரியும் ஆகும். கூடவே கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் பாப பக்தர்களை திருப்திப்படுத்தியது போலவும் இருக்கும்.

சாயிபாபாவின் மீதான கருணாநிதியின் அக்கறைக்கு பொருளென்ன? அடிப்படையில் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே! மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பின் மீது கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்

ஆன்மீகம் தனது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல என்று மக்கள் உணரும் போதுதான் சாயிபாபாக்கள் மந்திரவித்தை மோசடிகளை நிறுத்துவார்கள். மாறாக அப்போது சாமியார்கள் மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு சாணக்கிய ஆலோசனை செய்யும் வேலைக்கு போய்விடுவார்கள்.

9 comments:

Mathuran said...

நானும் இந்த போலி சாமியைப்பற்றி பதிவு ஒன்று போட்டிருந்தேன். என்ன செய்வது ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

Anonymous said...

ஹிந்துத்துவ கொள்கைகளில் மட்டுமல்ல , பல மதத்தை சார்ந்த சாமியார்களும் இதை தான் செய்கிறார்கள் . முக்கியமாக கிறிஸ்தவ சாமியார்களின் லீலைகளை நான் கூற தேவை இல்லை . மேலும் தாங்கள் எழுதும் அனைத்து பதிவுகளும் ஹிந்துத்துவ கொள்கைகளை தாக்குவதாக மட்டுமே இருக்கின்றன .. இதை நீங்கள் மாற்றினால் கொஞ்சமாவது தகவல் கொடுக்கலாம்..

Srilankan said...

சத்யசாயிபாபா பற்றி அறிந்து கொள்ள

http://www.youtube.com/watch?v=oNVJyycAZYw&NR=1

http://www.dailymotion.com/swf/x4y3iy

http://www.dailymotion.com/swf/x4y4n1

http://www.dailymotion.com/swf/x4y5vb

Nalliah said...

சத்யசாயிபாபா பற்றி அறிந்து கொள்ள

http://www.youtube.com/watch?v=oNVJyycAZYw&NR=1

http://www.dailymotion.com/swf/x4y3iy

http://www.dailymotion.com/swf/x4y4n1

http://www.dailymotion.com/swf/x4y5vb

Sivamjothi said...

Don't post wrong information.
// ரவிசங்கரோ வாழும் கலையின் ஆரம்ப வகுப்புக்கு ஐந்தாயிரம் வரை வாங்குகிறார்.
In tamil nadu its only Rs 500.

ஒரு வாரம் தியான வகுப்புக்கு நித்தியானந்தா ஐம்பதாயிரம் வரை வாங்கியதாக
Its Rs500 in tamil nadu.

Please spend time to read what good they have done to society.

Anonymous said...

christian mathiri fraud illa yelaikalukku nallathu neriya senchu irukanka unkaludaiya yennam oru pothum palikathu unmaiyana hindu india la irukura varikkum

TSKumar said...

ஹிந்துத்துவ கொள்கைகளில் மட்டுமல்ல , பல மதத்தை சார்ந்த சாமியார்களும் இதை தான் செய்கிறார்கள் . முக்கியமாக கிறிஸ்தவ சாமியார்களின் லீலைகளை நான் கூற தேவை இல்லை . மேலும் தாங்கள் எழுதும் அனைத்து பதிவுகளும் ஹிந்துத்துவ கொள்கைகளை தாக்குவதாக மட்டுமே இருக்கின்றன .. இதை நீங்கள் மாற்றினால் கொஞ்சமாவது தகவல் கொடுக்கலாம்..

emman said...

எந்த மதமானாலும் தவறுகள் செய்வது தலைவர்கள் மட்டும் அல்ல .போலி சாமியார் என்பவன் ஒரு சாதாரன மனிதன்தான் என்றால் அவனை கடவுள் என்று சொல்வது அவனின் குற்றமா ,வணங்கும் மனிதர்களின் குற்றமா அல்லது இது கடவுளின் குற்றமா.

Unknown said...

இவரது தெய்வீக சக்தி இருக்கும் போது மருத்துவ பல்கலைகழகங்களும் பொறியியலும் எதற்கு?
http://eyepicx1.blogspot.com/2011/04/blog-post_1873.html

also vote me and follow me