அஹ்மதாபாத்,ஜன.1:குஜராத் இனப்படுகொலையின் போது கோத்ராவுக்கு அருகிலுள்ள பந்தர்வாடாவில் முஸ்லிம்களை கூட்டுப்படுகொலைச் செய்து குழி தோண்டி புதைத்த சம்பவத்தை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர் ராகுல் சிங்கின் மீது வழக்குத் தொடர்ந்து அவரை தேடுகிறது குஜராத் மோடி அரசின் போலீஸ்.
ராகுல் சிங்கைத் தவிர மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டின் தலைமையில் குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸின்(சி.ஜெ.பி) முன்னாள் உறுப்பினர் ரயீஸ் கான் உட்பட ஐந்து நபர்கள் மீது குஜராத் போலீஸ் வழக்குத் தொடர்ந்துள்ளது.
ராகுல் சிங்கை விசாரிப்பதற்கான சம்மனுடன் குஜராத் போலீஸ் அவருடைய வீட்டிற்கு நான்கு வேன்களில் படையெடுத்தனர். இதனால் அந்த இடத்தின் சுற்றுப்புற சூழல் பரபரப்பானது. அந்த நேரத்தில் ராகுல் வீட்டில் இல்லை.பந்தர்வாடாவில் கூட்டுப்படுகொலைச் செய்து குழித்தோண்டி சம்பவத்தை செய்தியாக வெளியிட்டக் காரணத்தால் ராகுலிடம் விசாரணைச் செய்வதற்கு கைதுச் செய்ய வந்துள்ளதாக போலீஸ் அவருடைய வீட்டினரிடம் தெரிவித்தனர். ஆனால், ராகுலின் தந்தையும், ஹிந்துஸ்தான் டைம்ஸின் போபால் எடிசன் ரெஸிடண்ட் எடிட்டரான என்.கே.சிங் சம்மன்ஸை கைப்பற்றவில்லை. தேசிய மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களின் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து விசாரித்ததால் போலீசார் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
ராகுல் சஹாரா தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றிய வேளையில்தான் இச்சம்பவம் வெளியானது. அதன் பிறகு அவர் போபாலில் டைம்ஸ் நவ்வில் பணியாற்றினார். தற்பொழுது அவர் டெல்லியில் ஹெட்லைன் டுடேயில் பணியாற்றி வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படு கொலையின்போது பந்தர்வாடாவில் அநியாயமாக கொல்லப்பட்ட 27 முஸ்லிம்களின் உடல்களை லூனாவாதாவில் பனாம் நதிக் கரையில் பெரிய குழியைத் தோண்டி மொத்தமாக புதைத்தனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.
ஆனால், கடந்த 2005 ஆம் ஆண்டில் இனப்படு கொலையால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த நதிக் கரையில் மண்ணைத் தோண்டும் வேளையில் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களில் சிலர் இச்சம்பவத்தை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.தொடர்ந்து ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் அமைப்பு இவர்களுக்கு சட்ட உதவியை அளித்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment