Apr 15, 2011

அன்னா ஹஸாரேவை தரிசிக்க 600 ரூபாய்!!

ஏப்ரல் 16, புதுடெல்லி: ஊழலுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அன்னா ஹஸாரேவின் தரிசனத்திற்காக 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

அன்னா ஹஸாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சுவாமிஜீகளின் மட்டத்திற்கு ஹஸாரேவின் புகழும் உயர்ந்துள்ளது.

புனேயிலிருந்து 70 கி.மீ தொலைவிலுள்ள ரலேகான் சித்தி என்ற ஹஸாரேவின் முன்மாதிரி கிராமத்தில் வசிக்கும் அவரை சந்திக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனைத் தொடர்ந்து ஹஸாரேவை தரிசிக்க ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஐ.டி. ப்ரொஃபசனல்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் ஆகியோர் ஹஸாரேவை தரிசிப்பவர்களில் அடங்குவர். ரலேகான் சித்தி கிராமம் அன்னா ஹஸாரே ஜுரம் பாதித்தவர்களால் உற்சாகத்தில் மூழ்கியுள்ளதாக ஹஸாரேவின் அந்தரங்க செயலாளர் சுரேஷ் பதாரே தெரிவிக்கிறார்.

ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் வேளையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் யோகா கலைஞர் பாபா ராம்தேவ் ஆவார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்றவர்களும் ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இறுதியில் ஹஸாரே சுவாமிஜீகளுக்கு கிடைத்த செல்வாக்கின் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

1 comment:

தலைத்தனையன் said...

எந்த மனிதருக்கும் இருக்கும் புகழாசை இவரையும் தொற்றிக்கொண்டதா தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல் தன்னோடு அமரும் தகுதி சாதாரண, எந்த இமாலய சாதனையும் செய்யாத மனிதராக இருந்தாலும் m பரவாயில்லை.

சுய ஒழுக்கம் உள்ளவராக இருந்தாலே போதும் என்ற அடிப்படையில் இருந்திருக்க வேண்டும் . கருணாநிதி போல் 90 வயது கடந்தும் தமிழை சொல்லியே மக்களைக் கொள்ளையடித்து தன் மக்களை வளர்க்கும், திமிர் பிடித்த தான் வைத்ததுதான் சட்டம் என்று வர்ணாசிரம கொள்கையில் உறுதி உள்ள ஜெயலலிதா போன்ற, தன் பெயர் மாற்றி சொல்லப்படுவதை சரி செய்ய முற்படும் ஒரு மக்கள் பிரதிநிதியை தலையில் அடித்தே உட்கார வைக்கும் ஒரு நடிகர் தலைவன்.

இப்படி நல்ல தலைவனுக்கு இருக்க வேண்டிய எந்த தகுதியும் இல்லாத அல்லது நல்ல தலைவர்களே இல்லாததினால் இருக்கும் பொறுக்கிகளில் குறைவாக குற்றப்பின்னணி உள்ளவன்/உள்ளவள் யார் என்று தெரிந்தெடுத்து அவனுக்கு அல்லது அவளுக்கு ஓட்டுப் போடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் நம் இந்தியர்களை நினைத்தால் மற்றுமொரு சுதந்திர போராட்டம் இன்றே இப்பொழுதே தேவை என்பேன்.

அன்ன ஹசாரே நடத்தும் பள்ளிக்கூடங்களில் விவேகானந்தரையும், சத்ரபதி சிவாஜியையும் மட்டுமே குழந்தைகள் சுதந்திர போராட்ட வீரர்களாக பயிற்றுவிக்கப்பட்டிருப்பது எந்தப்புற்றில் எந்தவகை பாம்பு என்று அறியாத நிலை நமக்கு.

காய்தல் உவத்தல் இன்றி நாட்டுக்கு நல்லது செய்ய முற்படும் நல்லவன் வேண்டும். அவன் இந்துவாக இரு, கிறிஸ்துவனாக இரு, முஸ்லிமாக இரு அல்லது நாத்திகனாக இரு.

எனக்கு தெரிந்து ஒரு நல்லவன் உண்டு. அந்த நல்லவனுக்கு மூன்று செட் உடை மட்டுமே உண்டு. எங்கள் ஊருக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபொழுது இரண்டு செட் அழுக்காகி விட்டதால் தன் கையாலேயே அவற்றை துவைத்து மூன்றாவது செட் உடையை தானே இஸ்திரி செய்து போட்டுக்கொண்ட தலைவன் வேறு யாரும் அல்ல கம்யூனிஸ்ட் தலைவர் இப்பொழுதும் வாழும் நல்ல தலைவன் R நல்லகண்ணுதான்.