
இது தொடர்பாக கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்தே கடந்த வாரம் இந்த பல்கலைக்கழகத்தில் போலீஸாரும், குடியேற்ற அதிகாரிகளும் சோதனை நடத்தி பல்கலைக் கழகத்துக்கு சீல் வைத்தனர். இந்த பல்கலைக்கழகத்தில் மொத்தம் 1,555 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 95 சதவீதம் பேர் இந்தியர்களாவர். இந்த பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சிகள் அளிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. கலிஃபோர்னியாவில் இருப்பதாக முகவரி குறிப்பிடப்பட்டிருந்தாலும் மாணவர்கள் மேரிலாண்ட், வர்ஜீனியா, பென்சில்வேனியா, டெக்ஸஸ் ஆகிய பகுதிகளில் பணி புரிவது கண்டுபிடிக்கப்பட்டது. ஷாம் பல்கலை என்ற பெயரில் இந்த கல்வி மையம் இயங்கி வந்ததாகத் தெரிகிறது. இந்த பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் கலிபோர்னியா மாகாணம் சன்னிவேல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் அனைவரும் உறைவிடப் பள்ளியில் தங்கியிருப்பதாக இந்த பல்கலைக் கழகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவர்கள் தங்கி பணிபுரிவதோ கலிபோர்னியாவில். பொதுவாக அமெரிக்க குடியுரிமை பெற வேண்டுமெனில் மாணவர்கள் கல்லூரியில் பயில்வதற்கான அடையாளத்தை நிரூபிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் குறிப்பிட்ட காலம் வரை கல்லூரிக்கு வருகை தந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இப்போது அமெரிக்க புலனாய்வு போலீஸார் ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் விரிவாக விசாரித்து வருகின்றனர். இதில் சில மாணவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். அதிலும் குறிப்பாக அதிகமானோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்த பல்கலைக் கழகத்தில் அடுத்த செமஸ்டர் தேர்வு எழுத முடிவு செய்திருந்தனர். தங்களிடம் விசாரணை நடத்தும் முன்பாகவே அமெரிக்காவிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதில் சில மாணவர்கள் தீவிரமாக உள்ளனர். ஏனெனில் இவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு கட்டாயமாக நாட்டை விட்டு அவரவர் நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த பல்கலைக் கழகம் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட எப்-1 விசா காலம் முடிவடைந்துவிடும். குறித்த காலத்துக்குப் பிறகு அவர்களால் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியாது.
No comments:
Post a Comment