Jan 4, 2011

எங்களை கவர்ந்த இந்திய கலாசாரம்!!: உலகம் சுற்றும் தம்பதியினர்.

ராமநாதபுரம் : உலகத்தை சுற்றியப்படி ,பல்வேறு நாடுகளில் வாழும் மிருகங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ஜெர்மன் தம்பதியினர் , "தங்களை இந்திய கலாசாரம் கவர்ந்துள்ளதாகவும், இங்குள்ளோர் மென்மையானவர்கள்,' என, கூறினர். ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் பிரிட்டி ரெக்(64) . குறும்படம் தயாரிப்பாளரான இவர் , தனது மனைவி ரீட்டா(61) உடன் உலகத்தை சுற்றிவரும் நோக்கில் ,கடந்த 2004 ஜனவரியில் ஜெர்மனியிலிருந்து பயணத்தை துவங்கினார். இதற்காக படுக்கை, சமையல், லைட், கழிப்பறை, அவசரத்திற்கு வெளியே செல்ல சிறிய வாகனம் என பல்வேறு வசதிகளுடன் டிரக் வாகனத்தை தயார் செய்தார். ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, அலேஸ்கா, சீனா என 85 நாடுகளில் 2 லட்சத்து 42 ஆயிரம் கி.மீ., தூரம் பயணம் செய்தப்படி இந்தியா வந்துள்ளார். பயணத்தின்போது ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மிருகங்கள், அது வாழும் விதம் குறித்து ஆய்வு செய்தப்படி ,இதை குறும்படமாக தயாரிக்கும் வகையில் வீடியோவும் எடுத்து வருகிறார். ராமேஸ்வரம் செல்லும் வழியில் ராமநாதபுரம் வந்த ஜெர்மன் தம்பதியினர் கூறியதாவது: இந்தியாவின் கலாசாரம் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இங்குள்ள போக்குவரத்துதான் மிகவும் அபாயகரமாக உள்ளது. சாலையில் விதிமுறை மீறல் அதிகமாகவே காணப்படுகிறது. இந்தியாவை தொடர்ந்து ,நேபால், பாகிஸ்தான் வழியாக சென்று 2112 ஜனவரியில் பயணத்தை முடிக்க உள்ளோம். இந்த பயணத்தின் வாயிலாக பல தகவல்களை தெரிந்துள்ளோம். இதுகுறித்து தனி வெப்சைட் வெளியிட்டுள்ளோம், என்றார்.

No comments: