
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குருவையா என்ற விவசாயியையும் அங்கம்மாள் என்ற அவரது மனைவியையும் 13 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு 7 நாட்கள் சித்ரவதை செய்து விசாரிக்கபட்டுள்ளனர். தன்னையும் தனது கணவனையும் காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப்படுத்திய காவலர்கள், ஒரு கட்டத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லுமாறு வற்புறுத்தியதாகவும், அதற்கு தனது கணவர் உடன்பட மறுத்ததை அடுத்து தனது கணவரை நிர்வாணப்படுத்தி எனது சேலையை உருவி அதைக் கொண்டு அவரின் கைகளை கட்டி அவரை தலைகீழாக தொங்கவிட்டதாகவும், பிறகு நான்கு காவலர்கள் என் கணவர் கண் எதிரே தன்னையும் நிர்வாணப்படுத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து ஏழு நாட்களுக்கு காவல்துறையினர் பல்வேறு விதத்தில் செய்த துன்புறுத்தல்கள் காரணமாக தனது கணவர் இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார். தனது பெற்றோருக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கு தீர்வு தேடி வழக்காட முன்வந்துள்ளார் பாதிக்கப்பட்டோரின் மகனான மலைச்சாமி. சம்பவம் நடந்த போது 8 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அவர் தற்போது சட்ட மேற்படிப்பு படித்துள்ளார்.
No comments:
Post a Comment