
APIRL 23, ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மே தினத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்துவர் என இலங்கை அமைச்சர் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அம்மாகாணங்களைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களை இலங்கை அதிபர் ராஜபட்சே சந்தித்தார்.
அந்த அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வர் என சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான கருணா தெரிவித்தார். இலங்கை அரசு மீது ஐ.நா. குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு அடிப்படையில்லை.

No comments:
Post a Comment