
டெல்லி: ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் இந்தியாவில் 30 வயதுக்கு கீழ் உள்ள ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
அன்மையில் விபத்து மற்றும் தற்கொலை சாவுகள் 2009 என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கடந்த 2009ம் ஆண்டில் இநதியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 68 சதவீதம் (அதாவது 1 லட்சத்து 27 ஆயிரத்து 151 பேர்) 15 முதல் 44 வயது உள்ளவர்கள் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரசேம் மற்றும் டெல்லியில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 55 சதவீதத்திற்கும் அதிகமானோர் 15 முதல் 29 வயது உடையவர்கள். இதில் அருணாச்சலப் பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட 110 பேரில் 42 பேரும், டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட 1,477 பேரில் 817 பேரும் 15 முதல் 29 வயது உடையவர்கள். நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்டவர்களில் 34.5 சதவீதம் பேர் 15-29 வயது மற்றும் 34வயதுடையவர்கள் ஆவர் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment