Apr 15, 2011

தமிழகத்தில் 7 வாக்கு சாவடிகளில் மறு ஓட்டு பதிவு!!

ஏப்ரல் 15, வன்முறை, மின்னணு எந்திரக்கோளாறு போன்ற காரணங்களால் தமிழகத்தில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை (சனிக்கிழமை) மறு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தநிலையில், சங்கரன்கோவில் தொகுதி புளியம்பட்டி வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவின் போது முறைகேடு நடந்தது தேர்தல் கமிஷனின் வீடியோ மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியிலும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

No comments: