
கறுப்புப் பணத்தை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கையை மேற்கொண்டது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு விபரங்களை சேகரித்து வருவதாகவும், கணக்கு விபரங்களை வெளியிடுவது நாடுகளுக்கிடையேயான நட்புறவை பாதிக்கும் என தெரிவித்தார்.
லீக்டென்ஸ்டைன் நாட்டு வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் 26 பேர் குறித்து மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜெர்மனியுடன் இரட்டை வரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் பெயர் விபரங்களை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் முத்திரை வைக்கப்பட்ட உறையில் இது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தியர்களின் எல்லா வெளிநாட்டு வங்கிகளின் முதலீடு விபரங்களை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம் குறித்த விபரங்களை அளிக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டதற்கு ஒரு வங்கியின் விபரங்களை மட்டும் அளித்த மத்திய அரசின் நடவடிக்கையையும் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
செய்தி: நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
1 comment:
பாரதமாதா சோனியாவும், அவருடைய சிறந்த அடிமை மண்மோகனும் இந்த நாட்டில் அதிகாரத்தில் இருக்கும்வரை இந்த இரகசியம் வெளிவராது. இரகசிய கணக்கில் சோனியாவின் பணமே அதிகமாக உள்ளது என்பது உலகம் அறிந்த இரகசியம்
Post a Comment