
தெஹ்ரான், ஜன.10: ஈரானின் போயிங் 727 விமானம் வடமேற்கு நகரம் ஒன்றில் அவசரமாகத் தரையிறங்கும்போது மோசமான வானிலை காரணமாக கீழே விழுந்து சிதறியதில் அதில் பயணம் செய்த 72 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர். எதனால் அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது என்பது தெரிவிக்கப் படவில்லை. அந்த விமானம் ஒரு அசம்பாதவித்தை எதிர்கொள்ள நேரிட்டது என்று மட்டும் ஈரான் விமானப் போக்குவரத்துத் துறையின் செய்தித்தொடர்பாளர் அப்பாஸ் மொசயீபி தெரிவித்தார். இந்த விபத்தில் 2 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 35 பேர் உயிர் பிழைத்துள்ளனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் விமானத்தில் இருந்து நடந்து வெளியே வர முடிந்துள்ளது. சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அப்பாஸ் மொசயீபி தெரிவித்தார்.
No comments:
Post a Comment