நியூயார்க் : "ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் பாடல்கள் கேட்கும் இளம்பெண்கள் வெகுவிரைவில் காது கேட்கும் திறனை இழந்து விடுகின்றனர்' என, புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் பேராசிரியர்கள், இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் கேட்கும் திறன்' பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அமெரிக்கா முழுவதும் இருந்து பலபேர் கலந்துகொண்ட ஆய்வின் முடிவில், ஐபாட் போன்றவற்றில் தொடர்ந்து பாடல்கள் கேட்பதால், இளைஞர்களை விட இளம்பெண்கள் வெகுவிரைவாக கேட்கும் திறனை இழந்துவிடுவதாக தெரிந்துள்ளது.
ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் பேராசிரியர் எலிசபெத் ஹெண்டர்சென் இதுகுறித்து கூறியதாவது: ஆய்வில் பங்குபெற்ற அனைவருக்கும் கேட்கும் திறன் பற்றிய சோதனை நடத்தப்பட்டது. அதில், இளைஞர்களை விட, 17 சதவீத அளவிலான இளம்பெண்களுக்கு கேட்கும் திறன் மிகவும் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக சத்தத்தில் பாடல்கள் கேட்பதுதான் கேட்கும் திறன் குறைவதற்கு காரணம் என தெரிந்தது.
கடந்த 1980ம் ஆண்டுகளில் ஹெட்போன்களில் பாடல்கள் கேட்பது என்பது 20 சதவீதமாக இருந்தது. 1990களில் இன்னும் அதிகரித்து 35 சதவீதமானது. இப்போது, செல்போன், ஐபாட், டிராய்ட், பிளாக்பெர்ரி என விதவிதமான சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இன்றைய இளம் தலைமுறையினர் 24 மணிநேரமும் ஹெட்போன்களில் பாடல்கள் கேட்டபடியே உள்ளனர். இதனால், இளைஞர்களுக்கும் பாதிப்புகள் நிச்சயம் என்றாலும், இளம்பெண்கள் தான் வெகுவிரைவில் காதுகேட்கும் திறனை இழக்கின்றனர். இவ்வாறு எலிசபெத் ஹெண்டர்சென் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment