Apr 17, 2011

மீனவர் அவலம் தீர்க்க என்ன? செய்ய போகிறோம்!!

ஏப்ரல் 18, ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற எம் தாய்த்தமிழ் உறவுகள் விக்டர், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய 4 மீனவர்கள் இன்று நம்மிடம் இல்லை.

இதுவரை 3 மீனவர்களின் உடல்கள், கை, கால்கள் துண்டிக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் நமக்கு கிடைத்திருந்தது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள புதுக்குடியில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்குள் அழுகிய நிலையில் நேற்று தலை இல்லாத நிலையின் மீனவர் மாரிமுத்துவின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஓட்டு கேட்க வந்தபோது இனி ஒரு தமிழ் மீனவரின் உயிரும் பறிக்கப்பட மாட்டாது என்ற சோனியாவின் வாக்குறுதிகள் இன்னும் நம் காதுகளில் எதிரொலிக்கின்றன.

இந்த நிலையில் இப்பொழுது கொலை செய்யப்பட்டுள்ள 4 மீனவர்களின் உறவினர்களின் ஒப்பாரி நம் தேசமெங்கும் கேட்பாரற்று எதிரொலிக்கிறது.

நேற்று இதேபோல மீன் பிடிக்கச் சென்று அத்துமீறி நுழைந்த 22 இந்திய மீனவர்களை எதிரி நாடு என்று சொல்லப்படும். பாகிஸ்தான் அரசு சட்டப்படி கைது செய்துள்ளது.

நிலையில் நட்பு நாடு என்று இவர்களால் சொல்லப்படும் இலங்கை அரசோ நம் நாட்டு எல்லையில் மீன் பிடித்த 4 தமிழ் மீனவர்களைக் கொலை செய்துள்ளது.

ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம், கண்டன ஊர்வலம், உண்ணாவிரதம் என நம் போராட்ட வழிமுறைகள் தொடரும் நிலையில் சிங்கள அரசால் தமிழக மீனவர்களின் படுகொலைகளும் நிற்காமல் தொடருகின்றன. இதற்கு என்ன தான் தீர்வு?

தனது உறுதிமொழியை மீறி மீனவர்களைக் கொன்ற இலங்கையின் மீது இந்தியா போர் தொடுக்குமா? அல்லது குறைந்தபட்சம் பொருளாதாரத் தடை விதிக்குமா?

இது நடைபெறாத நிலையில் நம் மீனவர்கள் அவர்களின் பாதுகாப்புக்கு யாரையும் நம்பாமல் அவர்களே காத்துக்கொள்ளும் நிலை நோக்கி செல்லத் தொடங்கும் பயணத்தை எடுத்து வைப்பார்கள்’’ என்று சீமான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: தமிழக மீனவர்களை பாதுகாக்க இலங்கைக்கு எதிராக ஒரு ஆயுத போராட்டத்தை தமிழர்கள் நடத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. நமது தொப்புள் கொடி உறவுகள் கொத்து கொத்தாய் கொள்ளப்படும் போது நாம் கையால்ஆகாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.

முத்துகுமார் போன்ற நம் தமிழ் மறவர்கள் இயலாமையின் காரணமாக தன்னுயிர் நீத்தார்கள். நாம் வீணாக செத்து மடிவதை விட வீரமாக போராடி சாவதே மேல். தினம், தினம் நம் தமிழக மீனவர்கள் கொடூரமாக கொல்லப்படுவது வேதனை அளிக்கிறது. இனி தமிழகத்தில் மீன்பிடிக்க செல்லும் மீனவர் படகுகள் ஆயூதங்கள் சுமக்கட்டும்.

உங்களை கொல்ல நினைக்கும் கொலைகார கொடியவர்கள் உங்களை தாக்கினால் எதிர்த்து தாக்குங்கள். இந்த பேராசை பிடித்த மத்திய அரசை நம்பி அது நடவடிக்கை எடுக்கும் என்று நம்பி உங்கள் இன்னுயிர்களை மாய்த்து கொள்ளாதீர்கள்.

மத்தியில் எந்த கட்சி ஆட்சி வந்தாலும் அவர்கள் தமிழர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வுள்ள வாலிபர்கள், தலைவர்கள் ஒருங்கிணைந்து சிங்கள பயங்கரவாதத்தை

முறியடிக்கும் ஒரு போராட்டத்தை தொடங்குவோம். இதை மீனவர்கள் பிரச்சனையாக பார்த்து மற்றவர்கள் ஒதுங்கி இருப்பதே இதற்க்கு காரணம். நம் அரசியல் கட்சிகள் ஆர்பாட்டங்கள் இவைகளை நம்பி ஏமாறாதீர்கள்.

உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள். சிங்கள ராணுவ கயவர்கள் உங்களை கொல்ல நினைத்து தாக்குதல் நடாத்தினால் நீங்களும் பதில் தாக்குதல் நடத்துங்கள்.
தமிழகத்தில் உள்ள கோடிகணக்கான விசைப்படகுகள் இலங்கையை முற்றுகை இடட்டும்.

இது நம்மால் முடியும் ஒருங்கிணைந்த ஒரு செயல் திட்டத்தோடு நாம் செயல்பட்டால் இவர்களை ஒழிப்பது ஒன்றும் சிரமமானது இல்லை. தமிழர்கள் வீரமானவர்கள், விவேகமானவர்கள் என்பதை உலகுக்கு நிருபிப்போம்.

ஆறரை கோடி தமிழர்கள் கடற்கரை ஓரம் இருந்து எட்ச்சில் துப்பினால் போதும் போதும் ஸ்ரீலங்கா சுனாமியில் மூழ்கி போகும். தமிழா வீரத்தோடு எழுந்து நில்!! உன்னை ஹிந்தி காரன் பாதுகாப்பான் என்று நம்பி ஏமாறாதே.

அன்புடன் ஆசிரியர் புதியதென்றல்

No comments: