புதுடெல்லி,ஜன.1: இந்தியாவில் சமீபத்தில் பெய்த பருவ மழையை காரணங்காட்டி வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் உண்மையில் 2009 ஆம் ஆண்டை விட 2010 ஆம் ஆண்டு வெங்காயம் அதிகமாகவே உற்பத்திச் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
வெங்காயத்தின் விலை உயர்வதை கருத்தில் கொண்ட பெரிய வியாபார முதலைகள் வெங்காயத்தை பதுக்கி வைத்ததால் அதன் விலை உயர்ந்து சாதாரண மக்களின் வாழ்க்கை திண்டாட்டமானது. இதனைத் தொடர்ந்து அரசு வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை முழுமையாக ரத்துச் செய்ததோடு, ஏற்றுமதிக்கும் தடை விதித்தது. இதுதவிர தற்போது பாகிஸ்தானிலிருந்து அதிக அளவில் வெங்காயத்தை இறக்குமதிச் செய்ய ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வருகிற 7-ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து பல ஆயிரம் டன் வெங்காயம் இந்தியாவுக்கு இறக்குமதியாகவிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment