Apr 20, 2011

காஷ்மீரில்!! கட்சி மாறிய கொள்கை கோமான்கள்!!

ஏப்ரல் 21, காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 13-ந் தேதி எம்.எல்.சி. தேர்தல் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளர் தாகூர் ரஞ்சித் சிங் போட்டியிட்டார்.

அவரை ஆதரித்து தங்கள் கட்சியின் 11 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டளிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

ஆனால், சட்டசபை பா.ஜனதா தலைவர் உள்பட 7 எம்.எல்.ஏ.க்கள் பேர் இந்த உத்தரவை மீறி பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஓட்டளித்தனர்.

இதனால் 4 ஓட்டுகள் மட்டுமே பெற்ற பா.ஜனதா வேட்பாளர் தோல்வி அடைந்தார்.
இதுபற்றி ஆலோசிக்க பா.ஜனதா கட்சியின் ஆட்சி மன்றக்குழு டெல்லியில் கூடியது.

கட்சியின் தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர் அத்வானி மற்றும் முக்கிய தலைவர்களும் காஷ்மீர் மாநில எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அணி மாறி ஓட்டுப்போட்ட 7 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியில் இருந்து `சஸ்பெண்டு' செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

சிந்திக்கவும்: இவர்கள்தான் இந்தியாவை ஒளிர வைக்க போகிறார்களாம் நம்புங்கள்!! இவிங்க ரொம்ப நல்லவங்கள் பா!! கலவரம் மட்டும்தான் நடத்து வாங்கள்!! வேற ஒன்றும் தெரியாது!!

No comments: