Apr 20, 2011

ஈழத்தமிழர் படுகொலை!! இந்தியாவின் உடந்தை!! வைகோ!!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள கொலைக் காரப்பாவி மகிந்த ராஜபக்சே அரசு போர்க்குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டும்.

2006 ஆம் ஆண்டிலேயே சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து நாடுகள் சிங்கள அரசுக்கு எதிராக ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது அதனை வரிந்து கட்டிக் கொண்டு இந்திய அரசு தோற்கடித்தது.

தமிழ் இனப்படுகொலை நடத்திட சிங்கள அரசுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் செய்த காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவின் மத்திய அரசு.

2009 தொடக்கத்தில் அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரமுயன்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்தது இந்திய அரசு தான்.

கூண்டில் சிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை திரும்பத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வந்து வரவேற்றுக் கொண்டாடிய இந்திய அரசு.

இன்னமும் இலங்கை அரசை ஆதரிக்கின்ற வேலையில் ஈடுபடுமானால் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு இந்தியாவும் பகிரங்கப் பங்காளி எனும் குற்றச்சாட்டுக்கு மேலும் ஆளாகும்.

இலங்கை அரசுடன் ஆன ராஜிய உறவுகளை இந்திய அரசு முறித்துக் கொள்ள வேண்டும். ஐ.நா. மன்றத்திலும் மனித உரிமை ஆணையத்திலும் இலங்கைக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும்.

ஐ.நா. அறிக்கைக்கு எதிராக இலங்கையில் ராஜபக்சே ஆள் திரட்டுகிறார். பேரணி என்று சவால்விடுகிறார்.

உலக நாடுகளின் கவனம் ஈழத் தமிழரின் அவலம் குறித்து திரும்பி இருக்கும் இந்த வேளையில் ஈழத் தமிழன் நாதியற்றுப் போய் விடவில்லை என்று அனைத்துலகிற்கும் அறிவிக்கும் வகையில் தாய்த் தமிழகத்து தமிழர்கள் ஆர்த்தெழ வேண்டியது தலையாய கடமையாகும்.

சிங்கள அரசைக் கூண்டில் ஏற்றவும், போர்க்குற்றங்களை விசாரித்து சர்வதேச குற்ற வியல் நீதிமன்றக் கூண்டில் ஏற்றிட வலியுறுத்தவும் ஈழத் தமிழர்களுக்கு வலுவான ஆதரவை உலகுக்கு காட்டிடவேண்டும்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஏப்ரல் 25 (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பழ.நெடுமாறனும், நானும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முன்னணியினரும் பங்கேற்கும் இந்த ஆர்ப் பாட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுமெனக் கழக கண்மணிகளையும் தமிழ் பெருமக்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

No comments: