
இதில், குஜராத் மாநில உளவுத்துறையில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய சஞ்சீவ் பட் இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அளித்த மனுவில், மோடி தொடர்பு பற்றி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"கடந்த 2002ம் ஆண்டு முதல்வர் மோடி, கோத்ரா சம்பவத்திற்கு பின், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து நடத்திய கூட்டத்தில் பங்கேற்றேன். போலீஸ் அதிகாரிகளிடம் பேசிய மோடி, "கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால், இந்துக்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது.
இத்தகைய சம்பவம் இனி நிகழாதவாறு, முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்க நினைக்கின்றனர். அவர்களது கோபத்திற்கு தடை விதிக்காமல் கண்டும் காணாததுபோல் இருக்கும்படி கேட்டுக்கொண்டார்' என்று அந்த மனுவில், சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார். தற்போது சஞ்சீவ், குஜராத் மாநில ஆயுதப்படை போலீஸ் பயிற்சி மையத்தின் முதல்வராக உள்ளார்.
No comments:
Post a Comment