Apr 16, 2011

இலங்கை விசயத்தில் அமெரிக்கா தலையிட கூடாது!!

ஏப்ரல் 17, இலங்கையின் மனித உரிமைகள் குறித்து அமெரிக்கா கவலைப்படத் தேவையில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்கா பல வருடங்களாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் அந்த நாடு ஏனைய நாடுகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை கொள்வதில் அர்த்தமில்லை என்று ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையின் பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்ள முயலவேண்டும் என்றும் ஜெயசேகர கேட்டுள்ளார்.

சிந்திக்கவும்: நாடுகடந்த தமிழீழ அரசை அமெரிக்கா ஆதரிக்கிறது என்கிற கடுப்பு. இவர்கள் போர் குற்றம் எல்லாம் அம்பலம் ஆக போகிறது என்ற பயம். ஈழ தமிழர்கள் சிந்திய குருதிக்கு விலை உண்டு பொறுத்திருங்கள்.

No comments: