Apr 9, 2011

காப்பியடித்த ஜெயலலிதா!! கண்டுபிடித்த சிதம்பரம்!!

ஏப்ரல் 10, காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா என, ப.சிதம்பரம் பேசினார். கரூர் தொகுதிகளில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசுகையில்,

கடந்த 2009ல் லோக்சபா தேர்தலில் சாதனை முன்னிறுத்தி ஓட்டு கேட்டோம். அப்போது, ஆளும்கட்சியாக உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வராது என்று ஆரூடம் கூறினர். முடிவில், ஆரூடம் பலிக்கவில்லை.

சாதனைதான் பலித்தது. பணத்துக்கு ஓட்டில்லை. குணத்துக்கு தான் ஓட்டு. ஐந்து ஆண்டு கழித்து திரும்பி பார்த்தால் ஜாதி, மதம், பணம், குடும்பம் எதுவும் தேர்தலில் எடுபடாது.
கடந்த தேர்தலில் தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதி, "அரசியல் ஆத்திச்சூடி' போன்றது.

9,600 கோடி ரூபாய் பட்ஜெட் போடும் தமிழக அரசு, 7,500 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்தது. இதைக்கண்டு, மத்திய அரசும், 72 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனை நாடு முழுவதும் தள்ளுபடி செய்தது.

அரசு என்றால் வளர்ச்சியும், வசதியும் இருக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சி ஓர் இருண்டகாலம். இப்போதைய தேர்தல் அறிக்கையில் அம்மிக்கல்லுக்கும், ஆட்டுக்கல்லுக்கும் டாட்டா காட்டியவர் கலைஞர்.

இதை காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. கிரைண்டர் அல்லது மிக்சி தருவதாக கலைஞர் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும், "அல்லது' என்பதை நீக்கி, இரண்டுமே தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

சிந்திக்கவும்: ஆமா இவர்கள் எல்லாரும் அவர்கள் பாக்கெட்டில் இருந்து கொடுத்த மாதிரி எல்லாம் மக்கள் பணம். இவர் என்னமோ வாத்தியார் மாதிரி காப்பி அடித்தை கண்டு பிடித்தது மாதிரி. சும்மா எல்லாரும் மக்களை ஏமாற்றும் வேடதாரிகள்.

1 comment:

பாலா said...

ஸ்பெக்ட்ரம் .......போல பெரிய ஊழல மட்டும் கண்டு பிடிக்க முடியாத படி நீங்க ரொம்ப நுணுக்கமா பண்ணுங்க ................சிதம்பரம், சிதம்பர ரகசியம்