Jan 25, 2011

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய கட்டுரை போட்டி முடிவுகள்.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கீழ் கண்ட தலைப்புகளில் நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் கட்டுரை போட்டிகளை நடத்தியது. 'சமூக மாற்றத்தில் மாணவர் பங்கு' , 'லஞ்சம் ஊழலில் என் தேசம்' ஆகிய தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் தமிழக முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இருந்து சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். அதில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான பரிசுத்தொகை வெற்றி பெற்ற பள்ளி கல்லூரிகளில் ஒரு பரிசளிப்பு விழா நடத்தி அங்கு வழங்கப்படும்.

வெற்றி பெற்றவர்கள்: கட்டுரைத் தலைப்பு:' சமூக மாற்றத்தில் மாணவர் பங்கு'

முதல் பரிசு : எஸ்.அன்பழகன், 2ம் ஆண்டு பி.எஸ்.சி. கணிதம்
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி, திருச்சி.
இரண்டாம் பரிசு: ஏ.ஜோஷி புஷ்பா, 9ம் வகுப்பு
புனித இக்னேஷியஸ் மேல்நிலைப்பள்ளி,
பாளையங்கோட்டை, நெல்லை.
மூன்றாம் பரிசு : எம். சுகன்யா, 1ம் ஆண்டு எம்.ஏ. தமிழ்.
லேடி டோக் கல்லூரி, மதுரை.

கட்டுரைத் தலைப்பு: 'லஞ்சம் ஊழலில் என் தேசம்'

முதல் பரிசு : ஆர்.ராஜலட்சுமி, 2ம் ஆண்டு பி. எல்.
அரசு சட்டக் கல்லூரி, நெல்லை.
இரண்டாம் பரிசு: எம்.டி. வினோத் குமார், 11ம் வகுப்பு
தியாகராசர் நன்முறை மேல்நிலைப் பள்ளி, மதுரை.
மூன்றாம் பரிசு : யூ.ஜெனோஃபர், 2ம் ஆண்டு பி.சி.ஏ.
ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி.

மேலும் கலந்துக் கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். என அறிவிக்கப்பட்டது.

No comments: